Cyclone Fani Landfall affect : இன்றோ அல்லது நாளையோ ஃபனி புயலானது கரையைக் கடக்கலாம். ஆனால், அந்த கரையை நம்பி வாழும் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 கோடி ஆகும். மூன்று நான்கு நாட்களுக்கு மேலாக அதி தீவிரபுயலாக கரையை நோக்கி நகரும் இந்த புயல் காற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Cyclone Fani Landfall
கேட்டகிரி 3 என்று அட்லாண்டிக் அல்லது கிழக்கு பசுபிக் பெருங்கடலில் அழைக்கப்படும் புயல் சின்னத்திற்கு இணையான வேகத்தில் கரையை நெருங்குகிறது இந்த புயல். வியாழக்கிழமையன்று 213 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மிகப்பெரிய அளவிலான புயல் அபாயமாக ஃபனி உருமாறக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
புயல் நெருங்குவதைத் தொடர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கடற்கரையை ஒட்டி வாழ்பவர்களுக்கு மிகப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது ஃபனி.
கடற்கரை நகரங்களான காக்கிநாடா, விசாகப்பட்டினம், மற்றும் வங்கதேசம் எல்லைப்புறத்தில் கடல்நீர் கரையைத் தாண்டி ஊருக்குள் உட்புகலாம் என்றும் அதனால் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்பின் அபாயங்களும் இருப்பதாக கூறியுள்ளனர்.
கனமழைக்கு வாய்ப்பு
ப்ரம்மப்பூர் முதல் பூரி வரையில், இந்த புயலால் நேரடி பாதிப்புகளும், மழையும், காற்றின் தாக்கத்தாலும் அதிக பாதிப்புகள் ஏற்படலாம். 210 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மிகப்பெரிய சேதாரத்தை சந்திக்க காத்திருக்கின்றன இந்த ஐந்து மாநிலங்களும்.
புயலின் தாக்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குறையத்துவங்கும் என்பதால், கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு பெரிய சேதாரம் இருக்காது. இருப்பினும் மழை மற்றும் காற்றின் தாக்கம் அதிகரிக்கும். 150 எம்.எம் முதல் 300 எம்.எம். வரையிலான மழை ஆந்திரா, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கத்தில் பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : ஃபனி புயல் தொடர்பான அனைத்து லேட்டஸ்ட் செய்திகளை அறிந்திட