Deepika Padukone was questioned about some words in chats : போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீபிகா படுகோனிடம், 2017ம் ஆண்டு அவரின் வாட்ஸ்ஆப்பில் இருந்து அனுப்பப்பட்ட சில குறுஞ்செய்திகள் குறித்து விசாரணை நடத்தினர். அவர் கூறிய பதில்களின் உண்மை தன்மையை ஆராய அவருடைய அழைபேசியை சோதனை செய்ய உள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையின் பேரில், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவருடைய மேலாளர் ஜெயா சாஹாவின் அலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதன்மையாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி யாரையும் கைது செய்யவில்லை.
தீபிகா, சாரா அலிகான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் இருந்து செல்போன்கள் பெறப்பட்டுள்ளது. சனிக்கிழமை அவர்கள் அளித்த தகவல்களுடன் இந்த போனில் உள்ள தரவுகள் சரியாக உள்ளதா என்பது சோதனை செய்யப்படும். முதன்மையாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் தீபிகா விசாரணை செய்யப்பட்டார். ஷ்ரத்தா மற்றும் சாரா அலிகான் இரண்டு எஃப்.ஐ.ஆர்கள் அடிப்படையில் விசாரிக்கப்பட்டனர்.
To read this article in English
தீபிகாவின் பதில்களில் முழுமையான திருப்தி இல்லை என்று கூறிய என்.சி.பி. அதிகாரிகள், தீபிகாவின் போனை ஆராய்ந்து, அவர் கூறிய சூழலில் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினாரா என்று ஆராய வேண்டும்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான சி.பி.ஐ விசாரணையானது, என்.சி.பியின் போதைப் பொருள் பயன்பாட்டு விசாரணையால் துரிதகதியில் நடைபெறாமல் இருக்கிறது என்று சுஷாந்த் குடும்பத்தினரின் வழக்கறிஞர் அதிருப்தி தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த சி.பி.ஐ. தங்களின் அறிக்கையில் “சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது. சுஷாந்தின் மரணத்திற்கான அனைத்து காரணங்களையும் நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். எந்த காரணத்தையும் நாங்கள் ஒதுக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளது.
ராஜ்புத்தின் குடும்பத்தின் வழக்கறிஞர் விகாஸ் சிங், போதைப்பொருள் வழக்கின் மீது அனைத்து கவனமும் திசை திருப்பப்படுவதாகவும், வழக்கு எந்த திசையில் செல்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாததால் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவதியுறுகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
சி.பி.ஐ மட்டுமின்றி அமலாக்கதுறையினரும் ரியா மீதும் அவரின் குடும்ப உறுப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து அடையாளாம் தெரியாத வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனைகள் சுஷாந்த் வங்கிக் கணக்கில் காணப்படவில்லை என்று கூறியுள்ளனர் அமலாக்கத்துறையினர்.
இதற்கிடையில், திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரை சிக்க வைக்க விசாரணைக்குழுவினரால் கட்டாயப்படுத்தப்பட்டதாக க்ஷிதிஜ் பிரசாத் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது என்.சி.பி.
சந்தேகத்திற்கு இடமின்றி மேற்கண்ட செய்தி முற்றிலும் பொய். என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் க்ஷிதிஜின் ஈடுபாடு தெரியவந்தபோது, உரிய நடைமுறைகளின் படி அவர் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கறிஞருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் (தாய்) முறையாக அது அறிவிக்கப்பட்டது. மும்பை மண்டல பிரிவு அலுவலகத்தில் அவரது மாமியார் மற்றும் மனைவியை சந்திக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு பிரசாத் ஒத்துழைக்கவில்லை என்று என்.சி.பி அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.