Advertisment

சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு

சோனியா காந்தியின் தனிச் செயலாளர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு; அரசியல் பழிவாங்கல் என 71 வயதான மாதவன் அறிக்கை

author-image
WebDesk
New Update
சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு

Delhi: 71-year-old personal secretary of Sonia Gandhi booked on rape charges: பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 71 வயதான பிபி மாதவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது நடவடிக்கை இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

துவாரகா டிசிபி ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “71 வயது நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் மூத்த அரசியல் தலைவரிடம் தனிப்பட்ட செயலாளராக ஆக பணியாற்றி வருகிறார். ஜூன் 25 அன்று ஒரு புகார் பெறப்பட்டது. ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

மாதவன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்துவதற்கான ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது. அதில் உண்மை இல்லை. இது ஒரு முழுமையான சதி” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: 1-ம் வகுப்பு முதல் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்; குஜராத் அரசை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்

போலிஸாரின் கூற்றுப்படி, வேலை வாங்கித் தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி மாதவன் தன்னை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாக பெண் புகார் அளித்துள்ளார் என்று கூறுகின்றனர்.

2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது கணவரை இழந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பிபி.மாதவனைச் சந்தித்ததாக அந்த பெண் கூறினார். அவரது கணவர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அதன் அடிப்படையில், வேலை தேடி காங்கிரஸ் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வேன் என்று அந்தப் பெண் கூறினார்.

“எனது பொருளாதார நிலை சரியில்லை, நான் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்றேன், அங்கு சோனியா காந்தியின் உதவியாளர் பிபி மாதவனின் தொலைப்பேசி எண்ணைப் பெற்றேன். எனக்கு வேலை தேவை என்று நான் அவரிடம் சொன்னேன், அவர் எனக்கு உதவுவதாக உறுதியளித்தார்… ஜனவரி 21 அன்று (இந்த ஆண்டு), அவர் என்னை ஒரு நேர்காணலுக்கு அழைத்தார். அவர் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார் மற்றும் எனது எல்லா ஆவணங்களையும் பார்த்தார்… பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். நான் சரி என்றேன்... ஒரு நாள், அவர் என்னை சந்திக்க அழைத்தார்... அவர் என்னை ஒரு காரில் ஏற்றிச் செல்ல வந்தார்... அவர் தனது டிரைவரிடம் காரை விட்டு வெளியேறும்படி கூறினார். அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதை நான் எதிர்த்தபோது, ​​அவர் கோபமடைந்து என்னை சாலையில் தனியாக விட்டுவிட்டார், ”என்று அந்த பெண் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மாதவன் பின்னர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அவர்கள் மீண்டும் பேச ஆரம்பித்ததாகவும் புகார்தாரான அந்தப் பெண் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த பெண்ணை மாதவன் சந்திக்க அழைத்துள்ளார்.

"பிப்ரவரியில், அவர் என்னை சந்திக்க அழைத்தார்... (மற்றும்) என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர், அவரது மனைவி எனது மொபைல் எண்ணைப் பார்த்ததாகச் சொன்னார்... இதையெல்லாம் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அவருடைய மனைவியைப் பற்றி அவரிடம் கேட்டேன், ஆனால் அவர் என்னைப் புறக்கணித்துக்கொண்டே இருந்தார்... பிறகு அவர் என்னை வேறொருவருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன்... அவர்கள் (கட்சி) 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருவதாகவும், என்னை கடத்திவிடுவதாகவும் அவர் என்னை மிரட்டினார். நான் பயந்தேன்,” என்று எஃப்.ஐ.ஆரில் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண் ஜூன் 25 அன்று புகார் அளித்ததாகவும், மருத்துவ பரிசோதனைக்காக DDU மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரது வாக்குமூலம் மற்றும் விசாரணையின் அடிப்படையில் மாதவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் சில ஊடகங்களில் என் மீது புகார் அளிக்கப்பட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுவது எனக்குத் தெரிய வந்தது. காங்கிரஸ் தொண்டர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் என் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதும், அவருக்கு நான் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதை ஊடகங்களில் இருந்துதான் நான் அறிந்தேன். 25.6.2022 அன்று ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலரிடம் ஆஜராகி விளக்கத்தை அளித்த பிறகு, அவர்கள் என்னை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

“அரசியல் பழிவாங்கலைத் தீர்ப்பதற்காக முன் கூட்டியே ஜோடிக்கபட்ட இந்தப் புகார் தகுதியற்றது என்பதை நிரூபிக்கவும், நிறுவவும் என்னிடம் ஆதாரம் உள்ளது. புகார்தாரரும் அவருக்குப் பின்னால் உள்ளவர்களும் எனக்கு எதிராக நடத்தும் அவதூறு பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன், மேலும் சமூகத்திற்கு நான் செய்த சேவைக்காக அறியப்பட்ட 71 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதனின் உருவத்தை இழிவுபடுத்தும் வகையில் குறுகிய மனங்களால் இந்தக் குற்றச்சாட்டுகள் தூண்டப்பட்டதாகத் தோன்றுகிறது.”

மேலும், “ஊடக அறிக்கைகளின்படி, என் மீதான குற்றச்சாட்டுகள் பிப்ரவரி 2022 இல் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகின்றன, இது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது. எஃப்.ஐ.ஆர் என்னை இழிவுபடுத்தவும் எனது நீண்ட மற்றும் நேர்மையான வாழ்க்கையின் மீது அவதூறுகளை ஏற்படுத்தவும் மட்டுமே நோக்கமாக உள்ளது என்பதை இதுவே காட்டுகிறது. எனக்கு எதிராகக் கூறப்படும் எஃப்.ஐ.ஆரை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுவதற்கும், எனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள தவறான மற்றும் தீங்கிழைக்கும் புகாருக்கு எதிராக கிடைக்கக்கூடிய சட்டப்பூர்வ தீர்வுகளைப் பெறுவதற்கும் எனது உரிமைகளை நான் வைத்திருக்கிறேன்... 47 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தில் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இன்றுவரை எனது நற்பெயருக்கு ஒரு களங்கம் கூட ஏற்படவில்லை.” என்றும் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sonia Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment