மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படலாம் ; தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் ஐ.சி.யூ படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர்களுக்கு ஜூலை 9 முதல் பற்றாக்குறை ஏற்படும் - அமைச்சரவை செயலாளர் எச்சரிக்கை

By: Updated: June 12, 2020, 12:46:59 PM

 Dipankar Ghose

Delhi and Maharashtra among five states that may face a shortfall in critical COVID19 care :  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் தொற்று துவங்கி தொடர்ந்து அதிகரித்து வரும் டெஸ்ட்கள், மருத்துவ வசதிகள் பற்றாக்குறை வரை இந்தியாவின் நிலைமையை உணர்ந்த மத்திய அரசு கொரோனாவுக்கு எதிரான எச்சரிக்கை நடவடிக்கைகளை வியாழக்கிழமை அதிகப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் நிலையானதாக இருக்கிறது என்றாலும் 69 மாவட்டங்களில் அதிகப்படியான சி.எஃப்.ஆர். Case Fatality Rate (CFR) பதிவாகியுள்ளது.

மகாராஷ்ட்ரா, தமிழகம், டெல்லி, குஜராத், மற்றும் உத்திர பிரதேசம் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு. தற்போது இருக்கும் நிலவரத்தை உணர்ந்த மத்திய அரசு, வருங்காலத்தில் (ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) இம்மாநிலங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவைக்கு பற்றாக்குறை ஏற்படும் என அறிவித்துள்ளது.

To read this article in English

தொடர்ந்து அதிகரித்து வரும் கேஸ்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை குறித்து ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பாஜகவுடனும், மத்திய அரசுடனும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஜூன் மூன்றாம் தேதியில் இருந்து ஐ.சி.யூ, படுக்கை வசதிகள், ஜூன் 12ல் இருந்து வெண்டிலேட்டர் வசதிகள் மற்றும் ஆக்ஸிஜனுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் ஜூன் 25ம் தேதியில் இருந்தும் பற்றாக்குறையாகும் என்று கணிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கேபினட் செயலாளர் ராஜீவ் கௌபா மாநில தலைமை செயலாளர்கள், மற்றும் சுகாதார செயலாளர்களுடன் நடத்திய வீடியோ கான்ஃப்ரென்ஸ் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் ஐ.சி.யூ படுக்கைகளுக்கு ஆகஸ்ட் 8ல் இருந்து பற்றாக்குறை ஏற்படும் என்றும், வெண்டிலேட்டர்களுக்கு ஜூலை 27ல் இருந்தே பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஐ.சி.யூ படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர்களுக்கு ஜூலை 9 முதல் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஜூலை 21ம் தேதியில் இருந்து ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஹரியானா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கும் இதே போன்று கணிப்புகள் அன்று வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க : இது போன்ற ஆபத்தான நேரத்தில் உதவும் நண்பன்: ‘கூகுள் மேப்’ வெறும் விளையாட்டு அல்ல!

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான படுக்கை வசதிகளை முன் திட்டமிடல் மூலமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அம்மாநிலங்களுக்கு வழியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அமைப்பை மேம்படுத்த ஒரு திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குருகிராம், மும்பை, தானே, பல்கார், ஜல்கௌன், சென்னை மற்றும் கௌதம் புத் நகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இந்த கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டங்களில் வருகின்ற ஒரு மாதத்தில் மருத்துவசேவை பற்றாக்குறை உருவாக வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் இறப்பு விகிதத்தில் சிறப்பு கவனம் செலுத்த இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. (நோய் எண்ணிக்கைகளின் இரட்டிப்பு விகிதம் 16.9 நாட்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு 14.1 இருந்தது) அதே போன்று இறப்பு விகிதமும் கணக்கில் கொள்ளப்பட்டது. நூறு நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் அதில் 2.9%-ஆக இறப்பு விகிதம் உள்ளது. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு அது 2.96 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் கொரோனா உறுதிப்படுத்தல் விகிதம் (confirmation rate) அதிகமாகியுள்ளதையும் உறுதி செய்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு 4.87%மாக இருந்த உறுதிப்படுத்துதல் விகிதம் தற்போது 5.7% ஆக உள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்துதல் விகிதம் 10% ஆக உயர்ந்துள்ளது (ஜூன் 9ம் தேதி நிலவரப்படி)

உறுதிப்படுத்துதல் விகித உயர்வு என்பது அதிகப்படியான நோய் பரவல் அல்லது குறைவான டெஸ்ட்கள் நடத்தப்பட்டதை குறிப்பிடுகிறது. தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, மற்றும் டெல்லியில் உறுதிப்படுத்துதல் விகிதம் என்பது 10% ஆக உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பை மற்றும் தானே, தமிழகத்தின் சென்னை போன்ற மாவட்டங்களில் உறுதிப்படுத்துதல் விகிதமானது 20%-ஐ எட்டியுள்ளது. மேலும் பல்கார் (மகாராஷ்ட்ரா), மெத்ச்சல் – மல்கஜ்கிரி (தெலுங்கானா), ஹோஜாய் (அசாம்) போன்ற ஊரக பகுதிகளிலும் கொரோனா உறுதிப்படுத்தல் விகிதம் 20%-ஐ எட்டியுள்ளது என்று மத்திய அரசு இந்த ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

13 மாநிலங்களில் இருக்கும் 69 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதமானது 5% வரை உள்ளது. அந்த 69 மாவட்டங்களில் 51 மாவட்டங்கள் மத்திய பிரதேசம்(21), உத்திர பிரதேசம் (11), மகாராஷ்ட்ரா(10), மற்றும் குஜராத் (9) மாநிலங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கேஸ்கள் மற்றும் இறப்பு விகிதங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தான் இந்தியாவின் மொத்த கொரோனா கேஸ்களில் 76%-த்தை பதிவு செய்துள்ளது. 82% இறப்புகள் மகாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 30 எபிசெண்டர் மாவட்டங்கள் குறித்தும் கேபினட் செயலாளர் பேசினார். இவைகள் தான் இந்தியாவில் ஆக்டிவாக இருக்கும் 72% கொரோனா கேஸ்களை கொண்டுள்ள இடங்கள் என்று குறிப்பிட்ட அவர் இந்த பகுதிகளுக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

அதிகமான எபிசெண்டர்கள் நகர்புறங்களில் தான் இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 மாவட்டங்கள் டெல்லி, மகாராஷ்ட்ரா, தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இறப்பு விகிதத்தை குறைப்பது குறித்து தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது மத்திய அரசு. மேலும் இரண்டு சோதனைகளுக்கு இடையேயான இடைவெளி எந்தெந்த காரணங்களால் சவால் மிகுந்ததாக இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் இரண்டு முக்கியமான விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முதலில் இந்த நோய் கிழக்கு நோக்கி பரவுதலும், புதிய மாவட்டங்களில் நோய் தொற்று ஏற்படுதலும் இரண்டாவது மே 18ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அதிகரிக்கும் நோய் தொற்றின் தீவிரம். கடந்த 3 வாரங்களில் 98 மாவட்டங்களில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டங்களில் இந்த நோய் தொற்று அதிகமாக உள்ளது. 53 மாவட்டங்கள் இந்த மாநிலங்களை சேர்ந்தவை தான். சத்தீஸ்கர், ஒடிஷா, மேற்கு வங்கத்தில் உள்ள 25 மாவட்டங்களுக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கவனம் செலுத்தப்பட வேண்டிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் (400க்கும் அதிகமாக கொரோனா நோய் தொற்று இருக்கும் மாவட்டங்களில்) 50% நோய் தொற்றுகள் மே 18ம் தேதிக்கு பிறகு தான் ஏற்பட்டது. மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தமிழ் நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்களில் தான் இத்தகைய பாதிப்புகள் உருவானது. குருகிராம், உடுப்பி, யதிர், கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் 400க்கும் அதிகமான கொரோனா நோய் தொற்று மே 18ம் தேதிக்கு பிறகு தான் உருவானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

அமைச்சரவை செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட செயல் திட்டத்தில் கட்டுப்பாடு, சோதனை, தடமறிதல் மற்றும் சுகாதார அமைப்பு மேம்பாடு ஆகியவையும் அடங்கும். “அடுத்த இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் மருத்துவமனை திறனை உறுதி செய்ய வேண்டும். படுக்கை திறன் மற்றும் HR – உடன் கூடிய வசதிகளை (எ.கா. பல்ஸ் ஆக்ஸிமீட்டர்) உறுதிப்படுத்த வேண்டும்.

சுகாதார அமைப்பின் சுமையை குறைக்க நிறுவன தனிமைப்படுத்தல் (Institutional quarantine/isolation) அதிகரிக்க வேண்டும் என்றும் நிறுவன திறனை அதிகரிக்க வேண்டும். ஹோட்டல்கள் மற்றும் அரங்கங்களில் குவாரண்டைன் வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

இறப்பு தணிப்பு குறித்து குறிப்பிடும் போது “தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயலில் கண்காணிப்பு / சோதனைகளை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அதிகப்படுத்துதலின் மூலம் அதிக ஆபத்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இயலும் என்று கூறப்பட்டுள்ளது.

குறைவான இறப்பு விகிதத்தை உறுதி செய்வதற்கான சிகிச்சை முயற்சிகள், எடுத்துக்காட்டாக, நோயுற்ற / வயதான நோயாளிகளுக்கு முதல் உரிமை கொடுத்து மருத்துவமனையில் அனுமதிப்பது, அறிகுறிகளின் விரிவாக்கம் குறித்த சரியான நேரத்தில் பரிந்துரைகள், சிறப்பான மையங்கள் வழியாக மருத்துவ நடைமுறையை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நெருக்கடி காலத்தில் இலவச சமையல் கேஸ்: உஜ்வாலா திட்டம் குறித்து அறிந்தீர்களா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Delhi and maharashtra among five states that may face shortfall in critical covid care

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X