Delhi Chief minister Arvind Kejriwal gives Cheque for Rs 1 crore to the kin of deceased doctor : கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் அதனை தடுக்கும் முயற்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் மருத்துவத்துறையினர். முன்களப்பணியாளர்களின் தியாகமும் உழைப்பும் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
Met with the family of Late Dr Aseem Gupta ji who lost his life to Corona.
We cannot do anything to bring back the "People's Doctor", but it is our duty to support families of those who lay down their lives for us.
An ex gratia of ₹1 crore was given to the family today. pic.twitter.com/YlYCKZ9siy
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 3, 2020
1ம் தேதி தேசிய மருத்துவ தினத்தினை ஒட்டி ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து அறிவித்திருந்தார் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. கொரோனா நோய் தாக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லி அரசு முயற்சி செய்தது.
மேலும் படிக்க : மருத்துவர்கள் தினத்தன்று மகத்தான சேவையை துவங்கி வைத்த ஜெகன்! மக்கள் மகிழ்ச்சி
மேலும் இந்த வேலையின் போது முன்களப்பணியாளர்கள் மரணிக்கும் சூழல் வந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் அமைந்திருக்கும் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து பிரிவில் பணியாற்றி வந்த அசீம் குப்தா கொரோனா நோய்க்கு ஆளானார்.
அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடிக்கான காசோலையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று வழங்கினார். மூன்று மாதங்களுக்கு முன்பே லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் அரசு மருத்துவமனை கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.