Delhi Gang Rape : டிசம்பர் 16, 2012 கூட்டு பலாத்கார, கொலை வழக்கின் நான்கு குற்றவாளிகளும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர். மறுபரிசீலனை செய்யக்கோரிய அவர்களின் மனுக்களை உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் ஆகியவை நேற்று நள்ளிரவு தள்ளுபடி செய்தன.
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து மருத்துவ மாணவி, முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவர்கள் நால்வரும் இன்று தூக்கிலிடப்பட்டனர். தெற்காசியாவின் மிகப்பெரிய சிறை வளாகமான திஹார் சிறையில் 16,000 கைதிகள் வசிக்கிறார்கள். நான்கு ஆண்கள் ஒன்றாக தூக்கிலிடப்படுவது இதுவே முதல் முறை.
நிர்பயா கூட்டு பாலியல் வழக்கு: 8 வருடம் கடந்து வந்த பாதை
குற்றவாளிகளைப் பற்றி சுருக்கமாக இங்கே குறிப்பிடுகிறோம்.
1.அக்ஷய் குமார் சிங் (31)
பீகாரின் நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டமான அவுரங்காபாத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங், பஸ்ஸில் உதவியாளராக இருந்தார். இறந்த ராம் சிங் குற்றம் நடந்த நேரத்தில் பஸ்ஸை ஓட்டினார். (ராம் சிங் 2013 மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது). அக்ஷய் ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறினார். டிசம்பர் 21, 2012 அன்று சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு திருமணமாகி எட்டு வயது மகன் உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவில், பரவலான மாசுபாட்டின் காரணமாக தலைநகரில் மனிதர்களின் ஆயுட்காலம், சராசரியை விட குறைவாக உள்ளது என்ற அடிப்படையில் கருணை கோரினார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
2.முகேஷ் சிங் (32)
பஸ் டிரைவர் ராம் சிங்கின் தம்பி தான் முகேஷ். அவ்வப்போது ஓட்டுநராக இருந்த அவர், ரவி தாஸ் பகுதியில் வசித்து வந்தார். ராஜஸ்தானில் டிசம்பர் 18, 2012 அன்று கைது செய்யப்பட்ட பின்னர், முகேஷ் தனது அறிக்கையில் குற்றமற்றவர் என்றும், குற்றம் நடந்த நேரத்தில் தான் பேருந்தை ஓட்டி வந்ததாகவும் கூறினார்.
பிபிசி 2015 ஆம் ஆண்டில் ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியபோது, “ஒரு கண்ணியமான பெண் இரவு 9 மணிக்கு சுற்றித் திரிவதில்லை” என்றார் முகேஷ்.
3.ராம் சிங்
இந்த வழக்கு விசாரணை தொடங்கிய சில நாட்களில், திகார் சிறையில் முகேஷ் சிங்கின் மூத்த சகோதரரான ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மார்ச் 2013-ல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞரும் குடும்பத்தினரும் கூறினர். குற்றம் நடந்த பஸ்ஸின் டிரைவர் அவர்தான். குற்றம் நடந்தபோது சிங்கின் வயது 23.
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – கடைசி நேர திக் திக்..
4.பவன் குப்தா
19 வயதான பழ விற்பனையாளர் பவனும், அவரது தந்தை இருவரும் இந்த குற்றத்தில் தனக்கு சம்பந்தமில்லை என்றனர். அவர் நிரபராதி என்று பவனின் தந்தை கூறுகிறார். குற்றம் நடந்த நேரத்தில் தான் பேருந்தில் இல்லை என்று பவன் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
5.வினய் ஷர்மா (26)
ஜிம் பயிற்றுவிப்பாளரான சர்மா பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது நண்பரிடம் இருந்தவற்றை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 18, 2012 அன்று, ராஜஸ்தானில் உள்ள கரோலி கிராமத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், குற்றம் நடந்த நேரத்தில் தான் பேருந்தில் இல்லை என்று வினய் கூறியிருந்தார், ஆனால் பின்னர் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
6.சிறுவன்
குற்றத்தின் போது அந்த சிறுவன் 17 வயதாக இருந்தான். மைனராக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். ஆகஸ்ட் 31 ம் தேதி அவன், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். 2015-ஆம் ஆண்டில் அவன் மறுவாழ்வு இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்ட போது, பரவலான எதிர்ப்புக்கள் எழுந்தன.
இதனை ஆங்கிலத்தில் படிக்க - Delhi Gang Rape Convicts Hanged to Death
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.