Advertisment

'ஜெய் ஸ்ரீராம் சொல்லு’ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளரை தாக்கிய சிஏஏ ஆதரவாளர்கள்

"உங்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றது: உங்கள் தொலைபேசியா அல்லது வாழ்க்கையா?" நான் எனது தொலைபேசியைக் அவர்களிடம் கொடுத்தேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெல்லியில் எதிர்கட்சிகள் பயம் காட்டி, பாஜகவை சாடி, மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்...

Delhi Violence : டெல்லியில் நடந்த கலவரத்தில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையாளர் சிவ்நாராயண் ராஜ்புரோஹித் தாக்கப்பட்டார்.

Advertisment

டெல்லி கலவரம்: துணை ஆணையருடன் ஆலோசனை நடத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

”மதியம் 1 மணியளவில், வடகிழக்கு டெல்லி மேற்கு கரவால் நகரில் ஒரு சாலையின் நடுவிலுள்ள, பேக்கரி கடையில் மொபைல் எண்ணை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

அப்போது, 40 வயதில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து “நீங்கள் யார்? இங்கே என்ன செய்கிறீர்கள்?" என்றுக் கேட்டார். என்னை ஒரு பத்திரிகையாளராக அறிமுகப்படுத்திக் கொண்டேன். "உங்கள் நோட்புக்கை கொடுங்கள்" என்று வாங்கிக் கொண்டார். சில தொலைபேசி எண்கள் மற்றும் எனது அப்சர்வேஷன் லொகேசனைத் தவிர சந்தேகத்திற்குரிய எதுவும் அதில் இருக்கவில்லை. "நீங்கள் இங்கிருந்து ரிப்போர்ட் பண்ண முடியாது," என்ற அந்த நபர், என் நோட்புக்கை பேக்கரி அடுப்பில் போட்டு விடுவேன் என மிரட்டினார்.

இதற்கிடையில், சுமார் 50 பேர் கொண்ட ஒரு குழு என்னைச் சூழ்ந்தது, எனது தொலைபேசியைச் சரிபார்ப்பதற்காக கூச்சல் அதிகரித்தது. ஏனெனில் நான் வன்முறையின் புகைப்படங்களைக் கிளிக் செய்தேன் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். எனது சமீபத்திய படங்களை செக் செய்த அவர்களுக்கு வன்முறை தொடர்பான எந்த படமும், வீடியோவும் கிடைக்கவில்லை. ஆனால் தொலைபேசியை என்னிடம் திருப்பித் தருவதற்கு முன்பு, ”நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?" “நீங்கள் ஜே.என்.யுவிலிருந்து வந்தவரா?” என்று கேட்டார்கள். உங்கள் வாழ்க்கை முக்கியம் என நினைத்தால், உடனே இங்கிருந்து வெளியேறுங்கள் என கேட்டுக் கொண்டார்கள்.

நான் அந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த என் பைக்கை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

எனது பைக் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சந்துக்குள் நான் நுழைந்தபோது, லத்தி, இரும்பு கம்பிகள்  மற்றும் ஆயுதங்களுடன் மற்றொரு குழு என்னை சுற்றி வளைத்தது. நான் ஃபோட்டோ எடுத்ததாக மீண்டும் சில நபர்கள் என் மீது குற்றம் சாட்டினர். ஒரு இளைஞன், முகத்தை மூடிக்கொண்டு, என் தொலைபேசியை ஒப்படைக்க சொன்னான். எல்லா புகைப்படங்களும் நீக்கப்பட்டதாக நான் தயக்கத்துடன் சொன்னேன். அவன் மீண்டும் ஃபோனை தரும்படி கத்தினான். பின்னர் என் பின்னால் வந்து இரும்பு கம்பியால் இரண்டு முறை என் தொடையில் அடித்தான். அது என்னை ஒரு கணம் நிலையற்றதாக ஆக்கியது. "உங்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றது: உங்கள் தொலைபேசியா அல்லது வாழ்க்கையா?" நான் எனது தொலைபேசியைக் அவர்களிடம் கொடுத்தேன். அதை வாங்கிய அவர்கள் உற்சாகத்துடன் கூட்டத்துக்குள் ஓடி மறைந்தனர்.

மற்றொரு கும்பல் என்னைப் பின்தொடரும் வரை நான் சிறிது நேரம் காப்பாற்றப்பட்டேன். 50 வயதுகளில் இருக்கும் ஒருவர் எனது கண்ணாடியை அகற்றி, ”இந்து ஆதிக்கம் நிறைந்த பகுதியிலிருந்து ரிப்போர்ட் செய்ததற்காக" என்னை இரண்டு முறை அறைந்தார். அவர்கள் எனது பிரஸ் கார்டை பார்த்தனர். “சிவ்நாராயண் ராஜ்புரோஹித், ம்ம். இந்து வா? இருப்பினும் அவர்கள் திருப்தி அடையவில்லை. நான் ஒரு இந்து என்பதை நம்ப மேலும் ஆதாரத்தை எதிர்பார்த்தனர். ”ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு” என்று கூற, நான் அமைதியாக இருந்தேன்.

டில்லி அல் இந்த் மருத்துவமனையிலிருந்து காயமடைந்தவர்களை வெளியேற்ற உத்தரவு : டில்லி நீதிமன்றம்

உயிர் முக்கியம் என்ரால் அங்கிருந்து ஓடும்படி அவர்கள் கட்டளையிட்டார்கள். "ஏக் அவுர் பீத் ஆ ரஹி ஹை ஆப்கே லியே (மற்றொரு கூட்டம் உங்களுக்காக வருகிறது)," என அவர்களில் ஒருவர் கூறினார். நான் நடுங்கி போய், என் பைக்கை ஸ்டார்ட் செய்ய முனைந்தேன். ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றதாக இருந்தது. “சீக்கிரம். அவர்கள் இங்கிருந்து கிளம்ப மாட்டார்கள்” என்று கூட்டத்திலிருந்து வந்த ஒருவர் கூறினார். இறுதியாக, நான் சாவியைக் கண்டுபிடித்து, பாதுகாப்பை கருதி புஷ்தா சாலையின் வழியே, தெரியாத பாதைகள் மூலம் கண்மூடித்தனமாக புறப்பட்டேன்” என அங்கு தனக்கு நேர்ந்த வன்முறை குறித்து குறிப்பிடுகிறார் நமது டெல்லி செய்தியாளர் சிவ்நாரயண் புரோஹித்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க - The Indian Express journalist’s account from Karawal Nagar: ‘Hindu ho? Bach gaye

Delhi Indian Express
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment