டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றது. இதில் பலர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிறைய வழிபாட்டுத் தலங்களும் நொறுக்கப்பட்டன. கலவரத்தின் போது மூன்று மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டது. டெல்லியின் பழைய முஸ்தஃபாபாத்தின் பாபு நகரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு எந்தவிதமான சேதாரமும் வரக்கூடாது என இரண்டு மதத்தினரும் இரவும் பகலும் பாதுகாத்து வருகின்றனர்.
டெல்லி பல்கலைகழத்தில் பி.ஏ. படிக்கும் முகமது ஹசீன் (24) என்பவரும் இந்த கோவிலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். எந்த நேரத்திலும் வன்முறை கலவரங்களை எதிர் கொள்வதற்கு போதுமான அளவு பொதுமக்கள் இங்கே இருக்கின்றோம் என்றோம், எங்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது. எந்த காரணம் கொண்டும் அந்த ஒற்றுமையை நாங்கள் குலைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
நாங்கள் வெகு நாட்களாக இந்த பகுதியில் தான் வசித்து வருகின்றோம். இது போன்ற கலவரத்தை நாங்கள் ஒரு போதும் பார்த்ததே இல்லை. தற்போது மனித நேயத்தை பாதுகாப்பதே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எங்களின் மசூதிகள் அனைத்தும் தீக்கிறையாக்கப்பட்டது. கோவிலுக்கு எந்த விதமான பாதிப்பினையும் வர விடமாட்டோம் என்று கூறுகிறார் டீக்கடைகளுக்கு ஸ்நாக்ஸ் விற்றுக் கொண்டிருக்கும் கம்ருதீன்.
கோவிலுக்கு மிகவும் அருகிலேயே வசிக்கும் மக்கள், இரவு நேரங்களில் கோவிலுக்கு பாதிகாப்பினை தரும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் கூட எங்கள் பகுதிகளில் எந்த பிரச்சனையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம். இரண்டு தரப்பினரும் தங்களுக்குள் குழு ஒன்றை உருவாக்கி, கையில் லத்தியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலின் பாதுகாவலராக ரீனா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கூறிய போது 30 முதல் 35 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதி மக்களிடையே நல்ல ஒற்றுமை மேலோங்கியுள்ளது. அவசர கால கட்டங்களில் நான் சாவியை கூட அவர்களிடம் கொடுத்துவிடுவேன் என்று கூறுகிறார். பண்டிதர் இல்லாத நாட்களில் காலை மாலை என இரண்டு நேரங்களில் ரீனா கோவிலில் பூஜை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.