Denied ticket BJP leader accuses Kerala unit chief : பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அணியில் இடம் பெற்றிருந்த தலைவருக்கு பாஜக சார்பில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பாஜக உள்கட்சி விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மாநில பாஜக தலைமை சி.பி.ஐ(எம்) கட்சிக்கு உதவுவதாக குற்றம் சுமத்திய அவர், இந்நிலைமை சீராகவில்லை என்றால் இன்னும் 30 வருடத்திற்கு பாஜகவால் இங்கு வெற்றியே பெற முடியாது என்று கூறியுள்ளார்.
ஆர்கனைசர் வாராந்திர பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரும், முன்னாள் பாஜக அறிவுசார் பிரிவின் தலைவருமான ஆர். பாலஷங்கர், 50 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்-க்காகவும், பாஜகவிற்காகவும் உழைத்தவர், மாநில தலைமையின் முடிவினால் ஏமாற்றம் அடைந்ததாகவும் அவமதிக்கப்பட்டதாகவும் தன்னுடைய வருத்ததை கூறியுள்ளார். செங்கன்னூர் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
வெற்றி பெறும் சாதகம் தான் வேட்பாளர்களை முடிவு செய்கிறது என்று கட்சி கூறுகிறது. ஆனால் ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்கள், நாயர் சர்வீஸ் சொசைட்டி, மற்றும் எஸ்.என்.டி.பி. மற்றும் இஸ்லாமியர்களின் ஒரு பகுதியை சமாளிக்கும் வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை என்று பாலஷங்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும் படிக்க : கேரள கிறித்துவர்களின் வாக்குகள் யாருக்கு?
பாஜக மாநில தலைவர் கே. சுரேந்திரன் மத்திய அமைச்சர் வீ. முரளிதரனுடன் இணைந்து தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற கூடாது என்பதில் தெளிவாக உள்ளது பாஜக. மேலும் அவர்கள் சிபிஐ(எம்) கட்சிக்கு உதவ மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் தெளிவாக இருக்கிறது. நான் இந்த தொகுதிக்குள் நுழைந்ததும் அதிக கவலையுடன் காணப்பட்ட இப்பகுதி எம்.எல்.ஏ தான். பாஜக மாநில தலைவர் கொன்னி தொகுதிக்கு சமரசமாக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளார் என்று நான் சந்தேகிக்கின்றேன் என்றார் பாலஷங்கர். சுரேந்திரன் பத்தினம் திட்டா பகுதியில் போட்டியிடும் இரண்டாவது தொகுதி கொன்னியாகும்.
மேலும் படிக்க : கேரளாவில் பாஜகவுக்கு பிரசாரம் செய்கிறது சுங்கத்துறை – பினராயி விஜயன்
மத்திய பாஜக தலைமையை நான் குறை கூறவோ தாக்கவோ இல்லை என்பதை தெளிவுப்படுத்திய அவர் அக்கட்சியின் தேசிய ஊடக பிரிவில் இரண்டு முறை அங்கம் வகித்துள்ளார். அனைத்து தேசிய கட்சி தலைவர்களின் ஆசியையும் பெற்றுள்ளேன். நான் செங்கன்னூர் வருவதற்கு முன்பு அனைவரிடமும் இது குறித்து தெரிவித்தேன்.
கட்சியில் 50 வருடங்கள் பணியாற்றிய பிறகும், நான் கட்சியிடம் கேட்டது இது மட்டும் தான். ஆனால் எந்த மாதிரியான தாக்கத்தை பாஜக தன்னுடைய தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் தருகிறது என்பது இதில் உறுதியாகிறது. இந்நிலை தொடர்ந்தால் பாஜக அடுத்த 30 ஆண்டுகளிலும் கேரளாவில் எதையும் உருவாக்க முடியாது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil