நம்பி நாராயணன் வழக்கு: முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது மற்றும் விசாரணை தொடர்பாக முக்கிய தீர்ப்பினை நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. காவல்துறை நடத்திய விசாரணை மற்றும் கைது குறித்து அறிக்கை வெளியிட முன்னாள் நீதிபதி ஜெய்ன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டதோடு, நஷ்ட ஈடாக 50 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டது.
நம்பி நாராயணன் வழக்கு : கைது மற்றும் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர்
நம்பி நாராயணனை கைது செய்தவர்கள் அன்றைய கேரள டிஜிபி சிபி மேத்யூஸ் மற்றும் ஓய்வு பெற்ற எஸ்.பிகள் கேகே ஜோஷ்வா மற்றும் எஸ். விஜயன் ஆவார்கள். 1996ம் ஆண்டு, இஸ்ரோ ரகசிய ஆவணங்களை வெளியிட்டார் நம்பி என்ற வழக்கினை விசாரித்த சிபிஐ, மேத்யூஸ் மற்றும் இதர போலீஸ் ஆபிசர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது. போலீஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட கேரள தலைமைச் செயலாளர் அவர்கள் மீதான நடவடிக்கைகள் தேவையற்றது என்று குறிப்பிட்டார்.
தவறை சரி செய்து கொள்ளுமா கேரள அரசு?
2011ம் ஆண்டு உம்மன் சாண்டி ஆட்சியில் ”உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பையும் ஏற்காமல், சிபிஐயின் அறிவுரையையும் நிறைவேற்றாமல், அந்த காவலர்கள் மீது நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் விட்டுவிட்டனர்”.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆன பின்பு அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
Read More : யாரிந்த நம்பி நாராயணன்
நம்பி நாராயணன் மீது தொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரத்தையும் கைப்பற்றவோ, பணத்தினை மீட்கவோ மேத்யூஸ் தலைமையிலான குழுவினால் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பக்கம் பார்த்தால் கடந்த 30 வருட காவல்துறை பணியில் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டவர் மேத்யூஸ் என்று குறிப்பிடுகிறார்கள். சூரியநெல்லி பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை மிகவும் திறமையுடன் கையாண்டவர் மேத்யூஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1994ல் மாநிலப் புலனாய்வுத்துறையில் சர்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் விஜயன். மரியம் ரஷீதா மற்றும் பௌசியா ஹாசன் என்ற மாலத்தீவுகளை சேர்ந்த பெண்களின் விசா காலத்தினை நீட்டிப்பது தொடர்பாக எழுந்த விசாரணையின் நீட்சிதான் நம்பி நாராயணனின் கைது.
ஜோஷ்வா என்ற மற்றொரு காவல்துறை அதிகாரி “மாலத்தீவு பெண்கள் இருவர் இந்தியாவின் முக்கிய ரகசியங்களை கைப்பற்றி செல்ல வந்தவர்கள் என்று ரெக்கார்ட்களில் பதிவு செய்திருக்கிறார் ஆனால் என்ன ரகசியங்கள் அவை என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை.
Read More : நம்பி நாராயணனுக்கு நஷ்ட ஈடாக 50 லட்சம் அளிக்க உத்தரவு
சிபிஐ விசாரணையில் நாராயணன் நம்பி கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்ரவதைகளுக்கு ஆளானார் என்பதை கண்டறிந்தது. இது தொடர்பான ரெக்கார்டுகள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் காவல்துறை மறைத்துவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.