Avinash Nair
Donald Trump Gujarat visit : வருகின்ற பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வருகிறார் அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் ட்ரெம்ப். நமஸ்தே ட்ரெம்ப் என்ற பெயரில் நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் குஜராத் செல்கிறார். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் துவங்கி மொத்தேரா மைதானம் வரை அவர் காரில் செல்கிறார். அங்கிருக்கும் சேரி குடியிருப்புகள் அவர் பார்வைக்கு தெரியாத வண்ணம் சுவர்கள் கட்டி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சரணியாவாஸ் அல்லது தேவ் சரண் சேரி என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் வாழும் மக்களை வெளியேறக் கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேசன். 45 குடும்பங்களுக்கு இதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் கட்டிடத் தொழிலாளர்களாக உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Donald Trump Gujarat visit
மேலும் படிக்க : அடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு! என் புத்திய…
ஆனால் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேசன் வெளியிட்ட அறிக்கையில் இவர்கள் தங்கியிருக்கும் பகுதி அகமதாபாத் கார்ப்பரேசனுக்கு உரியது என்றும், அதனை இப்பகுதி மக்கள் ஆக்கரமிப்பு செய்து தங்கியிருக்கின்றனர். எனவே இந்த பகுதியில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் மேல் முறையீடு செய்ய விரும்பினால் புதன் கிழமை கார்ப்பரேசன் அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏ.எம்.சி. அலுவலகத்தில் பணிபுரியும் துணை டி.டி.ஓ கிஷோர் வர்ணா கூறுகையில் இந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க அதிபர் வருகைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த நிகழ்வினை பயன்படுத்தி சிலர் ஆதாயம் அடைய நினைக்கின்றார்கள் என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"