ட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு!

Donald Trump India Visit Gujarat civic body builds wall : அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி முக்கிய ஏற்பாடுகளை மேற்கொள்ள 16 கமிட்டிகள்...

Ritu Sharma

Donald Trump India Visit Gujarat civic body builds wall : அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (AMC), இந்திரா பாலத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வரை உள்ள பகுதியில் சாலையுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிபர் இந்தியா வருகை புரிய உள்ளார். வருகின்ற 24 மற்றும் 25 தேதிகளில் இந்திய வரும் டொனால்ட் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள அகமதாபத்தினை பார்வையிட உள்ளார். அவரின் பார்வையில் இருந்து சேரி மற்றும் குடிசை குடியிருப்பு பகுதிகளை மறைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

காந்திநகரில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் சாலையில் அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் 6 முதல் 8 அடி உயரத்திற்கு இந்த சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சுவர் இந்த பகுதிகளில் இருக்கும் சேரி குடியிருப்பை மறைக்கவே கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமானம் முடிந்த பிறகு இங்கே செடிகள் வைக்கப்படும் என்று பெயர் கூற விரும்பாத ஏ.எம்.சி அதிகாரி உருவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : டெல்லிக்கு நிகராக பெயரெடுத்த சென்னை! வெக்கப்படனும் சென்னை மக்களே!

600 மீட்டர் வரை சுவர் எழுப்பப்படும் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தேவ் சரன் அல்லது சரணியாவாஸ் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் இம்மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சபர்மதி ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் முழுமையாக வளர்ந்த பேரிச்சை மரங்களை நடவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவும் அவருடைய மனைவி அக்கி அபேவும் 2017ம் ஆண்டு இந்தியா- ஜப்பான் வருடாந்திர சந்திப்பிற்கு வந்த போது இதே போன்று குஜராத்தில் அழகாக்கும் பணிகள் நடைபெற்றது. பின்பு குஜராத் மாநாட்டின் போதும் இது போன்ற பணிகள் நடைபெற்றது.

புதன்கிழமையன்று (12/02/2020) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் வெளியிட்ட வீடியோவில் “விமான நிலையத்தில் இருந்து மொதேரா மைதானம் வரையில் சுமார் 5 முதல் 7 மில்லியன் மக்கள் வசித்துவருகிறார்கள்” என மோடி கூறியதாக அறிவித்தார். ஆனால் மொத்த அகமதாபாத்தின் மக்கள் தொகையே அவ்வளவு தான். ஓவல் அலுவலகத்தில் பேசிய அவர் “மோடி, நாம் அங்கு லட்சக்கணக்கான மக்களை சந்திக்க இருக்கின்றோம் என்று கூறினார். நான் பாதுகாப்பாக இருக்க மாட்டேன் என்று தெரிகிறது” என செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் துவங்கி படேலின் மைதானம் வரையில் ரோட் ஷோ நடைபெறும் என்றும், அகமதாபாத் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரெம்ப்பின் இந்த வருகையை ஒட்டி முக்கிய ஏற்பாடுகளை மேற்கொள்ள 16 கமிட்டிகள் உருவாக்கப்படுள்ளது. ஒவ்வொரு கமிட்டியின் தலைவராக ஒரு மாவட்ட ஆட்சியர் செயல்பட உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close