Donald Trump India Visit 2 Day Live Updates : அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரெம்ப் தன்னுடைய துணைவியுடன் நேற்று இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் அவர் நேற்று குஜராத், அகமதாபாத்தில் உள்ள மொடேரா மைதானத்தில் “நமஸ்தே ட்ரெம்ப்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இருக்கும் உறவு குறித்து விளக்கினார் அவர். இதனைத் தொடர்ந்து தனது 36 மணி நேர இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு அமெரிக்கா கிளம்பினார் ட்ரம்ப்.
தாஜ்மகாலினை பார்வையிட்ட அமெரிக்க அதிபர்
திங்கள் கிழமை சரியாக 04:45 மணி அளவில் டொனால்ட் ட்ரெம்பும் அவருடைய மனைவி மெலானியா ட்ரெம்பும் ஆக்ராவில் அமைந்திருக்கும் தாஜ்மகாலை பார்வையிட்டனர். அவர்களின் வருகையை ஒட்டி அகமதாபாத்தும், ஆக்ராவும் புதுப்பொலிவுடன் மின்னியது. மேலும் படிக்க : அமெரிக்க அதிபர் வருகை: வண்ணமயமான ஆக்ரா! இன்று டொனால்ட் ட்ரம்பின் பயணம் மற்றும் திட்டங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள். மேலும் படிக்க : புதிய வரலாறு உருவாக்கம்: ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்வில் மோடி பெருமிதம்
ஜனாதிபதி மாளிகையில் டொனால்ட் ட்ரெம்ப்
மொடேரா மைதானத்தில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற டொனால்ட் ட்ரெம்ப் இன்று காலை 10 மணி அளவில் ஜனாதிபதி மாளிகையில் 10 மணி அளவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினை சந்தித்து பேச உள்ளார். 10:30 மணி அளவில் ராஜ்காட் மைதானத்தில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Donald Trump India Visit 2 Day Updates : உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதனமான மொடேரா மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்வில் உரையாடினார் டொனால்ட் ட்ரெம்ப்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் தங்களது இரண்டு நாள் இந்தியா பயணத்தின் முடிவைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டனர்.
US President Donald Trump & First Lady Melania Trump depart from Delhi following the conclusion of their two-day visit to India. pic.twitter.com/llalDcR5W9
— ANI (@ANI) February 25, 2020
டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் விருந்து முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
Delhi: US President Donald Trump and First Lady Melania Trump leave after attending dinner banquet hosted by the President Ram Nath Kovind at Rashtrapati Bhawan. PM Narendra Modi also present. pic.twitter.com/dTlBYDtRzz
— ANI (@ANI) February 25, 2020
டெல்லியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கிய இரவு விருந்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சமையல் கலைஞர் விகாஸ் கன்னா கலந்து கொண்டனர்.
டெல்லியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஆகியோரை சந்தித்தனர்.
பாகிஸ்தான் குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி பயங்கரவாதத்தை கையாள்வார். நாங்கள் பாகிஸ்தானைப் பற்றி விரிவாக விவாதித்தோம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் எனக்கு நல்ல உடன்பாடு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்து பேசினார்: நாங்கள் மத சுதந்திரம் பற்றி பேசினோம். மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என பிரதமர் கூறினார். அவர்கள் அதில் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. இது இந்திய விவகாரம்.
சி.ஏ.ஏ மீதான டெல்லி வன்முறை குறித்து பேசிய டிரம்ப், "டெல்லி அமைதியின்மை என்பது இந்திய நாட்டின் உள் விவகாரம்" என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால் சந்தைகளுக்கு என்ன நடக்கும் என்று கேட்டபோது, சந்தை வீழ்ச்சியடையும் என்று டிரம்ப் கூறினார்.
'நான் தேர்தலில் வெற்றி பெற்றால் சந்தைகள் உயரும்' என்று அவர் கூறினார்.
முகேஷ் அம்பானியுடனும் டிரம்ப் உரையாடினார்.
அமெரிக்க தூதரகத்தில் இந்தியா ஐ.என்.சி உடனான சந்திப்பை முடித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஹெலிகாப்டர்களை வாங்குகிறது என்றார்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா மிகவும் கடினமாக உழைத்து வருகிறது என்றார். "அவர்கள் அதை மேலும் மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போல் தெரிகிறது" என்று டிரம்ப் ஊடகங்களில் உரையாற்றும்போது கூறினார்.
அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா, தெற்கு டெல்லி அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், மேலும் பாடத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார், இது கல்வியாளர்களுக்கு "ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான" முன்மாதிரியாக அமைந்துள்ளது. "என்னை வரவேற்றதற்கு நன்றி. இது எனது முதல் இந்திய விஜயம். இங்குள்ள மக்கள் மிகவும் வரவேற்புடனும், கனிவாகவும் உள்ளனர்" என்று பள்ளி நிர்வாகத்திடம் கூறினார்.
#WATCH Delhi: First Lady of the United States, Melania Trump watches a dance performance by students at Sarvodaya Co-Ed Senior Secondary School in Nanakpura. pic.twitter.com/dBCuTzvymF
— ANI (@ANI) February 25, 2020
பிரதமர் மோடி: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறப்பு உறவின் மிக முக்கியமான அடித்தளம் மக்களுக்கு இடையேயான தொடர்புகளாகும். தொழில் வல்லுநர்கள், மாணவர்கள், அமெரிக்காவின் இந்திய புலம்பெயர்ந்தோர் இதில் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளனர். "
திபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், "அப்பாச்சி & எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க இராணுவ உபகரணங்களை 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வாங்குவதற்கான ஒப்பந்தங்களுடன் எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தினோம். இவை எங்கள் கூட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும். மெலனியாவும் நானும் இந்தியாவின் கம்பீரத்தினாலும், இந்திய மக்களின் விதிவிலக்கான தாராள மனப்பான்மையினாலும், தயவினாலும் திகைத்துப் போயிருக்கிறோம்" என்றார்.
பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு. தீவிரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினோம்." என்றார்.
நேற்று நடந்த நமஸ்தே ட்ரம்ப் எனக்கு மிக உயரிய கௌரவம். என்னைப் பார்ப்பதைக் காட்டிலும் உங்களை காணவே அதிக மக்கள் நேற்று வருகை புரிந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் உங்கள் பெயரை உச்சரிக்கும் போது மக்கள் மேலும் மேலும் உற்சாகம் அடைகின்றார்கள். இங்கிருக்கும் மக்கள் உங்களை மிகவும் நேசிக்கின்றனர்.
தெற்கு டெல்லியில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார் மெலானியா ட்ரம்ப். மெலானியாவை வரவேற்ற குழந்தைகள் அவருக்கு மாலை சூடி, நெற்றியில் செந்தூரம் வைத்து வரவேற்றனர். இந்த பள்ளிகளில் நடைபெறும் ஹேப்பினஸ் க்ளாஸினை காண அவர் வருகை புரிந்திருக்கிறார் அவர்.
ராஜ்காட்டில் பார்வையாளர்களாக சென்ற ட்ரம்ப் மற்றும் மெலனியா அண்ணல் காந்தி அடிகளின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தங்களின் கருத்துகளை இருவரும் பதிவு செய்துள்ளனர். ராஜ் காட்டில் மேலும் இருவரும் இணைந்து மரம் ஒன்றை நட்டு வைத்துள்ளது.
Delhi: US President Donald Trump & First Lady Melania Trump write in the visitor's book at Raj Ghat. pic.twitter.com/p43IMmCIg7
— ANI (@ANI) February 25, 2020
ராஜ்காட்டில் இருக்கும் காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற டொனால்ட் ட்ரம்ப் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Delhi: US President Donald Trump & First Lady Melania Trump pay tribute to Mahatma Gandhi at Raj Ghat. pic.twitter.com/ObQohvZhvr
— ANI (@ANI) February 25, 2020
10:00 மணி அளவில் ட்ரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ மரியாதை அளிக்கப்படுகிறது
10:30 மணி அளவில் ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவஞ்சலிக்கு மலர்வளையம் வைக்கின்றார்.
11:00 மணி அளவில் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நரேந்திர மோடியை ஐதராபாத் இல்லத்தில் சந்திக்கிறார்.
மதியம் 12:40 மணி அளவில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
இரவு 07:30 மணி அளவில் அமெரிக்க அதிபர் இந்திய குடியரசுத் தலைவருடன் ஆலோசனை நடத்துகிறார்.
இரவு 10 மணி அளவில் அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய மனைவி தாயகம் திரும்புகின்றனர்.
அமெரிக்க அதிபருக்கு இந்தியாவின் ராஷ்ட்ரபதிபவன் அளித்த சிறப்பு மரியாதை
LIVE: Ceremonial welcome of President @realDonaldTrump at Rashtrapati Bhavan https://t.co/7W4MyV7XAT
— President of India (@rashtrapatibhvn) February 25, 2020
டெல்லி சர்வோதாயா பள்ளியை இன்று பார்வையிடுகிறார் மெலனியா ட்ரெம்ப். அவரை வரவேற்பதற்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர் அப்பள்ளி மாணவர்கள்.
Delhi: Sarvodaya Co-Ed Senior Secondary School all set to welcome First Lady of the US Melania Trump, as she will visit the school today. pic.twitter.com/TUxW6JtSqU
— ANI (@ANI) February 25, 2020
அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய மனைவி தற்போது ராஷ்ட்ரபதி பவனுக்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவருடைய மனைவி சவிதா கோவிந்தும் வரவேற்றுள்ளனர்.
Delhi: President Ram Nath Kovind, his wife Savita Kovind and PM Narendra Modi receive US President Donald Trump and the First Lady Melania Trump at Rashtrapati Bhavan. pic.twitter.com/3NKozPI644
— ANI (@ANI) February 25, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights