அமெரிக்க அதிபர் வருகை: வண்ணமயமான ஆக்ரா!

ஆக்ரா சிவப்பு நிற கட்டிடங்களுக்கு பெயர் பெற்றது. இதனை நாங்கள் நம்முடைய விருந்தினர்களுக்கு காட்ட விரும்புகின்றோம்

By: Updated: February 24, 2020, 11:37:43 AM

 Jignasa Sinha

இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா ட்ரெம்ப் இந்தியாவுக்கு வருகை புரிய உள்ளனர். அவர்களின் வருகையை ஒட்டி  டெல்லியின் ஆக்ரா மற்றும் குஜராத்தின் அகமதாபாத் புதுப்பொலிவினை பெற்று  வருகிறது.  மதியம் குஜராத் செல்லும் அமெரிக்க அதிபர் இன்று மாலை 4.45 மணி அளவில் ஆக்ராவிற்கு வருகை புரிய உள்ளார். அவரை வரவேற்பதற்கு உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் தயார் நிலையில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

United States President Donald Trump India Visit, Agra, Taj Mahal

அமெரிக்க அதிபர் மற்றும் அவர் துணைவியாருடன் பிரதமர் நரேந்திர மோடியும் தாஜ்மகாலை பார்வையிடுகின்றார். இவர்களின் வருகையை ஒட்டி சாலைகள், சாக்கடைகள், கடைகள், சுவர்கள் என அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்ரா சிவப்பு நிற மணலுக்கு பெயர் பெற்றது என்பதால் அந்த நிறத்தில் வண்ணங்கள் அடிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

அமெரிக்க அதிபரின் வருகை குறித்த தகவல்கள் எங்களுக்கு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தான் கிடைக்கப் பெற்றது. அன்றைய நாளில் இருந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று கூறுகிறார் மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங். ஓப்ராய் ஹோட்டலில் இருந்து தாஜ்மகாலின் முகப்பினை அடைய 20 கொல்ஃப் கார்களை ஏற்பாடு செய்துள்ளோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள சுமார் 3000 கலைஞர்கள், விமான நிலையத்தில் இருந்து ஓப்ராய் ஹோட்டல் வரும் வரை, 21 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை : அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேசன் அலுவலர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும் போது “அனைத்தும் ஒரே மாதிரியாக “யூனிஃபார்மாக” தெரிவதற்காக நாங்கள் தெருக்களில் இருக்கும் சுவர்கள் அனைத்திற்கும் ப்ரவுன் நிற சாயம் பூசியுள்ளோம். ஆக்ரா சிவப்பு நிற கட்டிடங்களுக்கு பெயர் பெற்றது. இதனை நாங்கள் நம்முடைய விருந்தினர்களுக்கு காட்ட விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

United States President Donald Trump India Visit, Agra அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி புதுப்பொலிவுடன் காணப்படும் தாஜ்மகால்

விமான நிலையத்திற்கு அருகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தும் தினேஷ் கூறும் போது “மூன்று நாட்களுக்கு முன்பு முனிசிபாலிட்டி வேலையாட்கள் என்னிடம் வந்து ட்ரெம்ப் வருகிறார். அதனால் சாலையையும் மார்கெட்டினையும் ரிபேர் செய்யப் போகின்றோம் என்றார்கள். என்னுடைய கடைக்கு அருகே படிக்கட்டுகள் கட்டித் தந்தனர். சுவருக்கு வண்ணம் பூசினார்கள். கடைக்கு புதிதாக ப்ரவுன் கலரில் போர்டும் கொடுத்தார்கள். எனக்கு ட்ரெம்ப் யாரென்று தெரியாது. ஆனால் என்னுடைய கடை இப்போது புதிதாக தெரிகிறது. அதனால் எனக்கு அவரை பிடித்திருக்கிறது என்று கூறினார் அவர்.

அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸூடன் இணைந்து மூன்று அடுக்கு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது உ.பி. காவல்துறை. எஸ்.பி. ரோஹன் பி. போத்ரே கூறுகையில் “மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரை தெருக்களிலும், தாஜ்மகால் உட்பகுதியிலும் பணிக்கு அமர்த்தியுள்ளோம். 10 துணை ராணுவ படையிடனர் இங்கு உள்ளனர். டெல்லியில் இருந்தும் சிலர் வரவழைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

அமெரிக்க அதிபருடன் ஒரு மருத்துவர் உடனிருப்பார். ஆனாலும் எஸ்.என். மெடிக்கல் காலேஜ் மற்றும் புஷ்பாஞ்சலி மருத்துவமனை என இரண்டினையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். அவசர உதவி வாகனங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்று மாவட்ட ஆட்சியர் சிங் அறிவித்துள்ளார்.

சில இடங்களில் கடை உரிமையாளர்கள், தங்களின் கடைகளை காலி செய்துவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஜனவரி மாதம் தான் என்னுடைய சேமிப்பை வைத்து ஒரு கடை ஒன்றை ஆரம்பித்தேன். அதற்கு என்னிடம் அனுமதி ஆவணங்கள் அனைத்தும் இருக்கிறது. ஆனால் சாலைக்கு அருகில் கூட வராத எங்களின் கடையை காலி செய்ய கூறி உத்தரவிட்டனர் அதிகாரிகள். நான் இப்போது அனைத்தையும் இழந்து நிற்கின்றேன் என்று கூறியுள்ளார் ஆரிஃப் கான் என்ற கடை உரிமையாளர். இந்த கடை உரிமையாளர்கள் நில ஆக்கிரமிப்பு பகுதிகளில் கடை வைத்துள்ளனர் என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:United states president donald trump india visit agra gets makeover

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X