ராகுலுக்கு சவால் விடுக்கிறோம்; 2019ம் ஆண்டின் ‘மிகப்பெரிய பொய்யர்’ – பாஜக கடும் தாக்கு

யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா, இதனை நிரூபிக்க தயாரா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சவால் விடுத்துள்ளார். மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. […]

‘Don’t misguide, divide people over CAA’: Amit Shah to Rahul Gandhi - "சிஏஏ குறித்து தவறாக வழிநடத்தி மக்களை பிரிக்க வேண்டாம்" - ராகுலுக்கு சவாலுடன் கோரிக்கை வைத்த அமித் ஷா
‘Don’t misguide, divide people over CAA’: Amit Shah to Rahul Gandhi – "சிஏஏ குறித்து தவறாக வழிநடத்தி மக்களை பிரிக்க வேண்டாம்" – ராகுலுக்கு சவாலுடன் கோரிக்கை வைத்த அமித் ஷா

யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா, இதனை நிரூபிக்க தயாரா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

145 நாட்களுக்கு பிறகு இணைய சேவையை பெற்றது கார்கில்!

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முஸ்லிம் சகோதரர்களின் குடியுரிமை பறிக்கப்படப் போகிறது என்று காங்கிரசும் மற்ற கட்சிகளும் தவறாக வழிநடத்துகின்றன, வதந்திகளைப் பரப்புகின்றன என்பதை அனைவருக்கும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு சொல்ல விரும்புகிறேன்.

சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் : உ.பி.யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது!

எந்தவொரு நபரின் குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடும் எந்தவொரு விதியையும் தயவுசெய்து முன்வைக்குமாறு ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன்.


நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த சட்டத்தில் யாருடைய குடியுரிமையையும் பறிக்க எந்த விதியும் இல்லை. இந்த சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் அது குடியுரிமையை பறிக்காது.

நீங்கள் (காங்கிரஸ்) தயவுசெய்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாட்டின் அமைதியை அழிக்க முயற்சிக்காதீர்கள். உங்களிடம் உண்மைகள் இருந்தால், அவற்றை மக்கள் முன் முன்வைக்கவும்.

மத துன்புறுத்தல்களில் இருந்து தப்பித்து, அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்த நாடுகளை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நாங்கள் குடியுரிமையை வழங்குகிறோம், அதை பறிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பேசிய உள்துறை அமைச்சர், இந்த சட்டம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியதோடு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சியைத் தண்டிக்குமாறு தலைநகரில் உள்ளவர்களைக் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் தலைமையிலான துக்தே-துக்டே கும்பல் டெல்லியில் அமைதியான சூழ்நிலையை கெடுப்பதற்கு பொறுப்பாகும். அவர்களை தண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லி மக்கள் அதை செய்ய வேண்டும் (Congress party ke netritva me tukde-tukde gang jo Dilli ke ashanti ke liye zimmedar hai, isko dand dene ka samay aa gya hai. Dilli ki janata ne dand dena chahiye) என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி. பொய், வதந்திகள் பரப்புவது, ஊழல் செய்வதையே பிரதானமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கொண்டு வரும் திட்டங்கள் புரியாது.

என்.பி.ஆர். என்பது எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் உள்ளடக்கியது அல்ல, அதன் அம்சம் ஏழைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசாங்க நலத்திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடைய உதவும்” என்றார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dont misguide divide people over caa amit shah to rahul gandhi

Next Story
145 நாட்களுக்கு பிறகு இணைய சேவையை பெற்றது கார்கில்!Mobile internet services restored in Kargil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com