/tamil-ie/media/media_files/uploads/2018/09/nirmala-sitharaman-interview.jpg)
economic survey 2019
Indian Economic Survey 2019 : மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (4.7.19) தாக்கல் செய்தார்.
2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி அரசின் 2வது பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாளைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் ஆய்வறிக்கை குறித்த எதிர்பார்ப்பு பெருமளவு மேலூங்கி இருந்தது.
இந்நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் தயார் செய்த பொருளாதார ஆய்வறிக்கை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் 2019-20 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
read more.. முன்னாள் ராணுவ வீரர்களை கதிகலங்க வைக்கும் ஓய்வூதிய மாற்றம்!
Economic Survey Survey of India 2019 : பொருளாதார ஆய்வறிக்கை முக்கிய அமசங்கள்!
இது சாத்தியம் என்றால் சீனாவை விட உலகின் மிக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நிலையை இந்திய பெற முடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என கணிக்கபட்டு உள்ளது. எண்ணெய் விலை இந்த நிதி ஆண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.