scorecardresearch

சிறப்பு அங்கீகாரம் பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா?

விளக்கம் தந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Eminence Tag
Prakash Javadekar

Eminence Tag எனும் சிறப்பு அங்கீகாரமும் – ஜியோ கல்வி நிறுவனமும்

Eminence Tag எனும் சிறப்பு அங்கீகாரத்தினை பசுமைவெளி கல்வி நிறுவனமான ஜியோ கல்வி நிறுவனத்திற்கு அளித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது மத்திய அரசு.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் நேற்று கேள்விகள் கேட்கப்பட்டது. Eminence Tag பற்றியும் Letter of Intent (நோக்கக் கடிதம்) பற்றியும் அவர் நேற்று பதில் அளித்தார்.

ஜியோ நிறுவனத்தின் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கான கல்வி சார் செயல் திட்டங்கள், ஐந்து வருட வளர்ச்சி, கல்விப் பணி, வேலைவாய்ப்பு, அதில் பணி புரிய இருக்கும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நோக்கக் கடிதம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

நோக்கக் கடிதத்திற்கும் சிறப்பு அங்கீகாரத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. மத்திய அரசின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஜியோ செயல்பட்டால் மட்டுமே சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படும்.

மேலும் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அரசு சார் கல்வி நிறுவனங்களான இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஐஐடிக்கு மட்டுமே வழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் பிரகாஷ் ஜவடேகர்.

ஜியோ கல்வி நிறுவனத்தின் வேந்தர் மற்றும் துணைவேந்தர் யார்? 

அடுத்து வர இருக்கும் 3 கல்வி ஆண்டுகளில் அக்கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் என்னென்ன என்பதை நோக்கக் கடிதத்துடன் இணைத்து கொடுத்துள்ளோம்.

Eminence tag பெறுவதற்கு விண்ணப்பம் செய்த நிறுவனங்கள்

எமினென்ஸ் டேக் ( Eminence tag ) என்னும் சிறப்பு அங்கீகாரத்தினை பெறுவதற்காக 114 விண்ணப்பங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டது.

74 அரசு கல்வி நிறுவனங்கள், 29 தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் 11 பசுமைவெளி கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய தேர்வாணையத்தின் தேர்வு முறைகள் பற்றிய கேள்விகளும் எழுப்பப்பட்டன.

நெட், நீட், ஜெஇஇ தேர்வுகள் கணினிமயம் ஆனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “மாணவர்களுக்கு 5 மாதம் கணினி குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். அவர்களுக்கும் முழுதாக 20 சனி ஞாயிறுகள் இந்த பயிற்சிக்காக ஒதுக்கப்படும் போது அவர்கள் அதனை கற்றுக் கொள்வார்கள்” என்று பதில் அளித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Eminence tag rs 1000 crore govt grant only for iits

Best of Express