Advertisment

#MeToo விவகாரம் : பணியிடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து ஒரு பார்வை

#MeToo விவகாரம் : பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்திய சட்டங்கள் உங்களுக்கு எப்படி உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
#MeToo விவகாரம், பாலியல் குற்றச்சாட்டு

#metoo

#MeToo விவகாரம் : வேலை பார்க்கும் இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த இரண்டு வாரமாக #MeTooIndia கேம்பைன் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த காலத்தில், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு கொடுத்த பாலியல் கொடுமைகள் குறித்து முதன்முதலாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

Advertisment

தற்போது வேலை செய்யும் இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் என்ன செய்யலாம்? அவர்களை பாதுகாக்க இந்திய தண்டனைச் சட்டங்கள் எப்படி கை கொடுத்து உதவுகின்றன என்பது தொடர்பான கட்டுரை இது.

#MeToo விவகாரம் : பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் 2013

பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, மற்றும் குறைதீர்ப்பு) சட்ட மசோதா 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான நீதி கிடைத்தல் ஆகியவற்றிற்கு வழி செய்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தினை முன் வைத்து விசாகா கமிட்டியில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

விசாகா கமிட்டி என்றால் என்ன ?

1997ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது இந்த விசாகா கமிட்டி. 1992ம் ஆண்டு பன்வாரி தேவி என்ற சமூக ஆர்வலர், ராஜஸ்தானில் ஒரு வயது பெண் குழந்தை நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதன் விளைவாக அந்த பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதற்கு நீதி கேட்டு பல மகளிர் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் புகார்கள் அளித்தனர். அதில் ஒரு அமைப்பின் பெயர் தான் விசாகா.

இந்த கமிட்டியின் மூலமாக பணியிடத்தில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுத்தல், அதில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளுதல், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குறைதீர்த்தல் போன்ற முக்கியமான அம்சங்களை உருவாக்கி விசாகா கமிட்டியில் இணைத்தது உச்ச நீதிமன்றம்.

விசாகா கமிட்டியின் அம்சங்களை எவ்வாறு பாலியல் வன்கொடுமை 2013 சட்டம் மாற்றி அமைத்தது ?

அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றினை ஒவ்வொரு அலுவலகமும் அமைக்க வேண்டும். அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் அந்த புகார் குழுவிற்கு கீழே வருவார்கள். 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டிருக்கும் ஒவ்வொரு அலுவலகமும் இதனை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இந்த சட்டம் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள், அப்பெரண்டிஸ், பகுதி நேர ஊழியர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி, மற்றும் தன்னார்வ அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள் என அனைத்து பெண்களையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.

பாலியல் துன்புறுத்தல்கள் என எவற்றையெல்லாம் குறிப்பிடலாம் ?

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகள் உடன் வேலை பார்க்கும் ஆண் நபர்களால் ஏற்படும் பட்சத்தில் அதனை பாலியல் புகார்களாக முன் வைக்கலாம்.

  • தொடுதல் அல்லது தொட முயற்சித்தல்
  • பாலியல் ரீதியான தேவைகள் குறித்து வலியுறுத்துதல்
  • ஆபாச படங்களை காண்பித்தல்
  • உடல் ரீதியாக, வார்த்தைகள் ரீதியாக அல்லது சைகைகள் மூலம் எல்லை மீறி நடந்து கொள்ளுதல் போன்றவையை பாலியல் குற்றங்களாக ஒரு பெண் முன் வைக்கலாம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த கையேடு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

  • அதில் ஒருவருடைய பாலியல் சார் வாழ்வு பற்றி மறுபடியும் மறுபடியும் கேள்விகள் கேட்பது
  • ஆபாச புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை காண்பித்தல்
  • பாலியல் வன்முறை தொடர்பாக புகார் அளிக்கும் பெண்ணை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்
  • பாலியல் ரீதியாக பேசுதல், அழைப்பு விடுத்தல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்

பாலியல் புகார்களுக்கு இந்த ஐந்து வித சுற்றுப்புற காரணிகளும் அதிக வலு சேர்க்கின்றன. ஒரு பெண்ணின் வேலையை அச்சுறுத்தும் வகையில் கொடுக்கப்படும் தொல்லைகள், மன அழுத்தம் தருவது, அவர்களின் வேலை மற்றும் சுற்றுப்புறத்தில் தொல்லைகள் தருவது, அவர்களின் எதிர்கால வேலைகள் குறித்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்துதல், மற்றும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்துதல் ஆகியவை ஆகும். மேலும் படிக்க : #MeToo தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியின் கருத்து

எழுத்துப் பூர்வமான புகார்களை பாதிக்கப்பட்ட பெண்கள் தர வேண்டுமா?

கட்டாயமாக எழுத்துப் பூர்வமான புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சட்டம் விருப்பம் இருந்தால் எழுத்துப் பூர்வமான புகார்கள் அளிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் புகார் குழு அந்த பாதிக்கப்பட்ட பெண் சார்பாக புகார் அளிக்கலாம். உடல் ரீதியாக, மன ரீதியாக அல்லது மரணம் என்ற நிலையில் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பெண் சார்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புகார்கள் பதிவு செய்யலாம்.

எந்த கால அவகாசத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் ?

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மூன்று மாதத்திற்குள் தன்னுடைய புகாரினை பதிவு செய்யலாம். தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், கடைசியாக நடந்த நிகழ்வில் இருந்து 3 மாதங்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். ஆனால் 3 மாதத்திற்குள் தான் என்ற கட்டாயம் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை புகார் அளிக்க விடாமல் அச்சுறுத்தப்பட்டிருந்தால் அதற்கு காலக்கெடு இல்லை.

அளிக்கப்படும் புகார்கள் குறித்து எப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்?

இந்த புகார் குழு பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை ஐபிசி 509ன் கீழ் காவல்துறையில் புகாராக பதிவார்கள். அப்படி இல்லையென்றால் புகார் குழு 90 நாட்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். புகார் குழுவிற்கு சிவில் நீதிமன்றங்களுக்கு இருக்கும் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. விசாரணை நடக்க இருக்கும் நேரத்தில் அந்த பெண்ணிற்கு பணிமாற்றம் தரலாம் அல்லது மூன்று மாதங்கள் பணி விடுப்பும் தரலாம்.

விசாரணை நடத்தப்பட்டு முடிந்தவுடன் 10 நாட்களுக்குள் புகார் குழுவானது தனது அறிக்கையை அளித்திட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் 60 நாட்களுக்குள் முதலாளி அல்லது நிறுவனர் அல்லது மாவட்ட அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஐசிசியில் இருந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் என்ன நடக்கும் ?

புகாரின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவரின் சம்பளம் குறைக்கப்படலாம். புகார் அளிக்கப்பட்ட பெண் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தால், அவருடைய வேலை போயிருந்தால், மருத்துவ செலவு ஏற்பட்டிருந்தால், வருமானம் மற்றும் இதர நிதிகளில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

Womenright
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment