Express Exclusive China is watching : சீன அரசாங்கத்துடனும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொடர்புகளைக் கொண்ட ஷென்சென் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய வெளிநாட்டு முக்கிய தகவல் தரவுத்தளத்தில் (ஓ.கே.ஐ.டி.பி), அரசியல்வாதிகள் ஆன்லைன் கணக்கு மூலம் வேவு பார்க்கப்படுகின்றனர்.
அமைச்சர்கள் முதல் மேயர்கள் வரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை, தரவுத்தளத்தில் குறைந்தது 1,350 அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் என லிஸ்ட் நீள்கிறது. பாஜக, காங்கிரஸ், இடது மற்றும் அனைத்து பிராந்திய அமைப்புகள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடக்கில் லடாக் முதல் கிழக்கில் ஒடிசா, மேற்கில் மகாராஷ்டிரா மற்றும் தெற்கில் தமிழகம் வரை சீனாவின் கண்பார்வை வேலை செய்துக் கொண்டிருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த 2 மாத காலமாக நடத்திய கள ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. இதற்கான விசாரணையில் ஷென்ஜென் தலைமையிடமான நிறுவனத்திற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய தரவு நுட்பங்களைப் பயன்படுத்தி இதை செய்வதற்கு 2 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளது. இதில் 8 முக்கிய தரவுகள் (Data) அடங்கும்.
*நேரடி குறிப்புடன் குறைந்தபட்சம் 700 அரசியல்வாதிகள், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 460 பேர்கள்.
* 100 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் ‘குடும்பப் பட்டியல்’
* குறைந்தது 350 தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; அவர்களில் பலர் ஹவுஸ் கமிட்டிகளில் உறுப்பினர்களாக இருந்தனர்.
OKIDB ல் குறைந்தது 40 முன்னாள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் பாஜக ஆட்சி செய்யும் அல்லது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல, முதன்மையாக பிராந்திய கட்சிகளால் வழிநடத்தப்படும் மாநிலங்களிலிருந்தும் - ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், மற்றும் டெல்லியில் இருப்பவர்கள். இவற்றில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியின் மனிஷ் சிசோடியா, பிஜேடியின் நவீன் பட்நாயக், டிஎம்சியின் மம்தா பானர்ஜி மற்றும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆகியோர் அடங்குவர்.
இந்த பட்டியலில் ஒரு டஜன் தற்போதைய மற்றும் முன்னாள் மாநில ஆளுநர்கள் உள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவில் பெரிய மற்றும் சிறிய நகரங்களின் 70 மேயர்கள் மற்றும் துணை மேயர்களை ஓ.கே.ஐ.டி.பி கண்காணிக்கிறது: ஹரியானாவில் உள்ள ஹிசார் மற்றும் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் முதல் ஜோத்பூர், ஆக்ரா, குவஹாத்தி, மும்பை, டெல்லி, சென்னை, ஸ்ரீநகர், காஜியாபாத், பெங்களூரு, புனே, வதோதரா, ஜுனகத், பனாஜி, மற்றும் ஜலந்தர். சீனாவில், ஒரு மேயர் ஒரு நகரத்தில் மிக உயர்ந்த அதிகாரி, மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நகராட்சி செயலாளருக்கு பதிலளித்தாலும் நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்துகிறார்.
மேலும், எண்களைப் பொறுத்தவரை, கண்காணிக்கப்படும் பெரும்பாலான அரசியல்வாதிகள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு பெரிய தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தது 200 பேர். சிபிஐ, சிபிஎம் மற்றும் ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட இடது கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் எண்ணிக்கையில் உள்ளனர் - குறைந்தபட்சம் 60 பேர் தற்போதைய அல்லது முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் இடதுசாரிகளைச் சேர்ந்த ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.பி.
சீனா வேவு பார்க்கும் சில முக்கிய காந்திய குடும்பங்கள் (மறைந்த ராஜீவ் காந்தி மற்றும் மறைந்த சஞ்சய் காந்தி), பவார்கள் (ஷரத், சுப்ரியா), சிந்தியாக்கள் (ஜோதிராதித்யா மற்றும் மனைவி), சங்மாஸ் (மறைந்த பூர்னோ சங்மாவின் மகள் மற்றும் மகன்கள்), சினிமா வழியாக அரசியலில் இறங்கிய பாலிவுட் நடிகர்களின் குடும்பங்களும் - ஹேமா மாலினி, அனுபம் கெர், மூன் மூன் சென், பரேஷ் ராவல் மற்றும் மறைந்த வினோத் கன்னா போன்றவர்கள்.
குறைந்தது இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், மறைந்த பிரணாப் முகர்ஜி மற்றும் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அல்லது அவர்களது உறவினர்கள்; ஐந்து முன்னாள் பிரதமர்கள் - மறைந்த ராஜீவ் காந்தி, மறைந்த பி வி நரசிம்ம ராவ், மறைந்த ஏ பி வாஜ்பாய், எச் டி தேவேகவுடா மற்றும் மன்மோகன் சிங் அல்லது அவர்களது நெருங்கிய உறவினர்கள் . ஓ.கே.ஐ.டி.பியின் ஒரு பகுதியாக இருக்கும் அரசியல்வாதிகள்.
பிரதமர் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை ; 10 ஆயிரம் இந்தியர்களை வேவு பார்க்கும் சீனா!
கமல்நாத், பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் சவான், சித்தராமையா, சங்கர் வாகேலா, புத்ததேப் பட்டாச்சார்ஜி, கிரண் குமார் ரெட்டி, ராமன் சிங், மறைந்த மனோகர் பாரிக்கர், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஜனார்த்தனா ரெட்டி, மறைந்த எஸ்.ஆர்.போம்மை, மறைந்த எம் கருணாநிதி மற்றும் மறைந்த ஜோதி பாசு.
ஓ.கே.ஐ.டி.பியில் சஷி தரூர், பைஜயந்த் ‘ஜே’ பாண்டா, மீனாட்சி லேக்கி, அபிஷேக் பானர்ஜி (மம்தாவின் மருமகன்), காளிகேஷ் நாராயண் சிங் தியோ, மற்றும் திவ்யா ஸ்பந்தனா ஆகியோரும் கண்காணிக்கப்படுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.