ஜம்மு காஷ்மீரில் பள்ளிகளுக்கு செல்ல பாலங்கள் கட்டியது, குஜராத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை சாதனம் அமைத்து வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்தது, மாவட்ட மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தியது, குப்பைக் கிடங்கை பூங்காவாக மாற்றியது என்று இது போல பல சமூக மாற்றங்களை நிகழ்த்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் 'கவர்னன்ஸ்' விருது வழங்கி நேற்று(ஆக.21) பெருமைப்படுத்தியது.
முழு வெற்றியாளர்கள் விவரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நுகர்வோர் நலவாரியத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பிரதம அலுவலக விவகார இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "
“நல்லாட்சி மற்றும் மேம்பாடு என்பது அரசாங்கத்தின் இரண்டு முக்கியமான விஷயமாகும்… மேலும் நல்லாட்சியைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சியரின் பங்கு மிக முக்கியமானது. இந்த விருது எங்கள் நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் மாவட்ட ஆட்சியர்களை சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கும். இது புதிய இந்தியாவை மாற்றும், அதுவே நமது பிரதமரின் கனவு. நிர்வாகிகளுக்கு நேர்மறையான அணுகுமுறை, மாற்று சிந்தனை, விரைவாக முடிவெடுக்கும் செயல்முறை மற்றும் கூட்டு முயற்சி தேவை. ஒரு அதிகாரி தனது செயல்திறன் தணிக்கையின் அடிப்படையில் சிறப்பானவராக இருந்தால், அவர் அற்புதங்களைச் செய்ய முடியும்… சமூக உணர்வு, கூட்டு முயற்சி மற்றும் விரைவாக கண்காணித்து முடிவெடுப்பது மிகவும் முக்கியம்” என்று கட்கரி கூறினார்.
பாஸ்வான் இந்த விருதுகளை "நிர்வாகிகள் சிறப்பாக வேலை செய்ய ஒரு உந்துதல்" என்று விவரித்தார்.
“ஒரு மாவட்ட ஆட்சியர்… ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கிறார். எந்தவொரு சமூக மாற்றமும் இதயம் மற்றும் மனதின் ஒருங்கிணைப்பு மூலம் நிகழலாம். அமைச்சரால் கொள்கைகளை உருவாக்கலாம், பரிந்துரைகளை வழங்க முடியும், ஆனால் அதை செயல்படுத்துவது மாவட்ட ஆட்சியர்கள் தான். அதில், செயல், உண்மை மற்றும் கடினமான சூழலை கையாளுதல் போன்றவை உள்ளது. கொள்கைகளை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது மாவட்ட ஆட்சியர்களின் வேலை” என்று ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
மாவட்ட ஆட்சியர்கள் "நல்லாட்சி மற்றும் விநியோகத்தின் மைய புள்ளியாக மாறியுள்ளனர்" என்று பிரசாத் கூறினார்.
"இந்தியாவின் அரசியல் நிர்வாக அமைப்பில், வழக்கமாக நான்கு பதவிகள் மிக முக்கியமானவை - பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆய்வாளர். அவர்கள் அதிகார கட்டமைப்பை எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் இப்போது மாவட்ட ஆட்சியர் அவரது புதிய அவதாரத்தில், நல்லாட்சி மற்றும் செயல்திறனின் மையமாக மாறிவிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமரின் தலைமையில், அந்த செயல்திறன் ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் அதிகாரத்துவத்துடன் நடந்துள்ளது. முக்கியமானது என்னவென்றால், சரியான பணிச் சூழலை உருவாக்குவதுதான்,” என்றார்.
ஜிதேந்திர சிங், தான் அதிகாரிகள் மற்றும் பயிற்சித் துறையுடன் (டிஓபிடி) தொடர்புடையவர் என்றும் "நாங்கள் என்ன செய்வோமோ அதை எக்ஸ்பிரஸ் செய்துள்ளது” என்றும் கூறினார். "நாங்களும் விருது வழங்குவதற்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தோம். ஆனால், நிச்சயமாக உங்கள் வழிமுறைகளால் செய்யப்படும் மதிப்பீடு அதிக நம்பகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளப்படும்," என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான விவேக் கோயங்கா, “இந்த மாலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு யோசனையின் பலனாகும்” என்றார்.
"கேள்வி என்னவென்றால்: நம்மைச் சுற்றியுள்ள பெரும் மாற்றத்திற்கு நியாயம் செய்வதில் எக்ஸ்பிரஸின் பொறுப்பு என்ன? நிச்சயமாக, ஒரு வழி உள்ளது. செய்தி அறையில் உட்கார்ந்து, புலன் விசாரணைக் கட்டுரைகள் மற்றும் விளக்கவுரை பத்திரிகை ஆகியவற்றைச் செய்வதன் மூலம் ஒருபடி உயர்த்த முடியும். ஆனால் செய்தி அறைக்கு அப்பால் எங்கள் பொறுப்பு என்ன? மாற்றத்தை பதிவு செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியுமா? இதற்கு பதில், Indian Express Excellence in Governance விருதுகள் ஆகும்,” என்றார்.
மாவட்டமே நமது நிர்வாகத்தின் அடிப்படை அலகு. இந்தியன், நிர்வாகம் மற்றும் சேவை எனும் வார்த்தைகள் தான் ஐஏஎஸ் என்பதை அறியும் இடத்தில் உள்ளது,” என கோயங்கா கூறினார்.
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான ஒரு சிறந்த நடுவர் மன்றத்தால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நடுவர் மன்றத்தில, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையருமான வஜாஹத் ஹபிபுல்லா, 2009 முதல் 2011 வரை இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் அமெரிக்கா, சீனாவிற்கான இந்தியாவின் தூதராக இருந்தவருமான நிரூபமா ராவ், மற்றும் முன்னாள் அமைச்சரவை செயலாளர் கே எம் சந்திரசேகர் ஆகிய அங்கம் வகித்தனர்.
ஜூரி தலைவர் நீதிபதி லோதா கூறுகையில், "மாவட்ட ஆட்சியர்கள் செய்த மிகப் பெரிய பணிகளை அங்கீகரிப்பது நடுவர் மன்றத்திற்கு மகிழ்ச்சி அளித்தது. யோசனை, புதுமை, தாக்கம், செயல்படுத்தல் மற்றும் மேம்பாடுகள் ஆகிய இந்த 5 அளவுகோல் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டங்கள் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன… இன்று புதிய சிந்தனைகளுடன் வெளிவந்து சிந்தித்து குழப்பமான சிக்கல்களுக்கு வலுவான தீர்வுகளை மாவட்ட ஆட்சியர்கள் கொண்டு வர வேண்டும் என்பதே நமக்கு வேண்டும்" என்றார்.
முன்னதாக, விருது வென்றவர்களையும் விருந்தினர்களையும் வரவேற்று பேசிய தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தலைமை ஆசிரியர் ராஜ் கமல் ஜா, "இந்த வெற்றிக் கதைகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், ஏனெனில் தி இந்தியன் எக்ஸ்பிரஸில், பத்திரிகை இருண்ட இடங்களில் ஒளி வீசுவதாக இருந்தால், அது தானாகவே ஒளிரும் விஷயங்களைத் தேடுவதைப் பற்றியும் இருக்கும். எங்களைப் பொறுத்தவரை, தேசிய உரையாடலைத் தக்க வைத்துக்கொள்வது என்பது நம் பேசும் சத்தத்தில் கேட்கப்படாத குரல்களைத் தேடி வெளியே செல்வதாகும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.