Indian Express Governance Awards : சமூக மாற்றங்களுக்காக துணை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் விதமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கவர்னன்ஸ் விருது வழங்கி கவுரவிக்கிறது. இதில், இந்தாண்டுக்கான கவர்னன்ஸ் விருது வழங்கும் விழா இன்று (ஆக.21) நடைபெற்றது.
விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், பெண்களின் கல்வி உள்ளிட்ட 16 பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதுமிலிருந்து 24 மாநிலங்கள் 84 மாவட்டங்களைச் சேர்ந்த 249 பேர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இன்று வெற்றியாளர்களை அறிமுகம் செய்து இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது வழங்குகிறது.
மேலும் படிக்க – Express Governance Awards : மாற்றங்களை உருவாக்கியவர்களை கௌரவிக்கும் எக்ஸ்பிரஸ் குழுமம்…
தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நுகர்வோர் நலவாரியத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பிரதம அலுவலக விவகார இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

நிகழ்வில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதி,

ராஜ் குமார் யாதவ்
பிரிவு – வட கிழக்கு மாவட்டங்கள்
மாவட்டம் – தெற்கு சிக்கிம்
வெற்றியாளர் – ராஜ் குமார் யாதவ்
முன்னெடுத்த திட்டம் – கிராமத்தை தத்தெடுத்த மாவட்ட நிர்வாகம் (DAAV)
பிரிவு – எல்லை மாவட்டங்கள்
மாவட்டம் – கச்சர்
வெற்றியாளர் – டாக்டர்.எஸ். லக்ஷ்மணன்
முன்னெடுத்த திட்டம் – DEBO NA NEBO NA “ கச்சர் மாவட்டத்தின் நிர்வாகம் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை மொபைல் ஆப் கொண்டுச் சென்றது.
பிரிவு – ஜம்மு & காஷ்மீர் மாவட்டங்கள்
மாவட்டம் – உதம்பூர்
வெற்றியாளர் – டாக்டர் ஷஹித் இக்பால் சௌத்ரி
திட்டம் “ராஹத்” : வாழ்க்கையை இணைத்தல், கல்வியைப் பாதுகாத்தல் (மாவட்ட அளவில் திட்டமிடப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு திட்டம்)
பிரிவு – இடது சாரிகள் தீவிர மாவட்டங்கள்
மாவட்டம் – கிழக்கு கோதாவரி
வெற்றியாளர் – கார்த்திகேய மிஸ்ரா
முன்னெடுத்த திட்டம் – கௌஷல் கோதாவரி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டம்/ கௌஷல் கோதாவரி (கேஜி)
இந்த புதிய திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் திறன் மேம்பாடு, திறன் வளர்ச்சி, வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வெற்றிகரமான இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 25,000க்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். இத்திட்டத்தின் மூலம், நெல்லூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பழங்குடியின பெண்களும் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
பிரிவு – விவசாயம்
மாவட்டம் – ஒஸ்மானாபாத்
வெற்றியாளர் – டாக்டர் பிரஷாந்த் போலாநாத் நர்னாவர்
முன்னெடுத்தல் திட்டம் – க்ருஷி கிராந்தி திட்டம்
வங்கிகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் மட்டுமின்றி, விற்பனையாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே ஒரு நேரடி இணைப்பை ஏற்படுத்தி, வாங்குபவர்களுக்கு நிறைய நன்மைகளை இத்திட்டம் அளித்துள்ளது.
பிரிவு – உள்ளடக்கிய கண்டுபிடிப்பு
மாவட்டம் – வல்சாத்
வெற்றியாளர் – சி.ஆர்.கர்சன்
பிரிவு – ஆற்றல்
மாவட்டம் – விழியநகரம்
வெற்றியாளர் – விவேக் யாதவ்
பிரிவு – சமூக நலம்
மாவட்டம் – குல்லு
வெற்றியாளர் – ராகேஷ் கன்வர்
பிரிவு – குழந்தை மேம்பாடு
மாவட்டம் – நாக்பூர்
வெற்றியாளர் – டாக்டர். மாதவி கோட் சவர்
பிரிவு – பெண்கள் முன்னேற்றம்
மாவட்டம் – ஜபுவா
வெற்றியாளர் – ஆசிஷ் சக்சேனா
பிரிவு – கல்வி
மாவட்டம் – ஜக்டியல்
வெற்றியாளர் – டாக்டர் ஏ.ஷரத்
பிரிவு – மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துதல்
மாவட்டம் – திருநெல்வேலி</p>
வெற்றியாளர் – சந்தீப் நந்தூரி
பிரிவு – சுகாதாரம்
மாவட்டம் – பிஜாபூர்
வெற்றியாளர் – அய்யஜ் தம்போலி
பிரிவு – சமூக ஈடுபாடு
மாவட்டம் – அகோலா
வெற்றியாளர் – அஸ்டிக் குமார் பாண்டே
பிரிவு – இடது சாரி தீவிர மாவட்டம்
மாவட்டம் – கிழக்கு கோதாவரி
வெற்றியாளர் – கார்த்திகேய மிஸ்ரா
பிரிவு – தொழில்நுட்பம் அமல்படுத்துதல்
மாவட்டம் – நவி மும்பை
வெற்றியாளர் – துகாரம் முண்டே
இந்தியன் எக்ஸ்பிரஸின் கவர்னன்ஸ் விருது வெற்றியாளர்கள் கூட்டாக போஸ் கொடுக்கும் காட்சி.