Indian Express Governance Awards today to honour : இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழால் வழங்கப்படும் விருது தான் கவர்னன்ஸ் விருது. சமூகத்தின் மாற்றத்திற்காக பெரிதும் உழைத்தவர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், பெண்களின் கல்வி உள்ளிட்ட 16 பிரிவுகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
24 மாநிலங்கள் 84 மாவட்டங்களில் இருந்து 249 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். அவர்களில் இன்று வெற்றியாளர்களை அறிமுகம் செய்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். மாற்று மின்சார சக்திக்காக சோலர் பேனல்களை உருவாக்கியது, மாவோய்ஸ்ட்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க உதவியது மற்றும் சர்வதேச எல்லையில் ஊழலுக்கு எதிரான கேம்பைனை கொண்டு சேர்த்தது போன்ற மிகப்பெரும் சமூக சேவை செய்தவர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டது. இவர்களுக்கு 5 மத்திய அமைச்சர்கள் விருதுகளை வழங்குகின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க :
சிறப்பு விருந்தினர்கள்
தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நுகர்வோர் நலவாரியத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பிரதம அலுவலக விவாகர இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்த லைவ் அப்டேட்ஸ் காண இங்கே க்ளிக் செய்யவும்
நடுவர் குழு
போட்டியார்களில் வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கான நடுவர் குழுவில், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, வஜாஹத் ஹபிபுல்லா, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் நிருபமா ராவ், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கே.எம். சந்திரசேகர் உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளனர்.
வெற்றியாளர்கள் உறுதி செய்யப்பட்ட பின்பு, இந்த மாற்றத்தினால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், வளர்ச்சி மற்றும் அதற்கான மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கே.பி.எம்.ஜி ஆராய்ந்து வெளியிட, நேரடியாக சென்று ஃபீல்ட் வொர்க்கை எங்களின் நிருபர்கள் குழு மற்றும் ஆசிரியர்கள் குழு சரிபார்த்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகளுக்கான பிரிவுகள்
வேளாண்மை, கல்வி, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், தொழில்நுட்பம், பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் மேம்பாடு, கண்டுபிடிப்பு, திறன்மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் எரிசக்தி துறை ஆகிய பிரிவுகளின் கீழ் நிகழ்த்தப்பட்ட சாதனைக்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.