Advertisment

எக்ஸ்பிரஸ் இம்பாக்ட்; கடத்தப்பட்ட 16 கலைப் பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க மியூசியம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்- ICIJ விசாரணையில், மெட் மியூசியத்தில் கடத்தல்காரர் சுபாஷ் கபூருடன் தொடர்புடைய 77 பழங்கால பொருட்கள் இருந்தது கண்டுபிடிப்பு; 16 பொருட்கள் இந்தியா திரும்புகிறது

author-image
WebDesk
New Update
Kamadeva

(இடமிருந்து வலம்) ரேவந்தா 10 ஆம் நூற்றாண்டு, வெண்கலம், சாளுக்கியன், கர்நாடகா /ஆந்திரா; காமதேவன், காதல் கடவுள் 8 ஆம் நூற்றாண்டு, கல், ஆரம்ப இடைக்கால காஷ்மீர்; திருஞான சம்பந்தர் - 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, செப்பு கலவை, சோழர் காலம்

Shyamlal Yadav , Divya A

Advertisment

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலை கடத்தல்காரர் சுபாஷ் கபூருடன் தொடர்புடைய குறைந்தது 77 இந்தியப் படைப்புகள் அடங்கிய அதன் பட்டியல்படுத்தப்பட்ட பல பழங்காலப் பொருட்கள் மீது பரவலான விமர்சனங்களையும் சட்டப்பூர்வ ஆய்வுகளையும் எதிர்கொண்ட நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (மெட்), அவற்றில் 16 படைப்புகள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அருங்காட்சியக இயக்குனர் மேக்ஸ் ஹோலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார், "கடந்த மாதம், புதிய ஆதாரத் தகவல்களின் வெளிச்சத்தில், பல தசாப்தங்களாக பார்வையாளர்களை கவர்ந்த ஒரு சிற்பமான செலஸ்டியல் டான்சர் (நடன கலைஞர்) உட்பட 16 படைப்புகளை நாங்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினோம்."

இதையும் படியுங்கள்: திருமணம் செய்யாமல் தாயாக ஏங்கிய பெண் கொலை: கூகுள் தேடுதல் தளத்தால் சிக்கிய குற்றவாளி; என்ன நடந்தது?

இது 11 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த "அப்சரா" என்ற மணற்கல் சிற்பத்தின் குறிப்பு ஆகும், இதன் மதிப்பு $1 மில்லியனுக்கும் அதிகமாகும்.

publive-image

காதல் கடவுள், காமதேவன்

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைனான்ஸ் அன்கவர்டு ஆகியவற்றுடன் இணைந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் மாதம் நடத்திய விசாரணையின்படி, தமிழகத்தில் பழங்கால பொருட்களை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் சுபாஷ் கபூருடன் தொடர்புடையதாக கண்டிபிடிக்கப்பட்ட, இந்த சிற்பங்கள் மெட் மியூசியத்தில் உள்ள கலைப்படைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தது.

மெட் மியூசியத்தில் உள்ள பழங்காலப் பொருட்களைத் திரும்பப் பெறுவது பற்றி கேட்டபோது, ​​வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அதிகாரி ஒருவர், சட்டப்பூர்வ செயல்முறைகள் நடந்து வருவதாகவும், "இதற்கு மேல் நாங்கள் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது" என்றும் கூறினார். இந்திய தொல்லியல் துறையும் (ASI) திரும்பப் பெறுவதற்கான பணிகள் குறித்த எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளது.

திரும்பப் பெறப்படும் பழங்காலப் பொருட்கள் பொதுவாக வெளிநாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும், அதாவது சம்பந்தப்பட்ட குழு அல்லது தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு வெளியுறவுத் துறை அமைச்சகம் அத்தகைய திருப்பி அனுப்பப்பட்ட பொருள்களின் பாதுகாவலரான இந்திய தொல்லியல் துறைக்கு தெரிவிக்கும். ASI பின்னர் பொருட்களை சரிபார்த்து ஆவணப்படுத்த ஒரு குழுவை அனுப்புகிறது, அதைத் தொடர்ந்து அந்த கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

publive-image

கிருஷ்ணர் யமுனை நதியில் காளியை அடக்குகிறார்: பாகவத புராணத் தொடரின் விளக்கம்

மெட் மியூசியம் (Met) அதன் அறிக்கையில் "அதன் சேகரிப்பின் தீவிர மதிப்பாய்வு" ஒன்றையும் அறிவித்தது மற்றும் படைப்புகள் மற்றும் கலைப்பொருட்களைப் பெறுவதற்கான அதன் செயல்முறையை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளதாகக் கூறியது. அதன் கலைப்படைப்புகளின் தோற்றத்தை ஆராய்வதற்காக ஆதார ஆராய்ச்சியின் மேலாளரை நியமிப்பதாகவும் மெட் மியூசியம் கூறியது.

அந்த அறிக்கையில், “விசாரணையில் உள்ள கலை விற்பனையாளர்களிடமிருந்து அருங்காட்சியகத்திற்கு வந்த அனைத்து படைப்புகளையும் விசாரணைக்கு உட்படுத்துவோம், விரைவுபடுத்துவோம் மற்றும் தீவிரப்படுத்துவோம். இந்த பொருட்களில் பெரும்பாலானவை 1970 மற்றும் 1990 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அருங்காட்சியகத்திற்கு வந்தன... கலாச்சார சொத்துக்கள் பற்றிய சிந்தனை கொண்ட ஆய்வாளர்கள், வக்கீல்கள் மற்றும் கருத்தாளர்களை பல்வேறு வழிகளில் அருங்காட்சியகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டி கலந்தாலோசிப்போம்,” என்று கூறப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம், "அதன் சேகரிப்பு பற்றிய தீவிர மதிப்பாய்வு" பற்றி அறிவித்தது, "நாம் ஒரு காஸ்மோபாலிட்டன், உலகளாவிய சமூகத்தின் யோசனை சவால் செய்யப்படும் ஒரு காலத்தில் வாழ்கிறோம், மேலும் சில, அதிகமான தேசியவாத குரல்கள் கலாச்சார கலைப்பொருட்களை ஒரு மக்களின் தூதர்களாக குறைவாக ஏற்றுக்கொள்கின்றன, ஆனால் தேசிய அடையாளத்தின் சான்றாக அதிகம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன."

publive-image

பரிகாரா (உலோகச் சிலை)

மார்ச் 22 அன்று, நியூயார்க் மாநிலத்தின் உச்ச நீதிமன்றம், மெட் மியூசியத்திற்கு எதிராக ஒரு தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது, நீதிபதி ஃபெலிசியா ஏ மென்னின், நியூயார்க் காவல் துறை அல்லது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் எந்தவொரு முகவருக்கும் பழங்காலப் பொருட்களைக் கைப்பற்ற 10 நாட்கள் அவகாசம் அளித்து, அந்தப் பழங்காலப் பொருட்களைக் கைப்பற்றி "தேவையற்ற தாமதமின்றி நீதிமன்றத்தின் முன் கொண்டு வர வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

publive-image

தண்டா கடவுள் மற்றும் நிக்சுபா தேவி (சூரியனின் உதவியாளர்கள், சூரிய கடவுள்)

மார்ச் 30 அன்று, மெட் மியூசியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், "இந்த படைப்புகள் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதை அறிந்தக் கொண்டோம், 15 சிற்பங்களை இந்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்ப உள்ளோம்" என்று கூறப்பட்டது. "இந்தியாவில் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் கடத்தல்காரர் சுபாஷ் கபூரால் அனைத்து படைப்புகளும் ஒரே சமயத்தில் விற்கப்பட்டன" என்று அறிக்கை கூறியது.

தேடல் வாரண்டில் பட்டியலிடப்பட்ட 15 பொருட்களில், 10 பொருட்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேடல் வாரண்டில் பட்டியலிடப்பட்டுள்ள 15 இந்தியப் பழங்காலப் பொருட்களில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யக்ஷி டெரகோட்டா வான நடனக் கலைஞர்; வேட்டையிலிருந்து திரும்பும் கடவுள் ரேவாண்டாவின் வெண்கலச் சிற்பம் (கி.மு 10 ஆம் நூற்றாண்டு); மற்றும் ஒரு 15 ஆம் நூற்றாண்டு பரிகாரா (உலோகச் சிலை) ஆகியவை உள்ளன.

publive-image

கிருஷ்ணர் மற்றும் கோபியர்களுடன் கூடிய குழு

15 கலைப்பொருட்களின் மொத்த மதிப்பு $1.201 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.9.87 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் விசாரணைத் தொடரின் மற்றொரு அறிக்கை, மெட் மியூசியத்தின் வலிமையான ஆசிய சேகரிப்பில் குறைந்தது 94 ஜம்மு காஷ்மீர் பூர்வீக கலைப்பொருட்கள் உள்ளன, அவை 81 சிற்பங்கள், ஐந்து ஓவியங்கள், ஐந்து பக்கங்களைக் கொண்ட ஒரு கையெழுத்துப் பிரதி, தொன்மையான இரண்டு காஷ்மீர் கம்பளங்கள் மற்றும் ஒரு பக்க கையெழுத்துப் பிரதிகள். இவற்றில் எவற்றுக்குமே அவற்றின் ஆதாரம் அல்லது பின்னணி ஆவணங்களில், அவை எப்போது கொண்டு வரப்பட்டன, யாரால் விற்கப்பட்டன என்ற விவரங்கள் இல்லை.

publive-image

தேவி மகாத்ம்யாவில் இருந்து போர்க் காட்சி

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுபாஷ் கபூர், "உலகின் மிகவும் வளமான பொருட்கள் கடத்தல்காரர்களில் ஒருவர்", அக்டோபர் 30, 2011 அன்று பிராங்பேர்ட்டில் கைது செய்யப்பட்டு, ஜூலை 2012 இல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நவம்பர் 1, 2022 அன்று, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான சிலைகளை திருடியது மற்றும் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டின் கீழ், தமிழ்நாட்டின் கும்பகோணம் நீதிமன்றத்தால் சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது திருச்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆசியாவிலிருந்து சிலைகள் மற்றும் கலைப் பொருட்களைக் கடத்தியதற்காக அமெரிக்காவிலும் சுபாஷ் கபூர் மீது வழக்குகள் உள்ளன.

publive-image

அரண்மனை உள்பக்கம்

ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன் (எச்.எஸ்.ஐ) நியூயார்க் நீதிமன்றத்தில் ஜூலை 2019 இல் தாக்கல் செய்த புகாரில், "சுபாஷ் கபூர் கடத்தியதாக அறியப்படும் திருடப்பட்ட தொல்பொருட்களின் மொத்த மதிப்பு $145.71 மில்லியனுக்கும் அதிகமாகும்" என்று கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment