Advertisment

இந்தியாவை வேவு பார்க்கும் சீனா... தரவுகளின் ஆழத்தை சோதனையிடுகிறது இந்தியா!

அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், நீதிபதிகள், ஊடகதுறையினர், குற்றவாளிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Express Investigation Part-2: End user key, govt looks at ‘depth’ of data mined by China

Kaunain Sheriff M , P Vaidyanathan Iyer

Advertisment

Express Investigation Part-2: End user key, govt looks at ‘depth’ of data mined by China :  இந்தியன் எஸ்பிரஸ் பத்திரிக்கை, சீனா அரசு மற்றும் சீன கம்யூனிச கட்சியுடன் தொடர்பில் இருக்கும் ஷென்சென் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான தனிநபர்களை வேவுபார்க்கிறது என்ற அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டது. அந்த செய்தியின் அடிப்படையில் சைபர் பாதுகாப்புதுறையை நேரடியாக நிர்வகிக்கும் இந்திய பாதுகாப்புத்துறை, எந்த வகையான தரவுகள் சேகரிக்கப்பட்டது, இதனால் தேசத்திற்கு எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து வருகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்று முக்கிய அரசு அதிகாரி அறிவித்துள்ளார். செய்தி அறிக்கை தெளிவாக இந்த ஆப்பரேசன் பற்றி கூறியிருக்கின்ற நிலையில், இந்த தரவு சேகரிப்பின் ஆழத்தை பற்றி நாங்கள் அதிகம் அக்கறை கொள்கின்றோம். தரவு புள்ளிகளின் அடிப்படையில் சீன நிறுவனம் தனிநபர்களை எந்த அளவிற்கு மதிப்பீடு செய்துள்ளது, அதன் கூட்டாளர்களால் உருவாக்கப்பட்ட ஹார்ட்வேரில் செலுத்தப்பட்ட நிதி முதலீடு மற்றும் தேவை எங்கள் முடிவில் இணைய சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேவை ஆகியவற்ற்றை ஆய்வு செய்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

To read this article in english

வெளியிடப்பட்ட செய்தியை துறைசார் அமைச்சகங்கள் விவாதித்து வருகின்றன. குறிப்பாக, சைபர் சட்டங்கள் மற்றும் இணைய பாதுகாப்பிற்கு சிறப்பு பிரிவை வைத்திருக்கும் தகவல்தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையும் விவாதம் செய்து வருகிறது. இந்த செயல்பாட்டின் நோக்கத்தை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் தரவுகளும் ஆய்வு செய்யப்பட்டிருப்பதால், அரசு தரப்பு என்ன கூறுகிறது என்பதை அரசியல் மட்டங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

தனித்தரவுகளை ஓப்பன் சோர்ஸ் தளங்களை அகற்றி பெறும் முறையை நிறைய நிறுவனங்கள் செய்து தான் வருகிறன. ஆனால் சீன ராணுவம் மற்றும் சீன பாதுகாப்பு ஏஜென்சிகளுக்காக வேலை செய்து வரும் ஒரு நிறுவனம் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் நோக்கம் என்ன என்பதை பற்றி ஆராய வேண்டி உள்ளது. சிறு தகவல்கள் கசிவு கூட ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் பலரும் மிக உயர்தர பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுள்ளனர். ஓப்பன் சோர்ஸில் ஒருவர் பற்றி கிடைக்கும் தரவுகள் மிகப்பெரிய சொத்தாகும். முழுமையான பட்டியலை ஆய்வு செய்து அதில் இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் காண வேண்டும்.

மேலும் படிக்க : Exclusive: பிரதமர் முதல் தலைமை நீதிபதி வரை… 10,000 இந்தியர்களை வேவு பார்க்கும் சீனா

திங்கள் கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை சீன நிறுவனம் ஒன்று வேவு பார்த்து வருவதாக செய்தி வெளியிட்டது. அவர்களின் பட்டியலில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், நீதிபதிகள், ஊடகதுறையினர், குற்றவாளிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ரியல் டைமில், சீன அரசுடன் தொடர்பில் இருக்கும் ஷென்ஹூவா டேட்டா நிறுவனம் வேவு செய்தது தெரிய வந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment