Advertisment

போலி பெயர்கள், முகவரிகள் : பீகாரின் கோவிட்19 சோதனைகளில் குளறுபடி ஏற்பட்டது எப்படி?

சுகாதாரத்துறையிடம் இருந்து எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. ஏன் என்று புரியாமல் இருந்தேன்

author-image
WebDesk
New Update
False phone numbers, fake names: How Bihar Covid testing data got infected

Santosh Singh 

Advertisment

False phone numbers, fake names: How Bihar Covid testing data got infected : பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்களில் 588 நபர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் நெகடிவ் என்று சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், வயது, மற்றும் அலைபேசி எண் அனைத்தையும் பட்டியலிட்டு பாட்னாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றின் குறைவை அறிய அங்கே தான் அனைத்து மாவட்டங்களின் தரவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்த மூன்று நாள் பட்டியல்களில் ஏதோ குளறுபடி உள்ளது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிச்சப்படுத்தியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜமுய், ஷேய்க்பூரா மற்றும் பாட்னாவில் உள்ள 6 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றது. ஜமுயில், அந்த மூன்று நாட்களில் பதிவாகியுள்ள 588 நபர்களின் விபரங்களையும் சேகரித்து விசாரித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். சில மருத்துவமனை ஊழியர்களிடம் பேசிய போது எவ்வாறு ஒரு நாளுக்கான இலக்கை அடைய தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அறிந்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

அந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அதிகாரப்பூர்வ தரவுகளில் இருந்து சில முக்கியமான முறைக்கேடுகள் கண்டறியப்பட்டன. ஜமுயில் உள்ள பர்ஹத்தில் நடந்ததாக கூறப்படும் 230 சோதனைகளில் 12 நபர்கள் மட்டுமே அந்த சோதனையை உறுதி செய்துள்ளனர். சிகந்தரா பி.எச்.சி.யில் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் 208 நபர்களில் 43 நபர்கள் மட்டுமே அதனை உறுதி செய்துள்ளனர்.  ஜமுய் சதரில் 150 பேருக்கு சோதனை செய்யப்பட்டதாக கூறிய நிலையில் 65 நபர்கள் மட்டுமே அதனை உறுதி செய்துள்ளனர்.

பர்ஹத்தில் 14 சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் எண்கள் மற்றும் ஜனவரி 16ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர்களின் செல்போன் எண்கள் அனைத்தும் உபயோகத்தில் இல்லாதவை. ஜனவரி 25ம் தேதி நடத்தப்பட்டதாக கூறப்படும் சோதனையில் 13 நபர்களின் தொலைபேசி எண்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சிகந்த்ராவில் 16 சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட எண்கள் போலியானவை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை ஏற்க முடியாது – மோடி

26 நபர்களில் ஒருவருக்கு மட்டும் ஆர்.டி.-பி.சி.ஆர் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த நபர் பங்காவில் உள்ள சம்புகஞ்ச் பகுதியை சேர்ந்த தினக்கூலி செய்யும் பைஜூ ரஜக் என்று தெரிய வந்துள்ளது. இவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என்னுடைய குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா சோதனை எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த 26 நபர்களில் 11 நபர்கள் ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள். அவர்களின் பாதுகாப்பு கருதி பெயர்கள் மற்றும் அலைபேசி எண்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 25ம் தேதி அன்று சேக்பூராவில் உள்ள பார்பிகாவில் சோனாலி குமாரி மற்றும் அஜீத் குமார் ஆகியோருக்கு கொரோனா சோதனையில் எதிர்மறையாக முடிவுகள் வந்ததாக கூறப்படுகிறது. அந்த எண்களில் அவர்களை தொடர்பு கொண்டு பேசமுற்பட்ட போது விஜயகுமார் என்ற இனிப்புக்கடை உரிமையாளருக்கு சென்றது. அவர் உ.பியில் உள்ளார். எனக்கும் அந்த நபர்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்த அவர், பிகாருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், நான் கொரோனா டெஸ்ட் ஏதும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டின் மத்தியப் பகுதியில் பெருந்தொற்று மிகவும் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் 20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாருக்கு திரும்பினார்கள். மிகவும் மோசமாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இதுவரையில் 2,61,447 நபர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 754 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,518 நபர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

பாட்னாவில் இதான் இதுவரையில் 52 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜமுய் மற்றும் ஷேக்புரா பகுதிகளில் சில நேரங்களில் சோதனைகளுக்கு தரப்பட்ட எண்கள் வேறு யாருக்கோ செல்கிறது. சில நேரங்களில் வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருக்கும் நபர்களின் எண்களாக உள்ளது. சில நேரங்களில் ஒரே எண்களின் கீழ் பலரின் பெயர்கள் காணப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தங்களின் எண்களையே பயன்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.

சேக்புராவில் உள்ள ஆரம்ப சுகாதார ஊழியர் தர்மேந்திர குமார் அவருடைய போன் நம்பர் ஜனவரி 16ம் தேதி அன்று சோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் 6 நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் நான் கொரோனா பிரிவில் வேலை பார்க்கவில்லை. ஆனால் நான் ஆரம்ப சுகாதார ஊழியர். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.

மாநில அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, கோவிட் சோதனைக்கு பொறுப்பானவர்கள், பி.எச்.சி பணியாளர்கள் பி.எச்.சி கணக்காளர்கள், பி.எச்.சி மருத்துவ அதிகாரிகள், தடுப்பு சுகாதார மேலாளர்கள், தொகுதி கணக்கு மேலாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட அதிகாரிகள் ஆகியோர் தான். ஒரு மாவட்டத்தில் நடத்தப்படும் அனைத்து சுகாதார திட்டங்களுக்கும் சிவில் சர்ஜன் பொறுப்பேற்கிறார்.

"செப்டம்பர் முதல், எங்களுக்கு கிடைக்கும் பெயர்கள் மற்றும் எண்களை பட்டியலில் நிரப்புகின்றோம். ஏனென்றால் தினசரி இலக்கை அடைய அல்லது நெருங்குவதற்கான அழுத்தத்தில் நாங்கள் இருக்கிறோம்," என்று ஜமுயியில் உள்ள ஒரு பி.எச்.சி ஊழியர் கூறினார்.

முங்கர் மாவட்டத்தின் அசர்கஞ்ச் பாத் கிராமத்தைச் சேர்ந்த தினக் கூலியான திலீப் தாஸ் மொபைல் எண் 22 நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக ஜனவரி 16 ஆம் தேதி பதிவுகள் காட்டுகின்றன. அவற்றில் எதுவும் தனக்குத் தெரியாது என்று தாஸ் கூறுகிறார். "பட்டியலில் உள்ள 21 பேருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது எண் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறினார்.

ஜனவரி 15ம் தேதி அன்று 19 நபர்களுக்கு தன்னுடைய எண் பயன்படுத்தப்பட்டதை லக்‌ஷ்மிப்பூரை சேர்ந்த மாணவர் அறிந்து ஆச்சரியப்பட்டார். கிரன் தேவி என்ற பெண்ணுக்கு தன்னுடைய மொபைல் எண் எவ்வாறு 13 நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறினார்.

உள்ளூர் பள்ளி ஒன்றில் பணியாற்றும் கபில்தியோ ரவிதாஸ் என்ற ஆசிரியர் தன்னுடைய எண் 10 நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். மேலும் நாங்கள் பல அரசாங்க திட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பதால் எண்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். நான் நிச்சயமாக இது குறித்து ஜமுயின் சிவில் சர்ஜனிடம் புகார் அளிப்பேன் என்று கூறினார்.

ஜனவரி 16ம் தேதி அன்று ஆண்டிஜென் எடுத்துக் கொண்ட முகமது ரியாசத் ஜனவரி 18ம் தேதி அன்று ஆர்.டி. பி.சி.ஆர் எடுத்துக் கொண்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் கொடுத்ததாக கூறப்படும் எண்ணில் சதேந்திர யாதவ் என்ற காயாவை சேர்ந்த தினக்கூலி ஒருவர் பேசினார். தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக கூறிய அவருக்கு எப்படி அவருடைய எண் ஜமுய்க்கு சென்றது என தெரியவில்லை என்று கூறினார்.

அனில் பாண்டே என்ற சுல்தான்கஞ்ச் பகுதியை சேர்ந்த விவசாயின் எண் மூன்று நபர்களுக்கு தரப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையிடம் இருந்து எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. ஏன் என்று புரியாமல் இருந்தேன். இப்போது தான் தெரிகிறது என்னுடைய எண் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று என அவர் கூறினார்.

இந்த முரண்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டபோது, ஜமுய் மாவட்ட திட்ட மேலாளர் (டிபிஎம்) சுதான்ஷு லால் “கோவிட் சோதனை தரவு மோசடி குறித்து எங்களுக்கு சில புகார்கள் வந்துள்ளன. பர்ஹாட் பி.எச்.சி மருத்துவ அதிகாரியின் சம்பளத்தையும் நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் விசாரணையில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் ” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சேக்பூராவின் டி.பி.எம். ஷ்யாம் குமார் நிர்மல், “ ஆரம்ப காலங்களில் சில நபர்கள் அவர்களின் அலைபேசி எண்களை தரவில்லை. ஆனால் எவ்வாறு உ.பி.யில் இருப்பவர்களின் எண்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை குறித்து ஆராய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, ப்ரத்யாய அம்ரிதி, பீகார் சுகாதாரத்துறையின் தலைமை செயலாளர், இது தொடர்பாக அனைத்து வழிகளிலும் நாங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வோம். நாங்கள் சிவில் சர்ஜன்களிடம் இது போன்று எவ்வாறு நடைபெற்றது என்று கேள்வி எழுப்பி வருகின்றோம் என்று கூறினார்.

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment