Former Prime minister Atal Bihari Vajpayee first death anniversary : இந்தியாவின் முன்னாள் பிரதமராக பொறுப்பு வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி உயிரிழந்தார். அவர் இறந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில் டெல்லியில் இருக்கும் அவருடைய நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும், அமைச்சர்களும், பாஜகவினரும் தங்களின் அஞ்சலியை செலுத்தினர். இந்நிகழ்வில் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகளான நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிஹாரிக்காவும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிக்க : வாஜ்பாய் அஸ்தி: சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் கரைப்பு
Former Prime minister Atal Bihari Vajpayee first death anniversary
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகின்றோம். அவருடைய வார்த்தைகளும் எண்ணங்களும் இன்றும் வாழ்கின்றன. அவர் நாட்டுக்காக அளித்த அர்பணிப்புகளை என்றும் நினைவில் கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
Venkaiah Naidu Tweet
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய வாஜ்பாய் குறித்த நினைவுகளை பதிவு செய்துள்ளார். அதில் வாஜ்பாய் இந்தியாவில் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி, மக்களின் வாழ்வு முறையையும் மாற்றினார். நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அஞ்சலி
உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/ECED7KjVUAESMej-1-1024x767.jpg)
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி
மத்திய அமைச்சர் பதல் ட்வீட்
உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஸிம்ரத் கௌர் பதல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “வாஜ்பாயின் தலைமை, கவிதை நயம் கொண்ட மனம், நல்ல பண்புகள் அவரை அரசியலில் உயர்வான இடத்தில் வைத்திருந்தது. அந்த தலைவனுக்கு நான் தலை வணங்குகின்றேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.