ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக விவசாயிகள்? அமராவதியில் 144 தடை உத்தரவு!

நாங்களாகவே முன் வந்து 32 ஏக்கர் நிலத்தை தலைநகராக அமைப்பதற்கு கொடுத்தோம். ஆனால் புதிய திட்டங்கள் எங்களை கவலை கொள்ள செய்கிறது - விவசாயிகள் வருத்தம்...

Farmers from Amaravathi protest against YS Jagan Mohan Reddy’s new proposal : ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகர்களை கொண்டு வர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்து சென்ற நாளில் இருந்து இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகரமாக ஐதராபாத் இருந்து வருகிறது. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் தனியாக தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது சந்திரபாபு நாயுடு அமராவதி நகருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதனை தலைநகர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

Farmers from Amaravathi protest against YS Jagan Mohan Reddy’s new proposal

ஆனால் தற்போது அமராவதி மட்டுமில்லாமல் கர்னூல் மற்றும் விசாகபட்டினம் பகுதிகளையும் தலைநகராக மாற்ற வேண்டும் என்று அறிவித்தார். இப்படி செய்தால் நிர்வாகத்தை சீராக வழிநடத்த முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கிருஷ்ணா நதிக்கரையை ஒட்டியிருக்கும் கிராமங்களில் இருந்து பல்வேறு விவசாயிகள் ஜெகன் மோகனின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அமராவதியில் அமைக்கப்பட்டிருக்கும் தலைமை செயலகம் மற்றும் ஆந்திரபிரதேசம் ஹை கோர்ட் ஆகியவற்றை இடம் மாற்றுவதற்கு எதிராக அவர்கள் நேற்று தடேபள்ளி, மங்களகிரி, துல்லூர், உந்தவள்ளி, பெனுமக்கா, மந்தனம், பெத்தபுடி ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

நாங்களாகவே முன் வந்து விவசாயம் கொழிக்கும் 32 ஏக்கர் நிலத்தை தலைநகராக அமைப்பதற்கு கொடுத்தோம். ஆனால் புதிய திட்டங்கள் எங்களை கவலை கொள்ள செய்கிறது என்றும், இதனால் இந்த திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடைக்கால உயர் நீதிமன்றம், தலைமை செயலகம், மற்றும் சட்டமன்றத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை – மூவர் பலி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close