Advertisment

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, அமெரிக்காவுடன் இணையும் சீனா!

பயங்கரவாத குழுவுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்க பாகிஸ்தான் முயற்சி எடுக்காததால் அந்நாட்டினை க்ரே லிஸ்ட்டில் வைக்க வேண்டும் என உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FATF China joins India, US, and European countries

FATF China joins India, US, and European countries

Shubhajit Roy

Advertisment

FATF China joins India, US, and European countries : சீனா மற்றும் சௌதி அரேபிய நாடுகள், பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைய உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தல் மற்றும் பணமோசடிக்கு எதிரான தனது உறுதிப்பாட்டினை நிதி நடவடிக்கை பணிக்குழுவிற்கு ( Financial Action Task Force (FATF)) வழங்க வேண்டும் என்பதை பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த இந்த நாடுகள் ஒன்றிணைந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு, ஜூன் மாதத்தில் இந்த அமைப்பின் முழுமையான அமர்வில் தீவிரவாத தலைவர்களை தண்டித்தல் மற்றும் வழக்கு தொடங்குதல் தொடர்பாக ஆலோசனை துவங்குவதற்கு முன்பு முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

இன்றைய சூழலில் பாகிஸ்தானுக்கு துருக்கி மட்டும் தன்னுடைய ஆதரவை தந்துள்ளது. ஆனால் FATF-வில் எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவை அளித்து வந்த சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இப்போது “கிரே” பட்டியலில் இருக்கும் பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிராக முறையான முடிவுகளை மேற்கொள்ளாவிட்டால் வருங்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

To read this article in English

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று (20/02/2020) வெளியாகலாம். கடந்த ஆண்டு மகாபலிபுரத்தில் நடைபெற்ற இரண்டாம் முறைசாரா மாநாட்டின் போது மோடியும், ஜிங்பிங்கும் சேர்ந்து ”பயங்கரவாதம் இருநாடுகளுக்கும் பொதுவான எதிரியாக உள்ளது. இந்தியாவும் சீனாவும் மிகப்பெரிய நாடுகள். பன்முகத்தன்மை கொண்டவை. பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் நிதி அளிப்பது ஆகியவற்றிற்கு எதிரான கட்டமைப்பை வலுப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்” என்றும் அவர்கள் கூறினர்.

மக்களையும் உலகநாடுகளையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ஊடகங்களின் வாயிலாக எஃப்.ஏ.டி.எஃப். செயல்பாடுகளை தவறாக சித்தகரித்துவருகிறது பாகிஸ்தான். இத்தனை முயற்சிகள் மேற்கொண்ட போதும் பாகிஸ்தான் அதன் க்ரே பட்டியலில் தான் இருக்கிறது. வருங்காலத்தில் இந்த பட்டியலில் இருந்தே பாகிஸ்தான் நீக்கப்படாமல் இருப்பதை அந்த நாடு தான் உறுதி செய்ய வேண்டும். ஜூன் 2020-க்குள் FATF கூறியுள்ள நடவடிக்கைகளில் மீதம் இருக்கும் 13-யும் மேற்கொள்ள வேண்டும் என்று FATF உறுப்பினர்கள் அனைவரும் (துருக்கி நீங்கலாக) பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளனர்.

எஃப்.ஏ.டி.எஃப் நடவடிக்கைகள் அனைத்தும் தவறானவை என்று நிரூபிக்க வெகு ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. துருக்கி மற்றும் மலேசிய தலைவர்களின் சமீபத்திய அறிக்கை அதனை உறுதி செய்தது. இதனை எஃப்.ஏ.டி.எஃப். உறுப்பினர்கள் இதனை கவனிக்க வேண்டும் என்று FATF உறுப்பினர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் அறிவித்துள்ளார். எஃப்.ஏ.டி.எஃப் இந்த ஆண்டு அமர்வு நிகழ்வதற்கு முன்பு, பாகிஸ்தானின் வழக்கினை மறுசீராய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ”பயங்கரவாத குழுவுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்க பாகிஸ்தான் முயற்சி எடுக்காததால் பாகிஸ்தானை க்ரே லிஸ்ட்டில் வைக்க வேண்டும்" என்று பரிந்துரை செய்துள்ளது.

மேலும் படிக்க : இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க 15 ஆவணங்களும் போதவில்லை… என்.ஆர்.சியில் நீடிக்கும் குழப்பம்!

India China Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment