தீபாவளி பட்டாசு வெடிக்கத் தடை : உச்ச நீதிமன்றம் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்திருக்கிறது. அதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்து மக்களுக்கு அறிவித்திருக்கிறது மாநில அரசுகள்.
மேலும் படிக்க : தமிழகத்தில் பட்டாசு வெடிக்க வேண்டிய நேரம்
தீபாவளி பட்டாசு வெடிக்கத் தடை : உத்தரவை மீறியதால் தந்தை கைது
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படும் என்று கருதி உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்ற நிலையில் டெல்லியில் வசிக்கும் தமன்தீப் என்பவர் வீட்டில் பட்டாசு வெடித்துள்ளனர். தமன்தீப் வீட்டில் கடந்த வருடம் வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை அவரின் மகன் வெடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமன்தீப்பின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துளார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையினர் தமன்தீப்பினை கைது செய்துள்ளனர். மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் குறித்து டெல்லி எங்கும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி சதார் பஜாரில் 625 கிலோ பட்டாசுகளும், சுப்ஷி மாண்டியில் 11 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : பட்டாசு என்றாலே சிவகாசி பட்டாசுகள் தான்