scorecardresearch

Fincen Files : தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய தாவூத் இப்ராஹிமின் ஃபைனான்சியர்!

இவருக்கும் லஷ்கர் – தொய்பா, அல் – கொய்தா, மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்பும் அம்பலப்படுத்தப்பட்டது.

Fincen Files : தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய தாவூத் இப்ராஹிமின் ஃபைனான்சியர்!

 Ritu Sarin

FincenFiles :  அமெரிக்காவின் தி ஃபினான்சியல் க்ரைம்ஸ் என்ஃபோர்ஸ்மெண்ட் நெட்வொர்க் (FinCEN), பண மோசடி சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஒரு அமைப்பாகும். பாகிஸ்தானை சேர்ந்த அடால்ஃப் கணானி என்பவர் நடத்தும், செழிப்பான பணமோசடி வலைதளம் ஒன்றை கண்டறிந்துள்ளது. இவர், தேடப்பட்டு வரும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமின் மிக முக்கியமான ஃபினான்சியர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் குறித்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி தாக்கல் செய்த சந்தேகத்திற்குரிய செயல்பாட்டு அறிக்கைகளை (Suspicious Activity Reports (SARs) ) விசாரனை செய்து வெளியிடுகிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்த சார்ஸ் அறிக்கையில், கணானியின் பணமோசடி அமைப்பான (MLO) மற்றும் அல்ஜரூணி எக்ஸ்சேஞ்ச் அமைப்பின் பண வர்த்தகம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக கணானி மற்றும் அவருடைய எம்.எல்.ஒ அமைப்பும் இணைந்து தோராயமாக 14 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 16 பில்லியன் அமெரிக்க டாலர் வரை போதைப் பொருள் கடத்துபவர்கள், தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா, ஹெஸ்புல்லா, மற்றும் தாலிபான் போன்ற அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.

To read this article in English

செப்டம்பர் மாதம் 11ம் தேதி, 2015ம் ஆண்டு கணானி பனாமா விமான நிலையத்தில், ரகசிய நடவடிக்கைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மியாமி சிறையில் அடைக்கப்படார். அவருடைய சிறைவாசம் ஜூலை 2020-ல் நிறைவடைகிறது. அவர் அமெரிக்க இமிக்கிரேசன் அதிகாரிகளிடம் நாடுகடத்தலுக்காக ஒப்படைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தார். ஆனால் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டாரா அல்லது அமீரகத்திற்கு அனுப்பப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

கணானி கைது செய்யப்பட்ட பிறகு அவருக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்ட பிறகு, தாவூத் இப்ராஹிமுடனான கணானியின் உறவு குறித்து அமெரிக்காவின் ஆஃபிஸ் ஆஃப் ஃபாரின் அசெட்ஸ் கண்ட்ரோல் (Office of Foreign Assets Control (OFAC)) ஆவணப்படுத்தியது.

டிசம்பர் மாதம் 11ம் தேதி, 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், “கணானியின் எம்.எல்.ஒ நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து பில்லியன் கணக்கில் தீவிரவாத இயக்கங்கங்களுக்கும், போதை பொருள் கடத்தல்க்காரர்களுக்கும், குற்றவாளிகள் அமைப்பிற்கு பணத்தை சேகரித்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், அல்டாஃப் கணானி, கணானி எம்.எல்.ஓ மற்றும் அல் சரூணி எக்ஸ்சேஞ்ச் தலைவர் தாலிபானின் இயக்கத்திற்கு நிதி மாற்றம் செய்துள்ளார். இவருக்கும் லஷ்கர் – தொய்பா, அல் – கொய்தா, மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்பும் அம்பலப்படுத்தப்பட்டது.

FinCEN Files , FinCEN Files leaked

கணானிக்கும் தாவூத் இப்ராஹிமிற்கும் இடையே இருக்கும் தொடர்பு மற்றும் கணானியால் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டது என்பதை ஒ.எஃப்.ஏ.சியில் குறிப்பிடப்பட்டிருந்ததை திருப்புமுனையாக பார்த்தது இந்திய புலனாய்வு துறை. அதன்பிறகு ஒரு வருடம் கழித்து ஒ.எஃப்.ஏ.சி பொருளாதார தடை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கணானியுடன் தொடர்பில் இருக்கும் மேலும் பல தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலில் பாகிஸ்தானிற்கு வெளியே செயல்படும் கணானியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும், பண மோசடி இயக்கத்தை ஆதரிக்கும் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசகா ஜெனரல் ட்ரேடிங் எல்.எல்.சி. நிறுவனம் (Mazaka General Trading LLC) இந்த நிறுவனங்களின் பட்டியலை வழி நடத்தியது. பொருளாதார தடை விதிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன பிறகு, இந்த நிறுவனத்தின் மூலமாக கணானியின் எம்.எல்.ஓ நிறுவனம் நடத்திய நிதி ஊடுருவல்களை “மாஸ்கோ மிரர் நெட்வொர்க்” என்ற பெயரில் அம்பலப்படுத்தியது ஃபின்சென் கோப்புகள். மிரர் ட்ரேடிங் என்பது, முறைசாரா பண பரிவர்த்தனை மூலம் தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் மூலமாக பத்திரங்களை வாங்கி, லாபம் ஏதுமில்லாமல் மற்றொருவருக்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் நிதியின் அசல் மூலம் மற்றும் இறுதி இலக்கும் மறைக்கப்படுகிறது.

ஃபின்சென் கோப்புகள், உள்துறை மதிப்பீடு என்ற பெயரில் 20 பக்கங்களை கொண்ட அறிக்கையை வைத்துள்ளது. அதில் மிரர் வலையமைப்பு மற்றும் 54 நிறுவனங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய செக்யூரிட்டி மார்க்கெட் மார்க்கமாக பல்வேறு இடங்களுக்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் பரிமாற்றம் செய்ய இந்த நிறுவனங்கள் உதவியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. மசகா ஜெனரல் ட்ரேடிங் எல்.எல்.சீ நிறுவனம் மார்ச் 2013 முதல் அக்டோபர் 2016ம் ஆண்டு வரை 5 மாஸ்கோ மிரர் நெட்வொர்க் நிறுவனங்களிடம் இருந்து 49.78 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளது ஃபின்சென் உள்துறை அறிக்கை அறிவித்துள்ளது. மேலும் மசாகா சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்க் ட்ரேடிங் பி.டி.இ. நிறுவனத்திடம் இருந்து மிரர் வர்த்தகம் மூலமாக பணம் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.  பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவியல் அமைப்புகளுக்கு சட்டவிரோத நிதிகளை மோசடி செய்யும் கணானியின் பணமோசடி அமைப்புக்கு பொருள் ரீதியாக உதவி, நிதியுதவி அல்லது ஆதரவளித்ததற்காக மசகா நிறுவனம் OFAC-ஆல் பொருளாதார தடைக்கு ஆளானது.

மேலும் படிக்க : ஃபின்சென் ரகசிய ஆவணங்கள் என்றால் என்ன?

கணானியுடன் இணைந்து இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட இந்தியர்களின் இணைப்பும் இங்கு தான் கண்டறியப்பட்டது. ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, யுனைட்டட் ஓவர்சீஸ் வங்கி தரவுகள் துபாயில் இருக்கும் பேங்க் ஆஃப் பரோடா கிளை மூலாக, மசகா ஜெனெரல் ட்ரேடிங் எல்.எல்.சி நிறுவனம் அஸ்க் ட்ரேடீங் பி.டி.இ.க்கு பண பரிவர்த்தனை நடத்தியது என்பதை காட்டுகிறது. இது தவிர்த்து, மசகா நிறுவனத்தின் பணவர்த்தனைகளை ஆய்வு செய்த போது, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரங்கோலி இண்டெர்நேசனல் நிறுவனத்துடன் மசாகா வர்த்தகம் மேற்கொண்டது தெரிய வந்துள்ளது. இந்நிறுவன்னம் 2009ம் ஆண்டு டெல்லியில் துணி ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்டது.

பஞ்சாப் தேசிய வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், கார்ப்பரேசன் வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா போன்ற வங்கிகள் மூலம் 70க்கும் மேற்பட்ட பணப்பரிவர்த்தனை மூலம், ரங்கோலி இண்டெர்நேசனல் நிறுவனத்திற்கு, அமீரகத்தில் இருக்கும் நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

10.65 மில்லியன் அமெரிக்க டாலர்களை 17 நபர்கள் இந்நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் மசாகா ஜெனரல் ட்ரேடிங்கிற்கு 1,36,254 அமெரிக்க டாலர்கள் ஜூன் 18, 2014ம் ஆண்டு அன்று பஞ்சாப் தேசிய வங்கி மூலமாக அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ரெக்கார்ட்ஸ் ஆஃப் தி ரெஜிஸ்திரார் ஆஃப் கம்பெனிஸ் (ROC), ரங்கோலி நிறுவனம் 2014ம் ஆண்டு கடும் சரிவை சந்தித்தது என்றும் லாபத்தில் பெரும் வீழ்ழ்ச்சியை மார்ச் 2014ம் ஆண்டு கண்டது என்றும் கூறியுள்ளது. மேலும் ரூபாய் 333.19 கோடியை காட்டிலும் கூடுதலாக ரூ. 74.87 கோடியை இழந்தது என்று கூறியுள்ளது. 2015ம் ஆண்டில் இருந்து வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தை நடத்தவில்லை. அந்த ஆண்டு தான் கடைசியாக பேலன்ஸ் ஷீட்டை தாக்கல் செய்தது ரங்கோலி நிறுவனம்.

ரங்கோலி நிறுவனத்தின் நிலை குறித்து வங்கிகள் எச்சரிக்கைகளை வெளியிட்டது. பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா ரங்கோலி நிறுவனத்தை 2020ம் ஆண்டு கடனளிக்க வேண்டியவர் பட்டியலில் வைத்தது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, அந்நிறுவனத்தின் அசையா சொத்துகளை ஆன்லைன் மூலம் ஏலம் விடுவது குறித்து ஜூலை 2020ல் அறிக்கை வெளியிட்டது. கார்ப்பரேசன் வங்கி 2019ம் ஆண்டு ஏலம் விடுவது குறித்து அறிக்கை வெளியிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி நவம்பர் 2019 மற்றும் ஏப்ரல் 2016 இல் அடமானம் வைத்த சொத்துக்களை ஏலத்தில் விடுவது குறித்து பட்டியலிட்டது. அலகாபாத் வங்கி இந்த நிறுவனத்தை மார்ச் 2015 இல் தங்களின் முதல் 50 என்.பி.ஏக்களில் (செயல்படாத சொத்துக்கள்) பட்டியலில் வைத்தது.

கணானியின் வழக்கறிஞர் மெல் ப்ளாக்கினை தொடர்பு கொண்ட போது, ஊடகவியல் பங்குதாரர் சுடெயுட்ஸ் ஜெய்துங்கிடம் (Süddeutsche Zeitung), கணானி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, மிக நீண்ட தண்டனையை அனுபவித்தார். அதே சமயத்தில் அவருடைய சகோதரர் இறந்துவிட்டார். வீட்டில் இருந்தும் கணானி வெளியேறிவிட்டார். அவர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நிதி ரீதியாக ஆதரவற்றவராக இருக்கிறார். ஒ.எஃப்.ஏ.சி அவருடைய கணக்குகளை முடக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எந்தவிதமான தொழிலும் ஈடுபடவில்லை. எளிமையான, சட்டத்திற்கு உட்பட்ட வாழ்வை வாழ விரும்புகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க :Breaking: ஃபின்சென் ஆவணங்கள்- கிழியும் முகத்திரை, அம்பலமாகும் மோசடி நிறுவனங்கள்

இது தொடர்பாக லவ் பரத்வாஜ், ரங்கோலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் கேட்ட போது, நீங்கள் கூறும் 70 பரிவர்த்தனைகள் குறித்து எங்களிடம் ஒரு தரவும் இல்லை. எனவே அது குறித்து பதில் அளிப்பது முரண்பாடாக இருக்கும் என்று கூறினார். நாங்கள் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். பணம் பெறுவது என்பது எங்களின் விற்பனையில் வழக்கமான ஒன்றாகும். நீங்கள் கூறும் ஜூன் 18ம் தேதி, 2014ம் ஆண்டில் பஞ்சாப் தேசிய வங்கி கணக்கில் பெறப்பட்டதாக கூறப்படும் பரிவர்த்தனை தொடர்பாக எந்த தரவுகளும் எங்கள் வங்கிக் கணக்கில் பதிவாகவில்லை. ஆனால் ஜூன் 20ம் தேதி 2014ம் ஆண்டு நாங்கல் 1,36,280 அமெரிக்க டாலர்களை எங்கள் கணக்கில் பெற்றோம். மிட்ஈஸ்ட் ஸ்டார் இம்பெக்ஸ் FZE நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு கிடைக்கவேண்டிய விலைப்பட்டியல் தொடர்பானது அது. 17/9/13 அன்று சுங்க அனுமதிக்குப் பிறகு ஆயத்த ஆடைகளைக் கொண்ட சரக்கு அனுப்பப்பட்டது. அதற்கான பணம் வேல்யூ டேட்டாக ஜூன் 16, 2014ம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. எங்களின் எல்.சி. வரம்பு சரி செய்யப்பட்ட பிறகு நிலுவைத் தொகை எங்களின் வங்கிக் கணக்கில் 20/07/2014ம் தேதி வரவு வைக்கப்ப்பட்டது. எங்களுக்கும் மசாகா ஜெனரல் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இதற்கு முன்பு அந்த நிறுவனம் குறித்து அறிந்து கொண்டதும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Fincen files on us radar dawood ibrahims financier his laundering funding of lashkar jaish