First sign of trouble in SP-led camp: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் ஆரம்பமாக வெறும் ஒருவாரமே இருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியான சமாஜ்வாடி கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சி, தொகுதிப் பங்கீடுகளின் மூலம் பெற்ற தொகுதிகளை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளது. இது உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்னா தளத்தின் பிளவுக் குழுவும், என்.டி.ஏ கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) பிரதான போட்டியாளராக இருந்த அப்னா தளம் (கமேராவாடி) கூட்டணி ஒப்பந்தத்தின் படி பெற்றுக் கொண்ட 18 தொகுதிகளை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளது. இந்த 18 தொகுதிகளில் 7 தொகுதிகளின் நிலவரம் குறித்து கடந்த 29ம் தேதி அன்று தகவல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தயாராகும் ராமர் கோவில்; ஆனாலும் அயோத்தியில் பா.ஜ.க-வுக்கு சவால்
அப்னா தளத்தின் தொகுதிகளில் ஒன்றான மேற்கு அலகாபாத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமர்நாத் மௌரியா போட்டியிடுவார் என்று புதன்கிழமை அறிவித்தது தற்போது பிரச்சனையில் முடிந்துள்ளது. அதே நாளில் அப்னா தளம் கட்சியின் தலைவர் பல்லவி படேல், கௌஷாம்பி மாவட்டத்தில் உள்ள சிரத்து என்ற கட்சியில் போட்டியிடுவார் என்று கூறியது சமாஜ்வாடி. ஆனால் அவர் அப்னா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது சமாஜ்வாடியின் சின்னத்தில் நின்று போட்டியிட விரும்புகிறாரா என்று அவரிடம் கேட்காமலே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது கௌஷாம்பி மாவட்டத்தில் எஸ்.பி. வேட்பாளர்கல் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
வியாழக்கிழமை அன்று எஸ்.பி. மேற்கு அலகாபாத்தில் வேட்பாளரை களம் இறக்குவதாக அறிவித்ததை தொடர்ந்து வருத்தம் அடைந்த அப்னா தளம் தங்களுக்கு போட்டியிட வழங்கப்பட்ட 18 தொகுதிகளையும் திருப்பி அளிப்பதாக கூறியது. . ரோஹானியா மற்றும் பிண்டாரா (வாரணாசி), மரியாஹு (ஜான்பூர்), மரிஹான் (மிர்சாபூர்), கோரவல் (சோன்பத்ரா), பிரதாப்கர் சதர் (பிரதாகர்) மற்றும் அலகாபாத் மேற்கு (பிரயாக்ராஜ்) ஆகிய 7 இடங்கள் மற்றும் இதர 7 தொகுதிகளையும் விட்டுத்தருவதாக கூறியுள்ளது. சிரத்து, பிரதாப்கர் சதர் மற்றும் அலகாபாத் மேற்கு ஆகிய தொகுதிகளில் பிப்ரவரி 27 அன்று ஐந்தாம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதர தொகுதிகளில் 7ம் கட்ட தேர்தலின் போது, மார்ச் 7, அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உ.பி., தேர்தலில் ஆச்சரியமளித்த பாஜக; அகிலேஷூக்கு எதிராக மத்திய அமைச்சர் பாகேல் போட்டி
எங்களுக்கு இந்த கூட்டணியில் எந்த சச்சரவும் வேண்டாம் என்ற காரணத்தால் நாங்கள் தற்போது இந்த தொகுதிகளை சமாஜ்வாடி கட்சியிடமே திருப்பி கொடுத்துவிட்டோம் என்று கூறியுள்ளது அப்னா தளம் (கே). சமாஜ்வாடி முதலில் யாருக்கு போட்டியிட வாய்ப்புகளை எந்ததொகுதிகளில் வழங்குகிறதோ அங்கே வழங்கட்டும். எங்கு போட்டியிட வேட்பாளர்கள் இல்லையோ அந்த தொகுதியை எங்களுக்கு வழங்கட்டும் என்று அப்னா தளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பங்கஜ் நிரஞ்சன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
இத்தகைய பிரச்சனை மத்தியிலும் நாங்கள் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருப்போம் என்று தெளிவுபடுத்தியுள்ளது அக்கட்சி. பிற்படுத்த வகுப்பினரின் நலனை கருத்தில் கொண்டு, நாங்கள் ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும் கூட சமாஜ்வாடி கட்சிக்கே எங்களின் ஆதரவை வழங்குவோம் என்று நிரஞ்சன் கூறியுள்ளார்.
உ.பி.தேர்தல் 2022: பா.ஜ.க.வுக்கு கவலை அளிக்கும் வேலையின்மை, விலைவாசி; காப்பாற்றும் இலவச ரேஷன்
தங்களின் முடிவை எஸ்.பியின் மேலிடத்திற்கு உதய்வீர் சிங் மூலம் தெரிவித்துவிட்டோம். எஸ்.பியின் முடிவுக்காக காத்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார் நிரஞ்சன். இது தொடர்பாக உதய்வீர் சிங்கிடம் பேச முயன்றோம். ஆனால் அவரிடம் இருந்து எந்த விதமான பதிலும் பெறப்படவில்லை. ”இந்த விவகாரம் தொடர்பாக எனக்கு ஏதும் தெரியவில்லை. ஆனால் கூட்டணி முறியவில்லை” என்று எஸ்.பி செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி கூறினார்.
கட்சி தலைவர் அத்தகைய குழப்பத்தை நீக்க வேண்டும். இல்லையெனில், 2017ல் அப்போது கூட்டணி அமைத்த சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் சில மாவட்டங்களில் ஒரே தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது போன்ற குழப்பம் ஏற்படும் என்று பெயர் கூற விரும்பாத சமாஜ்வாடி தலைவர் கூறினார்.
முதல் இரண்டு கட்ட தேர்தல்களுக்காக ஆர்.எல்.டி. கட்சியினருடன் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அகிலேஷ் யாதவ். அதனால் மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் உரையாட கட்சித் தலைவர்களை அவர் நியமனம் செய்திருக்கிறார். ஆனாலும் இறுதி முடிவு அகிலேஷ் யாதவால் மட்டுமே எடுக்கப்படும். கட்சித் தலைவர்களுக்கு இடையே போதுமான பேச்சுவார்த்தை இல்லாமல் போனது தான் தொகுதி தொடர்பான விவகாரங்களில் முடிவை எட்ட தாமதம் ஏற்படுகிறது. SBSP இதுவரை ஐந்து இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் பாஜகவோ ஆறாவது மற்றும் ஏழாம் கட்ட தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் வரை அனைவரையும் அறிவித்துவிட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள குர்மி (OBC) வாக்காளர்கள் மத்தியிலும், கிழக்கு மற்றும் மத்திய உ.பி.யில் உள்ள முஸ்லிம்கள் மத்தியிலும், குறிப்பாக வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் மிர்சாபூர் பிரிவுகளில், அதன் போட்டிக்கட்சியான அப்னா தளத்தைக் காட்டிலும் (சோன்லால்) அப்னா தளம் (கே) கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக அக்கட்சி கூறுகிறது.
கிருஷ்ணா படேல் அப்னா தளம் (காமராவாடி) தலைவராக உள்ளார், அவரது மகள் அனுப்ரியா படேல், மத்திய NDA அரசாங்கத்தில் மத்திய அமைச்சர், அப்னா தளம் (சோனேலால்) பிரிவின் தலைவராக உள்ளார்.
இதற்கிடையில், SP தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றொரு கட்சியான ஜன்வாடி சோசலிஸ்ட் கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜே.எஸ்.பி. கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ள 12 தொகுதிகளில் அவர்கள் சமாஜ்வாடி கட்சியின் சின்னத்தில் இருந்து போட்டியிட உள்ளனர். நாங்கள் போட்டியிட இருக்கும் தொகுதிகளில் ஆறாவது மற்றும் ஏழாவது கட்டங்களிலேயே தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதுவரை வேட்பாளர்கள் பெயர் ஏதும் அறிவிக்காத காரணத்தால் கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். லக்னோவிற்கு வெள்ளிக்கிழமை அன்று அகிலேஷ் யாதவ் வருகை தந்த பிறகு இது குறித்து முடிவு எட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் சௌஹான் கூறியுள்ளார். கிழக்கு உ.பி.யின் பல்லியா, ஜான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் போன்ற 12 மாவட்டங்களில் உள்ள பிந்த் மற்றும் கேஷ்யப் சாதியினரிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது இக்கட்சி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.