“பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன்” – பாஜகவில் இணைந்த கௌதம் காம்பீர் பேட்டி

கிரிக்கெட் விளையாட்டில் செய்த சாதனைகளைப் போலவே நாட்டிற்காகவும் தற்போது பல மகத்தான காரியங்களை செய்ய உள்ளேன்

Former Cricket Player Gautam Gambhir Joins BJP
Former Cricket Player Gautam Gambhir Joins BJP

Former Cricket Player Gautam Gambhir Joins BJP  :  நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நிலையில் ஒரு சில நட்சத்திரங்கள் ஒரு சில கட்சிகளுக்கு வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரங்களில் ஈடுபடுவது உண்டு. ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இன்றிலிருந்து அவருடைய அரசியல் இன்னிங்க்ஸ் துவங்குகிறது என அனைவரும் அவரை பாராட்டி வருகின்றார்கள்.

Former Cricket Player Gautam Gambhir Joins BJP
கௌதம் காம்பீரை வரவேற்ற பாஜக தேசிய தலைவர் அமித் ஷா

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண் ஜெட்லி மற்றும் கௌதம் காம்பீர்

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கௌதம் காம்பீர். அருண் ஜெட்லி கௌதமை அறிமுகம் செய்யும் போது, “நாங்கள் ஒவ்வொரு துறையில் இருக்கும் நபர்களையும் எங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டு வருகிறோம். கிரிக்கெட்டில் ராஜாவாக வலம் வந்த கௌதமை வரவேற்கிறோ என்று கூறி, கௌதமின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சில மணித்துளிகள் பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அருண் ஜெட்லியை தொடர்ந்து பேசிய கௌதம் காம்பீர் “நான் பிரதமர் மற்றும் அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். கிரிக்கெட் விளையாட்டில் செய்த சாதனைகளைப் போலவே நாட்டிற்காகவும் தற்போது பல மகத்தான காரியங்களை செய்ய உள்ளேன்” என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் கௌதம் காம்பீர் போட்டியிடுவாரா என்று கேள்வி எழுப்பிய போது, இது குறித்து கட்சியினருடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு முடிவு செய்யப்படும் என்று கூறினார் அருண் ஜெட்லி.

மேலும் படிக்க : அமேதியில் ராகுலுக்கு போட்டியாக களம் இறங்கும் ஸ்மிரிதி  இரானி

Web Title: Former cricket player gautam gambhir joins bjp

Next Story
கேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்!CPM office
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express