former jk cm Farooq Abdullah detention cancelled : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது பிரிவை நீக்கி, இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு கடந்தாண்டு பிரித்தது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, அவரது தந்தையும், ஐந்து முறை ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவி வகித்த ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.
Former JK cm Farooq Abdullah detention cancelled
/tamil-ie/media/media_files/uploads/2020/03/ES-TdzQUEAE-hfo-675x1024.jpg)
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்
சுமார் 6 மாதங்களாக வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவலை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து சுமார் 6 மாத வீட்டு சிறைக்கு பின்னர் ஃபரூக் அப்துல்லா விடுதலையானார்.
விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, "இன்று எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன். இப்போது, நான் டெல்லிக்குச் சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உங்களுக்காக பேச முடியும்" என்று தெரிவித்துள்ளார். ஆனால், தடுப்புக்காவலில் இருக்கும் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோரது தடுப்பு காவல் ரத்து செய்யப்படவில்லை.
மகள் ட்வீட்
ஃபரூக் அப்துல்லாவின் மகள், அரசின் அறிவிப்பினை தொடர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில் என்னுடைய அப்பா மீண்டும் ஒரு சுதந்திர மனிதர் என்று குறிப்பிட்டிருந்ந்தார்.
ஃபரூக் அப்துல்லா தன்னுடைய விடுதலை குறித்து பேசிய போது “தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் தான் அது முழுமையான சுதந்திரம்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”