Four JeM militants nabbed between 2014-17 : புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் மலைஉச்சியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 350 தீவிரவாதிகள் பலியானதாகத் தகவல்கள் வெளியாயின.
கைது செய்யப்பட்ட நான்கு தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணை
ஆனால், தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பல சந்தேகங்களை எழுப்பினர். இந்நிலையில், பாலகோட் முகாமில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தொடர்பான தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் ‘மர்காஸ் சுபான் அல்லா’ என்ற பெயரில் பகாவல்பூரில் அமைந்துள்ளது. ஜெய்ஷ் தீவிரவாதிகள் இங்கு நுழைவதற்கான நுழைவாயிலாகத்தான் பாலகோட் முகாம் செயல்பட்டிருக்கிறது.
பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டிருந்த வக்காஸ் மன்சூர் என்ற பயங்கரவாதி பாதுகாப்பு படையிரனால் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவரை விசாரித்த அதிகாரி ஒருவர் பகிர்ந்திருக்கும் தகவலில் கூறியிருப்பது, “ பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட மன்சூர் உடன் 100 இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதில், 40 பேர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதம் இருந்த 60 பேர் ஆப்கானிஸ்தானி போரில் ஈடுப்பட அனுப்பபட்டனர் என்றார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற 2 முக்கியமான தாக்குதலில் ஈடுபட்டவர் மன்சூர். 2009ம் ஆண்டு மார்ச் மாதம், குப்வாரா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி அதில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்பு 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 6 ராணுவ வீரர்களை இவர் கொலை செய்திருக்கிறார். அதன் பின்பு மன்சூர் 2010ம் ஆண்டு பாகிஸ்தானில் சென்று லஷ்கர் ஈ தொய்பாவில் சேர்ந்தார்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தொடர்பான முழுமையான ஆவணங்களை பாகிஸ்தானின் தலைநகருக்கு இந்தியா அனுப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் தொடர் விசாரனை நடைபெற்று வருகிறது. மூன்று மாத பயிற்சிக்கு தௌரா-இ-காஷ் மற்றும் 6 மாத பயிற்சிக்கு தௌரா அல் ராத் என்று பெயர். இந்த தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் அவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2016ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரெஹ்மான் முகாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோட் வேர்ட் கண்டு பிடிக்கப்பட்டது. ரோமியோ என்ற பெயரில் காஷ்மீரில் தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டவந்தவர் அவர். தற்கொலைப்படை தாக்குதல் தீவிரவாதியாக மாறுவதற்கு பாலகோட்டில் அமைந்திருக்கும் தீவிரவாத அமைப்பிற்கு எழுத்துப்பூர்வ ஒப்புகை அளிக்க வேண்டும் என்று விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
நஷிர் முகமது அவைன் என்ற தீவிரவாதியிடம் விசாரணை செய்த போது பாலகோட் பகுதியில் சுமார் 80 பயிற்சியாளர்கள் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துவருகின்றனர். இவர் 2014ம் ஆண்டு காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். 2003 ரேடியோ காஷ்மீர் தாக்குதலிலும், இரண்டு ராணுவ வீரர்களின் மரணத்திற்கும் இவர் காரணம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் பிறந்து வளர்ந்த தீவிரவாதி முகமது சாஜித் குஜ்ஜார் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தங்தார் பகுதியில் நவம்பர் மாதம் 3ம் தேதி 2015ம் ஆண்டு ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினார். இவருடன் தாக்குதலில் ஈடுபட்ட 3 கலகக்காரர்கள் உயிரிழந்தனர். இவர் மட்டும் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நபர்களும் பாகிஸ்தானியர்கள். பாலகோட்டில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஒரு ரபேல் போர் விமானம் இருந்திருந்தால் விளைவுகள் வேறாக இருந்திருக்கும் - நரேந்திர மோடி