ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை

Vikas Dubey Encounter Update: அப்போது போலீஸாரிடம் துப்பாக்கியை பிடுங்கி சுட்டுவிட்டு விகாஸ் தப்ப முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது

By: Updated: July 10, 2020, 10:53:31 AM

Vikas Dubey Encounter: மத்தியபிரதேச மாநிலத்தில் கைதான ரவுடி விகாஸ் துபே போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இருந்து கான்பூருக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், ரவுடி விகாஸ் துபே வெள்ளிக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அழைத்துச் சென்ற போது, போலீஸ் கான்வாயில் கார் ஒன்று கவிழ்ந்தது. துபே துப்பாக்கியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் ஜான்சி மற்றும் கான்பூர் இடையே நடந்தது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உறுதிப்படுத்தியது.


உஜ்ஜைனில் மகாபலேஷ்வர் கோயிலில் இருந்து வியாழக்கிழமை துபே கைது செய்யப்பட்டார். கான்பூர் அருகே உள்ள அவரது கிராமமான பிக்ருவை போலீசார் சோதனை செய்ய முயன்றபோது, ஜூலை 3 முதல் துபே தலைமறைவானார். அப்போதிருந்து, அவரது தனிப்பட்ட மெய்க்காப்பாளர் உட்பட அவரது நெருங்கிய உதவியாளர்களில் 5 பேரை காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து உஜ்ஜைனில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து ரவுடி விகாஸிடம், மத்திய பிரதேச போலீஸார் 10 மணி நேரம் விசாரணை செய்தனர். பிறகு காணொலிக்காட்சிகள் மூலம் விகாஸ் உஜ்ஜைன் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

விபத்துக்குள்ளான கார் (படம்: ANI)

துபே கைது குறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவித்தார். ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து சாலை வழியாக உஜ்ஜைனிக்கு துபே வந்ததாக மிஸ்ரா கூறினார். “உளவுத்துறை விஷயங்களை வெளியிடக்கூடாது. (மகாகலேஷ்வர்) கோயிலுக்கு உள்ளே அல்லது வெளியே அவர் கைது செய்யப்பட்டாரா என்பது முக்கியமற்றது. அவர் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார் என்று சொன்னால் போதுமானது” என்று மிஸ்ரா கூறினார்.

உஜ்ஜைன் காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் நள்ளிரவு செய்தியாளர் கூட்டத்தில், போலீஸ் நடவடிக்கை “தெளிவானது மற்றும் வெளிப்படையானது” என்று கூறினார். கோயிலில் பூக்களை வாங்கிய நபரால் துபே அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார். விற்பனையாளர் ராஜேஷ் குமார், ரவுடி தூபேவின் படங்களை டிவியில் பார்த்திருந்தார்.

கோயிலில் வி.ஐ.பி தரிசனத்திற்காக துபே ரூ .250 டிக்கெட் வாங்கியதாக எஸ்.பி. கூறினார். துபே கோயிலில் இருந்து வெளியேறும்போது, ​​பாதுகாப்புப் படையினர் அவரது பெயரைக் கேட்டபின் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை காவலர்கள்போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர், அங்கு அதிகாரிகள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

ஒரு மோசமான கிரிமிலான துபே மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட சுமார் 60 வழக்குகள் இருந்தன. ஒரு மோசமான கிரிமிலான துபே மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட சுமார் 60 வழக்குகள் இருந்தன

பின்னர், உ.பி. போலீஸ் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) உஜ்ஜைனை அடைந்து துபேவை காவலில் எடுத்தது.

மூத்த காவல்துறை அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், துபே ஒரு “என்கவுன்டரில்” காவல்துறையினரால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக தானாகவே கைதாக திட்டமிட்டிருக்கலாம் என்று கூறினார்.

“எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன, கோவில் வளாகத்திற்குள் தனியார் பாதுகாப்பு காவலர்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல மாட்டார்கள். வேறு எங்கும் காவல்துறை முன் சரணடைவது அவருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கும் ”என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

விகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்

ஜூலை 2 மற்றும் 3 தேதிகளில் நடந்த சோதனையின் போது, துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மூன்று சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட எட்டு போலீஸ் அதிகாரிகள் துபேவால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒரு மோசமான கிரிமிலான துபே மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட சுமார் 60 வழக்குகள் இருந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Gangster vikas dubey shot dead police claim he tried to flee

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X