விகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்

உத்தரபிரதேசத்தில் விகாஸ் துபே மீது 62 கிரிமினல் வழக்குகள் உள்ளன, இதில் ஐந்து கொலை வழக்குகள் மற்றும் எட்டு கொலை முயற்சிகள் வழக்குகள் அடக்கம்

By: July 10, 2020, 10:51:08 AM

2001 ஆம் ஆண்டில், விகாஸ் துபே, உ.பி.யில் மாநிலத் அமைச்சராக இருந்த பாஜக தலைவரான சந்தோஷ் சுக்லாவை கான்பூர் தேஹாட்டில் உள்ள சிவ்லி காவல் நிலையத்திற்குள் துரத்திச் சென்று பட்டப் பகலில் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

எஃப்.ஐ.ஆரில் துபேபெயர் இருந்தது, அவர் ஆறு மாதங்களுக்குப் பிறகு சரணடைந்தார் – ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட நபரின் பாதுகாவலர், தனி உதவியாளர் துபேக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தனர்.


அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1999 இல், துபே தனது கிராமத்தில் ஒரு ஜுன்னா பாபாவைக் கொன்றதாகவும், அவரது நிலத்தையும் பிற சொத்துக்களையும் அபகரித்ததாகவும் கூறப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில், அவர் தனது ஆசிரியர் மற்றும் உள்ளூர் தாரா சந்த் இன்டர் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை

சந்தோஷ் சுக்லாவின் கொலை துபேவிற்கு பெரும் ரவுடி எனும் அந்தஸ்தைக் கொண்டுவந்தது, அவருக்கு அரசியல் ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டில், அவர் தனது போட்டியாளரான நகர் பஞ்சாயத்து ஆத்யக்ஷா லல்லன் பாஜ்பாயை கொலை செய்ய முயன்று அது தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 20,000 ரூபாய் தகராறு காரணமாக, கேபிள் ஆபரேட்டர் தினேஷ் துபே என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும் துபேவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

2006 இல் கொடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில், துபே தான் 10 ஆண்டுகளாக பிக்ரு கிராமத்தின் தலைவராக உள்ளதாக கூறினார், அதன் பிறகு அவர் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினரானார், அதே நேரத்தில் அவரது தம்பி அருகாமையில் உள்ள பீதி கிராமத்தின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சகோதரரின் மனைவி அப்போது ஒரு பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு துபே சகோதரர் பிக்ரு கிராமத்தின் தலைவர் ஆனார்.

கான்பூருக்கு அருகிலுள்ள பிக்ரு தான் துபேவின் சொந்த கிராமம். ஜூலை 2-3 இரவில் அவரைக் கைது செய்யச் சென்ற போலீஸ் படையைச் சேர்ந்த எட்டு பேர், துபேவின் ஆட்களால் கொலை செய்யப்பட்டனர். இதனால், வியாழக்கிழமை உஜ்ஜைனியில் துபேயின் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் துபே மீது 62 கிரிமினல் வழக்குகள் உள்ளன, இதில் ஐந்து கொலை வழக்குகள் மற்றும் எட்டு கொலை முயற்சிகள் வழக்குகள் அடக்கம். அவருக்கு எதிராக உ.பி. கேங்க்ஸ்டர்ஸ் சட்டம், கூண்டா சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை போலீசார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

சஹரன்பூர் மற்றும் லக்னோவில் தலா ஒரு வழக்கு தவிர, அனைத்து வழக்குகளும் கான்பூர் மற்றும் கான்பூர் தேஹாட் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டன. சஹரன்பூரில், துபே மீது போதை மருந்து மற்றும் Psychotropic Substances Act சட்டத்தின் கீழும், லக்னோவில் ஆயுத சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சஹரன்பூர் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார், அதே நேரத்தில் லக்னோ வழக்கு நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

நபர் ஒருவரை தாக்கியதற்காக, 1990ம் ஆண்டு கான்பூர் தேஹாட்டில் உள்ள சிவ்லி காவல் நிலையத்தில் துபே மீது முதன் முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிவலி காவல் நிலைய பகுதியில் ஒரு தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

2002 ல் சந்தோஷ் சுக்லாவின் கொலையில் போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர், மேலும் துபே மற்றும் மூன்று போலீசார் உட்பட எட்டு குற்றவாளிகளை பெயரிட்டனர். “2003 ஆம் ஆண்டில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூர் நீதிமன்றத்தால் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். 2005 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கின் நிலையை சரிபார்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று உ.பி. டிஜிபி எச் சி அவஸ்தி கூறினார்.

2000 ல் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் சித்தேஷ்வர் பாண்டே (65) கொலை செய்யப்பட்ட வழக்கில், துபே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றப்பத்திரிகையில் துபே உட்பட நான்கு நபர்கள் பெயரிடப்பட்டனர். “2004 ஆம் ஆண்டில் ஒரு உள்ளூர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது. அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்” என்று சிவ்லி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Who is vikas dubeys history of vikas dubey how many cases on vikas dubey

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X