7 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுடன் நடத்தப்படுமா பொதுத்தேர்தல் ? என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம் ?

சிக்கிம், அசாம், ஹரியானா, மகாராஷ்ட்ரா, அருணாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், ஒடிசா மாநிலங்கள் தேர்தலுக்கு தயாராகின்றது…

Lok Sabha election nomination begins tomorrow
Lok Sabha election nomination begins tomorrow

பொதுத் தேர்தல் 2019 தேர்தல் எப்போது ? : 2014ம் ஆண்டு இந்தியாவில் 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தாண்டுகள் முடிவற்ற நிலையில், இந்த வருடம் ஏப்ரல் முதல் மே மாதம் வரை 9 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 7 மாநில சட்டப் பேரவை தேர்தல் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

மேலும் படிக்க : மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடுகிறார் பிரகாஷ் ராஜ்

பொதுத் தேர்தல் 2019 தேர்தல் எப்போது ?

ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீர், மகாராஷ்ட்ரா, மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் சட்டப்பேரவையின் பதவி காலமும் நிறைவடைகிறது.

எனவே இந்த சட்டப்பேரவை தேர்தல்களும் , மக்களவைத் தேர்தல்களுடன் நடத்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.  மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால், தேர்தல் செலவுகள் வெகுவாக குறையும் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 7 அல்லது 8 தேதிகளில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறலாம்.

7 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலங்கள் முடிவடையும் தினங்கள் ?

22.3 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், 17.3 லட்சம் வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் மற்றும் 10.6 லட்சம் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களின் பேரவைக் காலம் ஜூன் 18, ஜூன் 11, மற்றும் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைகிறாது. சிக்கிம் – மே 27, மகாராஷ்ட்ரா நவம்பர் 9 மற்றும் ஹரியானா நவம்பர் 2 தேதிகளில் பேரவை நிறைவடைகிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: General elections are due to be held in india between april and may

Next Story
ஹிமாச்சல் டூர் போக பிளான் போட்டவர்களுக்கு IRCTC கொடுக்கும் வாய்ப்புIRCTC Himachal Tour Package
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com