கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று காலமானார்.
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் கோவாவின் முதல்வராகவும் பதவி வகித்தவர் மனோகர் பாரிக்கர். கணைய நோய் காரணமாக, மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இதைத் தொடர்ந்து அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இது தொடர்பான முழுமையான லைவ் அப்டேட்ஸை தெரிந்து கொள்ள
ஆனால், அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக கூறப்பட்டது.
Extremely sorry to hear of the passing of Shri Manohar Parrikar, Chief Minister of Goa, after an illness borne with fortitude and dignity. An epitome of integrity and dedication in public life, his service to the people of Goa and of India will not be forgotten #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) 17 March 2019
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று காலமானதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.