ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில்… விஸ்வாச எம்.எல்.ஏவின் ஆசை

ஜெகன் மோகனின் குடும்பத்தை எந்த ஒரு தீய சக்தியும் நெருங்க கூடாது என்ற நோக்கத்துடன் அவருக்கு கோவில் கட்டுகிறேன் என்று வெங்கட்ராவ் அறிவித்துள்ளார்.

By: Updated: August 6, 2020, 02:25:32 PM

Gopalapuram MLA Talari Venkatrao builds temple for Andhra Pradesh CM Jagan Mohan Reddy : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ கோவில் கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பூமிபூஜை செய்த நிகழ்வு ஆந்திர வட்டாரத்தில் பெரும் ஆச்சிரியத்தை தந்துள்ளது. எப்போதும் திரைப்பட நடிகர்கள் நடிகைகளுக்கு கோவில் கட்டுவார்கள். அல்லது மிகவும் பிடித்த தலைவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு கோவில் அல்லது மணி மண்டபங்கள் கட்டும் நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம்.

மேலும் படிக்க : ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வருக்கு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் தொகுதி எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவ் கோவில் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். கோபாலபுரம் மண்டலம் ராஜம்பாளையத்தில் ஜெகன் மோகனுக்கான கோவிலுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார் வெங்கட்ராவ்.

ஜெகன்மோகனின் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினர் நினைவு கூறும் வகையில் இந்த கோவில் கட்டப்படுகிறது என்றும் மக்களின் நிலையை கண்டு ராஜசேகர ரெட்டியும் ஜெகன் மோகன் ரெட்டியும் யாத்திரை மேற்கொண்டு இந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். அந்த குடும்பத்தை எந்த ஒரு தீய சக்தியும் நெருங்க கூடாது என்ற நோக்கத்துடன் அவருக்கு கோவில் கட்டுகிறேன் என்று வெங்கட்ராவ் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Gopalapuram mla talari venkatrao builds temple for andhra pradesh cm jagan mohan reddy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X