Advertisment

இலங்கை நெருக்கடி; அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு; இந்தியா தலையிட தி.மு.க, அ.தி.மு.க கோரிக்கை

இலங்கை நெருக்கடி தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு; இலங்கை தமிழர்களின் நிலையை சுட்டிக்காட்டி, இந்தியா தலையிட தி.மு.க அ.தி.மு.க கோரிக்கை

author-image
WebDesk
Jul 17, 2022 20:23 IST
இலங்கை நெருக்கடி; அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு; இந்தியா தலையிட தி.மு.க, அ.தி.மு.க கோரிக்கை

Sri Lanka crisis: Centre calls all-party meet on Tuesday; DMK, AIADMK demand India’s intervention: இலங்கை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அண்டை நாடான இலங்கையின் நிலைமை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை செவ்வாய்கிழமை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது, ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை நெருக்கடி குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிப்பார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: துணை குடியரசு தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா; எதிர்கட்சிகள் அறிவிப்பு

இதற்கிடையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக கூட்டப்பட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகமும் (தி.மு.க), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அ.தி.மு.க) இலங்கையில் நிலவும் நெருக்கடியில் இந்தியா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தின.

தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இலங்கைப் பிரச்சினையை, குறிப்பாக அந்நாட்டின் தமிழ் மக்களின் நிலைமையை எழுப்பின.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் டிஆர் பாலு, அ.தி.மு.க தலைவர் தம்பிதுரை ஆகியோர் தங்கள் கட்சிகளின் கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஜூலை 16 தேதியிட்ட அலுவலக குறிப்பை மேற்கோள் காட்டி, ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் விளக்கம், ஜூலை 19 மாலை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதாரக் குழப்பங்களுக்கு மத்தியில், ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும் இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை, இந்திய தூதர் கோபால் பாக்லே, சந்தித்தபோது, ​​இந்த உறுதிமொழியை வழங்கினார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமாவை சபாநாயகர் அபேவர்தன ஏற்றுக்கொண்ட ஒரு நாளின் பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

(PTI இன் உள்ளீடுகளுடன்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Srilanka #India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment