Advertisment

செப். 18-22 நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்; மத்திய அரசு திடீர் அறிவிப்பு

செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாட்டிற்குப் பிறகு 5 நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர்; மத்திய அரசு அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parliament

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு. (கோப்பு படம்)

செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை அரசாங்கம் கூட்டியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

“நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17வது மக்களவையின் 13வது அமர்வு மற்றும் ராஜ்யசபாவின் 261வது அமர்வு) செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து அமர்வுகளைக் கொண்டதாகக் கூட்டப்படுகிறது. அமிர்த காலத்திற்கு மத்தியில் பாராளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் உரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று பிரகலாத் ஜோஷி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஜம்மு காஷ்மீர் அரசியல் : முன்னாள் முதல்வர் மெகபூபாவின் மகள் இல்திஜாவுக்கு புதிய பொறுப்பு 

செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தேசிய தலைநகர் டெல்லியில் ஜி 20 உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்குப் பிறகு நடைபெறும் ஐந்து நாள் அமர்வின் நிகழ்ச்சி நிரல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன, ராஜ்யசபா 25 மசோதாக்களை நிறைவேற்றியது. ஒரு அவையின் ஒப்புதலைப் பெற்ற மசோதாக்களில், முந்தைய அமர்வுகளில் ஒப்புதல் அளித்த சில மசோதாக்களும் அடங்கும்.

காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில், இந்திய தண்டனைச் சட்டம் (IPC), 1860க்கு பதிலாக மூன்று மசோதாக்களை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்; குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (முதலில் 1898 இல் இயற்றப்பட்டது); மற்றும் இந்திய ஆதாரச் சட்டம், 1872. இவை: பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, 2023; பாரதிவ நியாய சனிதா மசோதா, 2023; பாரதிவ சக்ஷ்வா மசோதா, 2023, என மாற்றப்படும்.

மொத்தத்தில், லோக்சபாவின் செயல்திறன் 45% ஆகவும், ராஜ்யசபாவின் செயல்திறன் 63% ஆகவும் இருந்தது. இந்த அமர்வில் பாராளுமன்றம் நிறைவேற்றிய முக்கிய சட்டங்கள்: பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மற்றும் தேசிய தலைநகர் பிரதேச அரசு டெல்லி (திருத்த) மசோதா.

2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மழைக்காலக் கூட்டத்தொடரைப் போலவே, பிரதமர் மோடியும் பா.ஜ.க.,வும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தை தங்கள் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், எதிர்க்கட்சிகளை "அம்பலப்படுத்தவும்" மற்றும் பொதுத் தேர்தலுக்கு வாக்காளர்களை ஆட்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தின. காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் தலைமையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் சுமார் 20 மணி நேரம் நீடித்தது மற்றும் 60 எம்.பி.,க்கள் கலந்துகொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Bjp India Parliament Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment