வெளிநாடுகளில் இருந்து தாயகம் வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் வரும் 8ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர், சுய அறிவிப்பு படிவத்தை ஆன்லைனில் (www.newdelhiairport.in) அனைத்து பயனாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
14 நாட்கள் கட்டாயமாக தனிமைபடுத்துதல் செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும். அதில் 7 நாட்கள் சொந்த செலவில் முகாமிலும், 7 நாடுகளில் வீட்டிலும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி, குடும்ப உறுப்பினர் மரணம் உடல்நலக்குறைவு, 10 வயது வரை உள்ள குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்தப்படுவார்கள்.
இந்த சலுகையை பெறுவதற்கு, கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முடிவை அரசு பரிசீலனை செய்து அறிவிக்கும்.
சொந்த ஊர் திரும்பியதும், ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவை காண்பித்து முகாமில் தனிமைபடுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாம். அந்த பரிசோதனையை, கிளம்புவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் எடுத்து, ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும், அந்த சான்றிதழின் உறுதித்தன்மைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழ் பொய் என கண்டுபிடிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில், சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி
விமானத்தில் ஏறுவதற்கு முன் (Before Boarding)
பயணத்திற்கு முன்னர் டிக்கெட்டுடன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விளக்கும் குறிப்புகள் வழங்கப்படும்.
அனைத்து பயணிகளும், மொபைலில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுரை வழங்கப்படும்.
கப்பல் மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், தெர்மல் ஸ்கிரீனிங் செய்து, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தரைவழியாக பயணம் செய்பவர்களுக்கும் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும். அதில் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, இந்தியாவிற்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
விமான நிலையத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
விமான நிலையத்திலும், விமானத்தில் ஏறும்போதும், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
பயணத்தின் போது (During Travel)
ஆன்லைனில், சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்காதவர்கள், கப்பல், விமானத்தில் அந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
கப்பல் மற்றம் விமானத்தில் பயணத்தின் போது, மாஸ்க்அணிதல், சுற்றுப்புற தூய்மை, உடல் மற்றும் கைகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அதுனை ஊழியர்கள் கண்காணிப்பார்கள்.
பயணத்திற்கு பின் (On Arrival)
வெளியே வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து வர வேண்டும்
விமான நிலையம், துறைமுகங்களில், சுகாதார பணியாளர்கள், தெர்மல் பரிசோதனை மேற்கொள்வார்கள். சுய அறிவிப்பு படிவத்தை சுகாதார பணியாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.
பரிசோதனையில் அறிகுறி காட்டப்படும் நபர்கள் உடனடியாக, முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
முகாமில் தனிமைபடுத்துவதற்கு விலக்கு பெற்றவர்கள், தெர்மல் பரிசோதனைக்கு முன்னர் அதிகாரிகளிடம், விளக்கி, வீடுகளுக்கு செல்வதற்கு முன் அந்த சான்றிதழை மொபைல் மூலம் காட்ட வேண்டும்.
மற்ற பயணிகள், மத்திய/ மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்
முகாம்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள், 7 நாட்கள் தங்கியிருக்கவேண்டும். அவர்களுக்கு ஐசிஎம்ஆர் பரந்துரைப்படி பரிசோதனை செய்யப்படும்.
ஐரோப்பிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் ஆதிக்கம்: புதிய ஆய்வு கூறுவது என்ன?
பரிசோதனையில், கொரோனா உறுதி செய்யப்பட்டால்,
ஒருவர் அறிகுறி இல்லாமலோ/ மிகவும் லேசான பாதிப்புடன் இருந்தால், அவர்கள் வீட்டில் அல்லது கொரோனா மையத்தில் தனிமைபடுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.
லேசான/ ஓரளவுக்கு மோசமான / தீவிரமான பாதிப்பு இருந்தால் அவர்கள் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா இல்லை என்பது உறுதியானால்,
அவர்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
தனிமைபடுத்தப்பட்ட காலத்தில், ஏதேனும் அறிகுறி தென்பட்டால், அவர்கள், மாவட்ட/ மாநில அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்"
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil