ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் : ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 36 போர் விமானங்களை வாங்க, நரேந்திர மோடியின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஃபேல் போர் விமானத்தின் பேர ஒப்பந்தத்தில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சிகள் குற்றச்சாட்டினை முன் வைத்து வந்தன.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, வினித் டண்டா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்யின் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் ஆகியோர் கூட்டாக மனு சமர்பித்தனர்.
இதில் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மற்றும் பிரசாத் பூஷன் ஆகியோர் சமர்பித்த மனுவில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் சமர்பிப்பு
இந்த மனுக்களை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டது தொடர்பான விபரங்கள், நடவடிக்கைகள், மற்றும் போர் விமானங்கள் விலை ஆகியவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.
நேற்று மத்திய அரசு 14 பக்கங்களில் நீதிமன்றங்கள் கேட்ட உரிய ஆவணங்களை மத்திய அரசு வழங்கியது. அந்த அறிக்கையில் கடந்த 2013ம் ஆண்டு பாதுகாப்புத் துறையின் தளவாடங்கள் கொள்முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா இடையே பேச்சு வார்த்தை முடிவடைந்த பின்பு தான் ஆகஸ்ட் 24, 2016ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் குழு ஒப்புதல் அளித்தது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க : ரபேல் ஆவணங்களை 10 நாட்களுக்குள் சமர்பிக்க உத்தரவு