Grand Alliance's PM Candidate : மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் திருஉருவ சிலை திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அதில், கேரளா, ஆந்திரா, புதுவை மாநில முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மற்றும் இன்றைய தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மோடியின் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக முன் மொழிந்தார்.
மேலும் படிக்க : ராகுல் காந்தியை பிரதம வேட்பாளாரக முன் மொழிந்தார் மு.க. ஸ்டாலின்
Grand Alliance's PM Candidate : முக ஸ்டாலினின் கருத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்
முக ஸ்டாலின் கருத்திற்கு மாற்றாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்துகளை முன்வைத்தனர். விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா டுடே கான்க்லேவ் சௌத் 2018 (India Today Conclave South 2018) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சந்திரபாபு நாயுடு.
அப்போது ஸ்டாலின் கூறிய கருத்தைப் பற்றி கேட்ட போது, தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாம் சொல்லக் கூடாது. என்னுடைய நிலையில் தெளிவாக இருக்கின்றேன். தேர்வுகள் முடிந்த பின்பே பிரதமர் யார் என்று கூறுவோம் என்று தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் வேலையில் மிக சிரத்தையுடன் செயல்பட்டு வருகின்றார்.
மேலும் படிக்க : ஸ்டாலின் கருத்திற்கு மறுப்பு கூறிய மம்தா
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் இதர இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டத்து. ஆனால் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.