Advertisment

விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமணம் : மணமகன் பலி... 111 பேருக்கு கொரோனா!

100க்கும் மேற்பட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டதால் அவர்களை தேடுவதில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதில் சுகாதாரத்துறைக்கு சிக்கல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Groom dies due to Coronavirus 2 days after marriage in Patna

Groom dies due to Coronavirus 2 days after marriage in Patna

Groom dies due to Coronavirus 2 days after marriage in Patna, over 100 guests test positive : கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுங்கள் என்று எத்தனை முறை கூறினாலும் இந்த நோய் தாக்கத்தின் தீவிரம் புரியாமல் பலரும் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது என்று தான் கூற வேண்டும். சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் பாட்னாவில் இருந்து தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். ஜூன் 15ம் தேதி அன்று அவருக்கு அவருடைய பாலிகஞ்ச் பகுதியில் திருமணம் நடத்தப்பட்டது. இந்த திருமணத்தில் அரசின் விதிமுறைகளை மீறி 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா தீவிரம்: சென்னையில் இன்று போலீஸ் எஸ்.ஐ., வணிகர் சங்க நிர்வாகி மரணம்

ஏற்கனவே கொரோனா நோய் தொற்று அறிகுறியுடன் வந்த அவர் திருமணம் ஆன இரண்டு நாட்களிலேயே மரணத்தை தழுவினார். இதனை தொடர்ந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கும் தொடர்ந்து உடல் நிலை சரியில்லாத சூழல் உருவானது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தங்களை மருத்துவ ஆய்விற்கு உட்படுத்தினர். இத்திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் 111 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இதில் 80க்கும் மேற்பட்ட உறவினர்களை அறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சுகாதாரத்துறையினர்.

மேலும் படிக்க : ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” – விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி

திருமணங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் விட்ட காரணத்தால் 100க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகனுக்கு கொரோனா வைரஸால் தான் மரணம் ஏற்பட்டதா என்பதை அறிய இயலவில்லை. அவர் இறந்தவுடன் அவர் உடலுக்கு சிதை மூட்டப்பட்டதால் இந்த ஆய்வினை சுகாதாரத்துறையால் மேற்கொள்ள இயலவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment