2012 சட்டமன்றத் தேர்தலில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்த இரண்டு வேட்பாளர்களில் இருந்து, இந்த முறை ரூ.100 கோடிக்கு மேலான கிளப்பில் குறைந்தது ஏழு வேட்பாளர்கள் உள்ளனர், அவர்களில் ஐந்து பேர் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர்கள். 2017ஆம் ஆண்டிலும் ஏழு பில்லியனர்கள் போட்டியிட்டனர்.
காந்திநகரின் மான்சாவில், 2017ல் காங்கிரஸ் 500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பிரமாணப் பத்திரத்தில் மொத்தம் ரூ.661.28 கோடி மதிப்பிலான அசையா மற்றும் அசையும் சொத்துகளைப் பட்டியலிட்டுள்ள ஜெயந்தி படேல் (64) இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்குகிறார். இதில் அவரது மனைவி ஆனந்திபென் ஜெயந்திபாய் படேலின் சொத்துக்கள் மற்றும் இந்து ஒருங்கிணைந்த குடும்ப (HUF) கணக்கின் கீழ் உள்ள சொத்துகளும் அடங்கும். காட்வா படிதார் சாதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலதிபர் ஜெயந்தி ரூ.147 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளது என்றும், மீதமுள்ள ரூ.514 கோடிகளை அசையாச் சொத்துகள் என்றும் அறிவித்துள்ளார். ரூ.233 கோடி மதிப்பிலான கடன்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் சொத்து உள்ளது.
இதையும் படியுங்கள்: ஒற்றுமை சிலையின் பிரகாசத்தின் கீழ், பா.ஜ.க.,வுக்கு சில இருண்ட புள்ளிகள்
2017-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சந்தன்ஜி தாக்கூர் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பதான் மாவட்டத்தில் உள்ள சித்பூரில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த பல்வந்த்சிங் ராஜ்புத் (61), தனது சொத்து மதிப்பு ரூ.367.89 கோடி என்று தெரிவித்துள்ளார். கோகுல் குழுமத்தின் உரிமையாளரான ராஜ்புத், ரூ. 266 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், இதில் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நிலங்கள், தற்போது தோராயமாக ரூ. 13.81 கோடி மதிப்புள்ள அசாமின் குவஹாத்தியில் உள்ள ஒரு வணிக கட்டிடம், குஜராத்தில் உள்ள வணிக இடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மனைகள் சொத்துக்களாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ.101 கோடி அசையா சொத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 தேர்தலில் பணக்கார வேட்பாளராக இருந்த ராஜ்புத் (அப்போது ரூ. 268 கோடி மதிப்பிலான சொத்து என்று அறிவித்தார்), இடைப்பட்ட 10 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அவர் 2017 இல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.,வுக்கு மாறினார், மேலும் காங்கிரஸின் அகமது படேலை எதிர்த்து ராஜ்யசபா தொகுதிக்கு போட்டியிட்டார், இருப்பினும் அகமது படேல் அந்த இடத்தை வென்றார். இந்த வெற்றியை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராஜ்புத் வழக்குத் தொடர்ந்தார், அகமது படேலின் மறைவுக்குப் பிறகும் அந்த வழக்கு இன்னும் முடிவடையவில்லை.
2017-ல் காங்கிரஸின் அல்பேஷ் தாக்கூர் வெற்றி பெற்ற படானில் உள்ள மற்றொரு தொகுதியான ரதன்பூரில் (தாகூர் 2019-ல் பா.ஜ.க.,வில் சேர்ந்தார், காந்திநகர் தெற்கு தொகுதியில் இந்த ஆண்டு போட்டியிடுகிறார்), 140 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடத் தொழிலதிபர் ரகுநாத் தேசாய் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவரது வாக்குமூலத்தில் ரூ.6.16 கோடி அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.134.44 கோடி அசையா சொத்துக்கள் உள்ளன. இதில் காந்திநகர், படான், மெஹ்சானா மற்றும் அகமதாபாத்தில் உள்ள பல விவசாய நிலங்கள், காந்திநகர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள விவசாயம் அல்லாத நிலங்கள், அகமதாபாத்தில் உள்ள வணிக மனைகள் மற்றும் அகமதாபாத் மற்றும் படானில் குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கும். 3.25 கோடி மதிப்புள்ள கடன்களையும் அவர் அறிவித்துள்ளார்.
ரகுநாத் தேசாய் 2017 இல் சனாஸ்மா தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார். அப்போது அவர் 108 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அறிவித்தார்.
ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ்கோட் தெற்கிலிருந்து பா.ஜ.க.,வின் ரமேஷ் திலாலா மற்றும் ராஜ்கோட் கிழக்கில் இருந்து காங்கிரஸின் இந்திரனில் ராஜ்யகுரு ஆகிய இரு கோடீஸ்வர வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
57 வயதான ரமேஷ் திலாலா, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர் மற்றும் தொழிலதிபர் ஆவார். அவர் லீவா படேல் சாதியின் சக்திவாய்ந்த ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார், மேலும் அவரது மனைவியின் சொத்துக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கணக்கின் கீழ் ரூ.16.35 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அறிவித்துள்ளார். ரூ.156.42 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்கள் இருப்பதாகவும் அறிவித்து, மொத்தம் ரூ.172 கோடியாக தெரிவித்துள்ளார். அவரது அசையா சொத்துக்களில் சூரத் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள விவசாய நிலங்கள், ராஜ்கோட்டில் உள்ள விவசாயம் அல்லாத நிலங்கள் ஆகியவை அடங்கும்.
காங்கிரஸின் 56 வயதான இந்திராணி ராஜ்குரு, ரூ.66.85 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளையும், ரூ.92.99 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துகளையும், மொத்தம் கிட்டத்தட்ட ரூ.160 கோடி என அறிவித்துள்ளார். அவருக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான அசையும் சொத்துக்களில் பி.எம்.டபிள்யூ கார் மற்றும் பி.எம்.டபிள்யூ பைக், ஆடி கார், ஜெனரிக் ஜீப், டிராக்டர்கள், லேண்ட் ரோவர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் உட்பட 16 வாகனங்கள் அடங்கும். இவர் 2017ல் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியிடம் 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2017 தேர்தலில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.க.,வின் துவாரகா வேட்பாளர் பபுபா மானெக், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் ரூ.115 கோடி என தெரிவித்துள்ளார். இது 2017-ல் அவர் தெரிவித்த ரூ.88.42 கோடியில் இருந்து 30 சதவீதம் அதிகமாகும். 2012 ஆம் ஆண்டில், அவர் ரூ. 31.66 கோடி மதிப்புள்ள சொத்துகளை அறிவித்தார், இது 10 ஆண்டுகளில் அவர் தனது சொத்து மதிப்பை கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்தியுள்ளதை காட்டுகிறது.
2017-ம் ஆண்டு காங்கிரஸ் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜூனாகத்தில் உள்ள மானவதார் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் ஜவஹர் சாவ்தா (58), ரூ.25.49 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் மற்றும் ரூ.104.66 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.130 கோடியாக அறிவித்துள்ளார். அவரது அசையும் சொத்துகளில் ஐந்து டிராக்டர்கள் மற்றும் 85,000 ரூபாய் மதிப்புள்ள ரேடோ வாட்ச் ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் அசையா சொத்துகளில் விவசாய நிலங்கள், வணிக மற்றும் குடியிருப்பு இடங்கள் அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.