COVID - 19: அகமதாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. ஏனெனில் அவர், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் மாநில அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா ஆகியோரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கயாசுதீன் ஷேக் மற்றும் ஷைலேஷ் பர்மர் ஆகியோருடன் இணைந்து அந்த எம்.எல்.ஏ சந்தித்திருக்கிறார். இதனால் அவரது தவறுக்கு குஜராத் தலைமை செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Corona Updates Live : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11,439 ஆக அதிகரிப்பு
காந்திநகரில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அகமதாபாத்தின் லாக் டவுன் நிலைமை குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு நடந்தது. எம்.எல்.ஏ. இம்ரான் கெடவாலா, வால்ட் நகரத்தில் உள்ள ஜமல்பூர்-காடியா தொகுதியின் பிரதிநிதியாவார்.
கெடவாலா தனது ரத்த மாதிரியை சோதனைக்கு வழங்கிய பின்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று முதல்வரின் அலுவலகம் (சிஎம்ஓ) குற்றம் சாட்டியது. முதல்வரின் செயலாளரான அஸ்வானி குமார், “வால் நகரத்தில் கொரோனா தொடர்பான பல கேஸ்கள் இருந்ததால், முதல்வர் ரூபானி முழு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் எம்.எல்.ஏ.க்களை அழைத்திருந்தார். சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு, காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளைத் தொடர்ந்து , கெடவாலாவின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. முடிவுகள் வரும் வரை அவர் மற்றவர்களை சந்திப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் மூலம், அவர் தவறு செய்துவிட்டார்” என்றார்.
ரூபானியிடமிருந்து 15-20 அடி தூரத்தில் கெடவாலா அமர்ந்திருந்ததாகவும், புதன்கிழமை காலை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெறப்படும் என்றும், அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூபானியும் மற்றவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்களா என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அஸ்வானி குமாரிடம் கேட்டது. அதற்கு அவர் குறுஞ்செய்தியில் "அப்படி நடந்தால் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்" என்றார்.
கெடவாலா முந்தைய நாள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், "வால்ட் சிட்டி பகுதியில் சோதனையை அதிகரிக்க சொல்ல நாங்கள் முதல்வரை (மற்றும் பிறரை) சந்தித்தோம். அங்கு அதிகமாக பரிசோதிக்க வேண்டும், ஏனென்றால் அந்த பகுதி மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டது" என்று தெரிவித்திருந்தார்.
கொரோனா கோரத்திலும் ஜோராக நடக்கும் குழந்தை திருமணங்கள் – அதிர்ச்சித்தகவல்
துணை நகராட்சி ஆணையர் முகேஷ் காத்வி, கெடவாலா நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்டார் என்பதை உறுதிப்படுத்தினார், "அவர் எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது பற்றி, எனக்குத் தெரியவில்லை" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.