Gurgaon Muslim Family Attack : ஹோலி விடுமுறை நாளை தங்களின் உறவினர்களோடு கொண்டாட கூர்கானில் இருக்கும் கிராமத்திற்கு வந்துள்ளனர் முகமது சாஜித் என்பவரின் உறவினர்கள். அவர்களில் இரண்டு இளைஞர்கள் அருகில் இருக்கும் இடத்தில் கிரிக்கெட் விளையாட, மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், இங்கெல்லாம் விளையாடக் கூடாது. விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு போங்கள் என்று கூறியுள்ளார்.
தில்சாத் என்ற இளைஞனை, மோட்டர் சைக்கிளில் வந்த ஒருவர் அறைந்துவிட, விளையாட்டு விபரீதமானது. பைக்கில் சென்ற இருவர், தங்களுடைய நண்பர்கள் 15 பேரை அழைத்து வந்து, முகமது சாஜித் வீட்டில் உள்ள அனைவரையும் கத்தி, கட்டைகள் வைத்து அடித்ததோடு அவர்கள் வீட்டில் இருந்ததை திருடியும் உள்ளனர். இவை அனைத்தையும் அக்குடும்பத்தில் உள்ள, தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாடிகளில் ஒதுங்கி வீடியோவாக ரெக்கார்ட் செய்து வைத்திருந்தனர்.
தாக்குதலில் தில்சாத்திற்கு இடது கை எழும்பு முறிந்துவிட்டது. எங்களால் அவர்களை எதிர்த்து சண்டையிட இயலாது. அவர்கள் மிகவூம் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். காலையில் அழுது கொண்டே எழுந்த என் மகன், மீண்டும் அவர்கள் வந்து நம்மை தாக்குவார்களா என்று கேள்வி எழுப்புகிறான். நான் அவனை எப்படி தேற்றுவேன் என்று கேள்வி எழுப்புகிறார் தில்சாத்.
இந்த வெறித்தனமான தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ள்ளனர்.
வெளியேற விரும்புகின்றோம்
இது தொடர்பாக சாஜித் பேசுகையில் உத்திரப்பிரதேசத்தில் இருந்து 15 வருடங்களுக்கு முன்பு நான் இங்கு வந்தேன். இது நாள் வரை இப்படி ஒரு தாக்குதல் நடந்தது இல்லை. எங்களின் குடும்ப நலனுக்காக நான் மீண்டும் என் சொந்த கிராமத்திற்கு போக வேண்டும். அல்லது டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று வருந்தினார். மேலும் என்னுடைய உழைப்பு மற்றும் சேமிப்பு என அனைத்தையும் செலவிட்டு 20 லட்சத்தில் இந்த வீட்டைக் கட்டினேன்.
2016 வரை நாங்கள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். எங்களின் சுற்றத்தாரால் எங்களுக்கு ஒரு போதும் இப்படி பிரச்சனை வந்ததில்லை. நாங்கள் இங்கிருந்து தற்போது வெளியேறுவதே நலம். எங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்று வருந்தினார்.
காவல்துறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. துமாஷ்பூர் கவுன்சிலர் இது குறித்து பேசுகையில், இது மிகவும் அமைதியான ஏரியா. இனிமேல் இங்கு இதுபோன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : சிவன் ஆலயத்தை நிர்வகிக்கும் இஸ்லாமிய குடும்பம்! ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு இலக்கணம்!