ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்தது - வாரணாசி நீதிமன்றம்

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்தது; வாரணாசி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்தது; வாரணாசி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

author-image
WebDesk
New Update
ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்தது - வாரணாசி நீதிமன்றம்

Apurva Vishwanath

ஞானவாபி மசூதி வழக்கு தீர்ப்பு: ஞானவாபி மசூதியின் உரிமை மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலத்தை கேள்விக்குள்ளாக்கிய சிவில் வழக்குகளுக்கு எதிரான அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டியின் சவாலை வாரணாசி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள மா சிருங்கர் கௌரியை வழிபட உரிமை கோரி ஐந்து இந்து பெண்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படியுங்கள்: பாரத் ஜோடோ யாத்திரை.. ராகுல் தமிழக பயணம் நிறைவு.. தலைவர்கள் கருத்து

மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ்-ஆல் சாவல் தள்ளுபடி செய்யப்பட்டதால், சிவில் வழக்குகள் விரிவாக விசாரிக்கப்பட்டு, சாட்சியங்கள் ஆய்வு செய்யப்படும்.

Advertisment
Advertisements

மே 20 அன்று, உச்ச நீதிமன்றம், "சிவில் வழக்கில் உள்ள சிக்கல்களின் சிக்கலான தன்மையை" அடிக்கோடிட்டு, வாரணாசி சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) முன் நிலுவையில் இருந்த ஞானவாபி சர்ச்சை வழக்கை மாவட்ட நீதிபதிக்கு மாற்றியது.

கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக இந்து தரப்பு கூறினாலும், முஸ்லிம் தரப்பு மசூதி வக்ஃப் வளாகத்தில் கட்டப்பட்டது என்றும், வழிபாட்டு தலங்கள் சட்டம் அதன் தன்மையை மாற்ற தடை விதித்துள்ளது என்றும் கூறியது.

இந்த மனுக்களை நீதிபதி விஸ்வேஷா ஜூன் மாதம் விசாரிக்கத் தொடங்கினார். இந்த நிகழ்வுகளை காண ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஜூலை மாதம், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு முன், சிவில் வழக்குகளுக்கு மசூதி குழுவின் ஆட்சேபனைகள் குறித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறியது.

நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், சூர்ய காந்த், பி.எஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அனைத்து பிரச்சனைகளும் முதலில் மாவட்ட நீதிமன்றத்தில் வாதிடப்பட வேண்டும் என்று பெஞ்ச் கூறியது. ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஞானவாபி வளாகத்தின் ஆய்வுக்கு மசூதி குழு எதிர் மனு தாக்கல் செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: