scorecardresearch

கைகள் மாற்று அறுவை சிகிச்சையில் ஆணின் கைகளை பெற்ற பெண்… நிறமும் மாறிய அதிசயம்!

13 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 20 மருத்துவர்கள், 16 பேர் கொண்ட மயக்க மருந்து நிபுணர்கள் குழு வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை முடித்தனர்.

hand transplant operation, hand transplant, mumbai girl hand transplant
hand transplant operation, hand transplant, mumbai girl hand transplant

Tabassum Barnagarwala : “Sometimes good things fall apart so that better things can fall together” என்ற வாக்கியங்களைத் தான் முதலில் எழுதினார் ஷ்ரேயா சித்தனகவுடர். தனது கைகளுக்கான மாற்று அறுவை சிகிச்சை முடிந்த ஒரு ஆண்டு நிறைவுற்ற போது, முதன்முதலாக் அவர் இதைத்தான் எழுதினார்.

அவருடைய கையெழுத்துகள் முன்பு இருந்ததைப் போல் அவ்வாறே தான் இருக்கிறது. ஆனாலும் ஷ்ரேயாவின் கை நிறம் தான் மருத்துவர்களை மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. 2017ம் ஆண்டு மரணமுற்ற கேரள இளைஞரின் கைகள் தான் இவருக்கு பொருத்தப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய கைகளின் நிறம், ஷ்ரேயாவின் நிறத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொண்டது.

இந்த மாற்றம் எப்படி ஆனது என்று எனக்கு தெரியவில்லை. மாற்றுசிகிச்சை முடிந்த போது கைகளின் நிறம் மிகவும் கறுப்பாக இருந்தது. ஆனால் தற்போது என்னுடைய உடல் நிறத்திற்கு ஏற்றவாறு கைகளின் நிறமும் மாறியுள்ளாது என்று கூறுகிறார் 21 வயது மிக்க ஷ்ரேயா. ஆசியாவில் நடைபெற்ற முதல் inter-gender hand transplant இதுவாகும்.

கேரளா, கொச்சியின் அம்ரிதா மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை குறித்து கேட்ட போது, முதலில் பெண்களின் ஹார்மோன்கள் ஆண்களின் கைகளை ஏற்றுக் கொள்ளுமா என்ற எண்ணம் தான் எங்களுக்கு மேலோங்கியிருந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷ்ரேயா சித்தனகவுடர்

hand transplant operation, hand transplant, mumbai girl hand transplant

 

உலக அளவில் இதுவரை 200 கைகள் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதுவரை கைகளின் நிறங்கள் மற்றும் ஷேப் மாறியதற்கான ஆதரங்களே இல்லை. இது போன்று நிகழ்வது இதுவே முதல்முறை. அறிவியல் துறைசார் இதழ் ஒன்றில் இரண்டு பேரின் கேஸ்களை பதிப்பிட உள்ளோம். அது அவ்வளவு எளிதானதல்ல.

ஷ்ரேயாவின் கைகளில் நிறம் மாறிவதை நாங்கள் ரெக்கார்ட் செய்து வருகிற்னோம். இதனை முழுமையாக அறிந்து கொள்ள எங்களுக்கு மேலும் ஒரு ஆதாரம் தேவை. ஆப்கான் ராணுவ வீரர் ஒருவருக்கு நாங்கள் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். அவரும் இப்படி நிறம் மாறுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவிட்டார். அதனால் எங்களால் அந்த கேஸினை முழுமையாக ரெக்கார்ட் செய்ய முடியவில்லை என்று கூறுகிறார் மருத்துவர் சுப்ரமணிய ஐயர். அந்த இன்ஸ்டிட்யூட்டில் ப்ளாஸ்டிக் சர்ஜரித்துறை தலைவராக இவர் உள்ளார்.

ஷ்ரேயாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மோஹித் ஷர்மா பேசுகையில் “இரண்டு பாலினத்தவர்களுக்கு இடையே செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்பாக வெகு சில ஆராய்ச்சிகளே நடைபெற்றுள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

மேற்கு பகுதியில் ஒரு பெண்ணின் கைகளை ஆணுக்கு பொருத்தியும் உள்ளனர். ஆனால் அதற்கு பின்பு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவருடத்திற்குள் மாற்றப்பட்ட கைகளுக்கும், கைகளை பொருத்திக் கொண்ட உடலுக்கும் மத்தியில் lymphatic channel முழுமையாக திறந்துவிடும். இதன் மூலம் ஃப்ளூயிட்களின் ஓட்டம் சீராக நடைபெற துவங்கிவிடும். மெலானினை உற்பத்தி செய்யும் செல்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் அறிவித்தார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புனேவில் இருந்து கர்நாடகாவின் மணிப்பால் கல்வி நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்த போது பேருந்து விபத்தில் சிக்கி இரண்டு கைகளையும் அவர் இழந்தார். 2017ம் ஆண்டு கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக அம்ரிதா மருத்துவமனையில் பதிவு செய்து கொண்டார். ஆசியாவில் அதிக அளவில் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் ஒரு மிகப்பெரிய மருத்துவ அமைப்பாக இந்த மருத்துவமனை இருக்கிறது . ஆப்கான், மலேசியா மற்றும் வங்கதேசத்தில் இருந்தும் கூட வந்து இங்கே அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

கைகளுக்கு டோனர்கள் கிடைப்பது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கைகளுக்கு காத்திருந்த ஆப்கானியர் ஒருவரை அந்த மருத்துவமனையில் சந்தித்தேன் என்று நினைவு கூறுகிறார் ஷ்ரேயா.

கைகளை டொனேட் செய்வதும் மிகவும் அரிதான செயல் தான். கொ-ஆர்டினேட்டர் எங்களிடம், கைகல் கிடைக்க சில மாதங்களுக்கு மேலும் கூட ஆகலாம் என்று கூறினார். நாங்கள் எங்களுடைய ஹோட்டலில் இருந்து நம்பிக்கை ஏதுமின்றி வெளியேறிய போது அவசர அவசரமாக எங்களை மருத்துவமனைக்கு வர சொன்னார்கள். அங்கே எனக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எர்ணாக்குளம் ராஜகிரி கல்லூரியை சேர்ந்த பி.காம் மாணவர் சச்சின், சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவருடைய கைகளை டொனோட் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்டர். இருவரின் இரத்தமும் ஒத்துப்போகவே சச்சினின் கைகள் ஷ்ரேயாவிற்கு ஆகஸ்ட் 9, 2017ம் ஆண்டு பொருத்தப்பட்டது. 13 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 20 மருத்துவர்கள், 16 பேர் கொண்ட மயக்க மருந்து நிபுணர்கள் குழு வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை முடித்தனர்.

முதலில் எலும்புகள் இணைக்கப்பட்டது. பின்னர் நரம்புகள் இணைக்கப்பட்டது. பின்னர் இரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்டது. பின்னர் சதைகள் இணைக்கப்பட்டது. இறுதியாக தோல் பரப்பு தைக்கப்பட்டது.  6 மாதங்களுக்கும் மேலாக கொச்சியிலேயே தங்கி பிசியோதெரப்பி மேற்கொண்டார் ஷ்ரேயா. ஆரம்பத்தில் கைகள் மிகவும் அதிக எடை கொண்டதாகவும், பெரிதாகவும் இருந்தது. நரம்புகள் முழுமையாக செயல்படத்துவங்க அதிக நாட்கள் எடுத்து கொண்டது என்று கூறுகிறார் அவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

ஷ்ரேயாவின் கைகளில் தெரிந்த முதல் மாற்றம் என்பது அவருடைய கைகளின் எடை குறைந்தது தான். அவருடைய மேற்கை எலும்புகளுக்கு ஏற்றவகையில், அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, முன்னங்கைகள் அவருடைய எடைக்கு ஏற்றவகையில் மாறத்துவங்கியது.  கடந்த 3-4 மாதங்களில் ஷ்ரேயாவின் தாய் சுமா அவருடைய விரல்கள் மெலிதாவதையும், நீளமாக வளர்வதையும் அவர் கவனித்து வந்துள்ளார். இது மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்கிறார் அவர்.

சுப்பிரமணி அய்யர் கூறுகையில் “இது போன்ற மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது எங்களின் முதல் ஆண்-பெண் கைகள் மாற்று அறுவை சிகிச்சை ஆகும். பெண்களின் உடல் ஆண்களின் உடல்களில் இருந்து வித்தியாசப்பட்டவை. பெண்களின் ஹார்மோன்களால் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று நினைத்தோம் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஷ்ரேயாவிற்கு இன்ஃபெக்சன் ஏற்பட்டதால் 12 கிலோ வரை எடை குறைந்தார். அதுவே இவருடைய கைகளின் எடை குறைந்ததிற்கு காரணம் என்று கருதிகிறார்கள். ஷ்ரேயாவின் கைகள் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இந்த கைகளையும் அலங்கரிக்கின்றார். நெய்ல்பாலீஷ் அடிப்பதில் இருந்து ஸ்கின் டோன் வரை எல்லாம் மாறியுள்ளது. எஞ்சினியரிங்க் படிப்பினை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவர் பி.ஏ. எக்கானாமிக்ஸ் படித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற செமஸ்டரில் அவருடைய சொந்த கைகளாலே தேர்வு எழுதினார்.

மேலும் படிக்க : UGC சிறப்பு அங்கீகாரம் : முக்கிய தகுதி வரம்பை எட்டாத வேலூர் VIT…

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Hand transplant operation 21 yr old pune student and the case of her changing hands